Tuesday , September 26 2023
Breaking News
Home / செய்திகள் / திண்டுக்கல் ஸ்ரீ நலம் மருத்துவமனை மற்றும் சாரா மெடிக்கல் இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம்.!
MyHoster

திண்டுக்கல் ஸ்ரீ நலம் மருத்துவமனை மற்றும் சாரா மெடிக்கல் இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம்.!

திண்டுக்கல் மாவட்டம் இடைய கோட்டை முஹையதீன் ஆண்டவர் மஹாலில் ஸ்ரீ நலம் மருத்துவமனையின் தலைமை எலும்பியல் மருத்துவர் சிவகுமார் தலைமையில் மாபெரும் எலும்பியல் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டனர்.

கலந்து கொண்ட பொது மக்கள் அனைவருக்கும் சிறப்பான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டது.

இந்த முகாமில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், ஊர் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள்,
போன்றோர் பங்கேற்றனர்.

மருத்துவர் சிவகுமார் உடன், மருத்துவர்கள் சதாம் ஹுசைன், கோபி கிருஷாணா ராஜா, முகம்மது ரியாஸ்,ஆஷிகா பாபு, முகம்மது அம்ரின் ஆகிய மருத்துவ குழுவினர் பங்கேற்று சிறப்பான ஆலோசனைகள் வழங்கினர்.

ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து தன்னால் இயன்ற அளவு மருத்துவ உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வரும் திண்டுக்கல் ஸ்ரீ நலம் ஆர்த்தோ மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சிவகுமார் அவர்களை பங்கேற்ற அனைத்து தரப்பினரும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை பழங்காநத்தத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பாக நாளை திங்கட்கிழமை மாபெரும் பெருந்திரள் முறையீடு கோரிக்கை போராட்டம். ஆ.ம.ஆசிரியதேவன் அறிவிப்பு

மதுரை பழங்காநத்தத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பாக நாளை திங்கட்கிழமை மாபெரும் பெருந்திரள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES