
மதுரை பழங்காநத்தத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பாக நாளை திங்கட்கிழமை மாபெரும் பெருந்திரள் முறையீடு கோரிக்கை போராட்டம். ஆ.ம.ஆசிரியதேவன்
அறிவிப்பு
மதுரை,செப்.24-
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் நாளை திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள மாநிலம் தழுவிய மாபெரும் பெருந்திரள் முறையீடு கோரிக்கை போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து
டாக்பியா மதுரை மாவட்ட கௌரவ செயலாளர் ஆ.ம.ஆசிரியதேவன் கூறுகையில் :-
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் மதுரை மாவட்டம் சார்பாக மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே உள்ள மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நாளை 25.09.2023, திங்கள்கிழமை, காலை 11.00 மணியளவில் மாபெரும் பெருந்திரள் முறையீடு கோரிக்கை போராட்டம் நடைபெற உள்ளது.
எதற்காக இந்த போராட்டம் என்றால்,தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில், சங்கங்கள் அனைத்தையும் பெரும் நட்டத்திற்கு எடுத்துச் செல்லும் MSC/AIF திட்டத்தின்கீழ் அங்கத்தினர்களுக்கு பயணளிக்காத இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் வாங்கிட வேண்டும் என கட்டாய நெருக்கடி தரும் அரசு மற்றும் கூட்டுறவு துறை நடவடிக்கையை கண்டித்தும், கூட்டுறவு சங்கங்களின் இந்த அசாதாரண சூழ்நிலையை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறியும் வண்ணம் அவர்களது கவனத்தை ஈர்ப்பதற்காக பழங்காநத்தம் மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நாளை 25.09.2023 அன்று நடைபெறும் மாபெரும் பெருந்திரள் முறையீடு கோரிக்கை போராட்டத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர்.என தெரிவித்தார்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்