Thursday , February 22 2024
Breaking News
Home / செய்திகள் / பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளை அலுவலகத்தில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் பிறந்த நாள் விழா..!
MyHoster

பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளை அலுவலகத்தில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் பிறந்த நாள் விழா..!

பிரியங்கா காந்தி பிறந்த நாள் மற்றும் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் எம்.பி ஆகியோர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள பெருந்தலைவர் நடிகர்திலகம், அறக்கட்டளை அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேட்டி,சட்டை பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக அருள்மிகு ஶ்ரீ மகா காளியம்மன் கோவிலில் விஷேச பூஜை, சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் அறக்கட்டளை அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் நாஞ்சில்பால் ஜோசப் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.மீர்பாஷா, பஞ்சாயத்துராஜ் மாவட்ட தலைவர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தொழிற்சங்கம் பாலாஜி,மாரிக்கனி பாலு என்ற சுந்தர மகாலிங்கம்,கே.ஆர் சுரேஷ் பாபு, மற்றும் வார்டு தலைவர்கள் கண்ணன், பாலமுருகன், பவர்சிங், ராஜராஜசோழன், கணேசன், மாவட்ட பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், மற்றும் மாநில பொதுச் செயலாளர் மூவேந்திரன், எம்.போஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் தமிழ்நாடு மாநில தலைவராக பிச்சைவேல் நியமனம்..!

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பு என்பது இந்தியா முழுவதும் செயல்பட்டு பல்வேறு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES