Thursday , February 22 2024
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் TNRERA AGENTS MSTAR RERA AGENTS WELFARE ASSOCIATION பொதுக்குழு கூட்டம்
MyHoster

மதுரையில் TNRERA AGENTS MSTAR RERA AGENTS WELFARE ASSOCIATION பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்த (TNRERA AGENTS MSTAR RERA AGENTS WELFARE ASSOCIATION- பொதுக்குழு கூட்டம் மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தோடு, ரியல் எஸ்டேட் முகவர்கள் சங்கத்தின் தலைவர் காரைக்காலை சேர்ந்த டாக்டர் எல்.எஸ்.பி சோழசிங்கராயர் தலைமையில் நடைபெற்றது.

சங்கத்தின் செயலாளர் விருதுநகர் காளீஸ்வரி, பொருளாளர் தேனி சீனிவாசன், துணைத்தலைவர்கள் திருச்சி சண்முகம், காரைக்குடி அலிஅக்பர், திருநெல்வேலி அப்துல்அஜீஸ், இணை செயலாளர்கள் மதுரை கண்ணன் பாபு, பரமக்குடி சரவணன், சென்னை சாதிக்பாஷா, துணை பொருளாளர் பிரபு மற்றும் ஒருங்கிணைப்பாளர் தஞ்சாவூர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில TNRERA பதிவு பெற்ற ரியல் எஸ்டேட் முகவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சங்கத்தின் தலைவர் டாக்டர் எல்.எஸ்.பி சோழசிங்கராயர் பேசுகையில்,

தமிழக அரசு ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சிக்காகவும், முகவர் நலன்களுக்காகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து வந்தாலும், வாடிக்கையாளருக்கும். முகவர்களுக்கும் போதுமான தகவல்கள் கிடைக்கப் பெருவதில்லை. தொழில் விழிப்புணர்வுக்காக எங்கள் அமைப்பு தமிழ்நாட்டிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து ரியல் எஸ்டேட் முகவர்களையும் எங்கள் அமைப்பில் சேர்த்து வருகின்றோம்.

இதுவரை சுமார் 600 TNRERA AGENTS இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

முக்கிய தீர்மானமாக ரியல் எஸ்டேட் முகவர்கள் தனி மனிதராலோ, நிறுவனங்களாலோ ரியல் எஸ்டேட் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் இந்த சங்கத்தில் முறையிடும் பட்சத்தில் தீர்வு காண முயற்சிகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
என பேசினார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் தமிழ்நாடு மாநில தலைவராக பிச்சைவேல் நியமனம்..!

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பு என்பது இந்தியா முழுவதும் செயல்பட்டு பல்வேறு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES