
மதுரையில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி
மதுரை ஆரப்பாளையம் பகுதியில்
உலக தரம் வாய்ந்த டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் அண்ணா ஆப்டோமெட்ரி கல்லுரி இணைந்து நடத்திய தேசிய கண்தான
விழிப்புணர்வு பேரணியானது மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி பைபாஸ் சாலை வரை நடைபெற்றது.
இவ்விழாவில் தலைமை விருந்தினராக டாக்டர். பத்திரிநாராயணன் தலைமை மருத்துவ அதிகாரி அவர்கள்
பங்குபெற்று பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அண்ணா காலேஜ் நிறுவனர் அண்ணாத்துரை, மண்டல பொது மேலாளர் ஸ்ரீனிவாசன், கிளை மேலாளர் இராஜபாண்டியன், டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அண்ணா ஆப்டோ மெட்ரிக் கல்லுரி மாணவர்கள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணியை சிறப்பித்தனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்