Monday , May 27 2024
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் வேத்விக் மீடியா நிறுவனம் சார்பாக மருந்து பொருட்கள் கண்காட்சி.100 நிறுவனங்கள் பங்கேற்பு.!
MyHoster

மதுரையில் வேத்விக் மீடியா நிறுவனம் சார்பாக மருந்து பொருட்கள் கண்காட்சி.100 நிறுவனங்கள் பங்கேற்பு.!

மதுரை தமுக்கம் மைதானத்தில் வேத் விக் மீடியா நிறுவனம் சார்பில் அகில இந்திய மருந்து பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சியை வேத்விக மீடியா நிறுவன இயக்குனர்கள் சிவன் சர்மா, பண்டாரி, அகில இந்திய முற்போக்கு மருந்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு சேர்மன் நாகராஜன், தலைவர் ஜெயச்சந்திரன், செயலாளர் ராமசாமி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தியாகராஜர் கல்லூரி முன்னாள் முதல்வர் ராஜா கோவிந்தசாமி பங்கேற்று கண்காட்சியை திறந்து வைத்தார்.

இக்கண்காட்சியில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அலோபதி உள்பட பல்வேறு மருத்துவ நிறுவனங்கள் சார்பில 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது.

தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மருந்து மொத்த விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் கண்காட்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் அகில இந்திய முற்போக்கு மருந்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கம் மற்றும் புதிதாக மருந்து உற்பத்தி தொழில் தொடங்குவதற்கு இலவச ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை ஆழ்வார்புரத்தில் பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளை அலுவலகத்தில் பிறந்தநாள் விழா..!

காங்கிரஸ் கட்சி முன்னாள் மதுரை மாநகர் மாவட்ட தலைவரும், ஐ.என்.டி.யூ.சி தமிழக முன்னாள் தலைவருமான கே.எஸ். கோவிந்தராஜன் மற்றும் தேசிய …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES