Breaking News
Home / இந்தியா / ஒருங்கிணைந்து செயல்பட ஐ.நா., சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.
MyHoster

ஒருங்கிணைந்து செயல்பட ஐ.நா., சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.

ஒருங்கிணைந்து செயல்பட ஐ.நா., சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.

நியூயார்க் : ‘கொரோனா வைரசை தோற்கடிக்க சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என ஐக்கிய நாடுகள் சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உலகம் முழுதும் பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார பாதிப்புகளையும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. இதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஐ.நா. பொதுச் சபைகூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. அப்போது இந்தியா உட்பட 188 நாடுகள் இணைந்து ‘கொரோனா வைரசை ஒழிக்க சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்’ என்ற தலைப்பிலான தீர்மானத்தைதாக்கல் செய்தன.இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.மனித குலத்துக்கு மிகப் பெரிய சவாலாகவும் பாதுகாப்புக்கு ஆபத்தாகவும் விளங்கும் இந்த வைரஸ் அனைவருக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.இதற்கு முன் இந்த உலகம் சந்தித்திராத வகையில் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை இந்த வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் சீர்குலைந்துள்ளது.எனவே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சர்வதேசநாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; இந்த செயல்பாடு மிகவும்தீவிரமாக இருக்கவேண்டும்.

தகவல்கள் மருத்துவவசதிகளை பகிர்ந்து கொள்வது உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள வழிகாட்டும் குறிப்புகளை பின்பற்றுவது போன்றவற்றில் ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்.இந்த நெருக்கடியான நேரத்தில் மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். இன ரீதியாகபாகுபாடு காட்டும் நடவடிக்கை கூடாது. இவ்வாறு அந்ததீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.
இந்தியாவுக்கு ரூ.7,600 கோடி உலக வங்கி தாராளம்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக உலக வங்கி சார்பில் இந்தியாவுக்கு 7,600 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிதல் பரிசோதனை செய்தல் நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல் ஆய்வகம் அமைத்தல் மருத்துவ கருவிகள் வாங்குதல் சிறப்பு வார்டுகள் அமைத்தல் ஆகியவற்றுக்காக இந்த நிதியை மத்திய அரசு பயன்படுத்த உள்ளது.இதுதவிர பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒட்டுமொத்தமாக 6,840 கோடி ரூபாயை உலக வங்கி வழங்கியுள்ளது.

Bala Trust

About Admin

Check Also

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வி.பி.ஆர் செல்வகுமார் நீர்,மோர் வழங்கினார்.

முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ ஆணைக்கிணங்க, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES