Sunday , December 3 2023
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா
MyHoster

மதுரையில் அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை சார்பாக மதுரை தீக்கதிர் எதிர்ப்புறம் திருவள்ளுவர் நகரில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை மதுரை ஆதீனம் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்விற்கு அகில பாரத இந்து மகா சபா அர்ச்சகர் பேரவை மதுரை மாவட்ட தலைவரும், மாநில செயற்குழு உறுப்பினருமான பூசாரி தெய்வேந்திரன் தலைமை வகித்தார்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக அகில பாரத இந்து மகா சபா மாநில இளைஞரணி செயலாளர் எம்.டி ராஜா கலந்து கொண்டு சிறப்பித்தார்.

திருவள்ளுவர் நகரில் இருந்து விநாயகர் சிலை மாசி வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது.

இதில் அர்ச்சகர் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் ராமர், முத்துக்குமார், நீதிராஜன், சங்குமணி, முத்தையா, அஜித்குமார் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரையில் வள்ளல் பாண்டித்துரை தேவரின் சிலைக்கு முக்குலத்தோர் எழுச்சி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை

மதுரையில் தமிழ்ச்சங்கம் நிறுவிய வள்ளல் பொன்.பாண்டித்துரை தேவரின் 112 வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரையில் உள்ள அவரது திருவுருவச் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES