
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில மகளிரணி தலைவி அன்னலட்சுமி ஷகிலா கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தென்னக மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் ஐயப்பா கார்த்தி பங்கேற்றார்.