சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ளது குமரகிரிபேட்டை. இங்கு, ஒரு பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியானது, அம்மாபேட்டை, குமரகிரிபேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலேயே, இதுதான் மிகப்பெரிய ஏரி. இந்த ஏரியினால், பல ஊர்களின் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கலாம். ஆனால், தற்போது இந்த ஏரியில் ஆகாய தாமரை செடிகள் படர்ந்துள்ளன. இதனால் இந்த ஏரியில் உள்ள நீரை பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது. மேலும், இந்த ஏரியை சுற்றி, குழந்தைகள் விளையாடுவதற்காகவும், பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்வதற்காக, நடை மேடையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஏரியை, தூர்வாரினால், காண்போரின் மனதை கவர்வது மட்டுமல்லாமல், இங்கு வருபவர்களின் மன அழுத்தத்தையும் குறைக்கும். எனவே, மாநகராட்சி நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு, கூடிய விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
