Thursday , June 13 2024
Breaking News
Home / செய்திகள் / பாவம் !! 600 பெண்களை ! நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த காமுகன்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்காரர்கள்!
MyHoster

பாவம் !! 600 பெண்களை ! நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த காமுகன்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்காரர்கள்!

தற்போது தான் தமிழக அளவில் பொள்ளாச்சி சம்பவம் பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஆந்திராவில் 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த காமூகனின் செயல் அதையும் மிஞ்சுமளவிற்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசி.. 600 பெண்களை.. டிரஸ்ஸை கழற்றுமாறு மிரட்டி.. அவர்களை நிர்வாணமாக்கி.. அதனையும் வீடியோவாக பதிவு செய்து.. லட்சக்கணக்கில் பணம் பறித்த காம வெறி மிருகத்தை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர்தான் ராஜ்செழியன் என்ற பிரதீப். இதனால் நைட் வேலைக்கு போனால் காலையில்தான் திரும்பி வருவார். இவரது மனைவி, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.

அவர் வழக்கம்போல் காலையில் வேலைக்கு போய்விட்டு சாயங்காலம் வீட்டுக்கு வருவார். நைட் ஷிப்ட் என்பதால் பிரதீப் பகலில் வீட்டில் தனியாகத்தான் இருப்பார். அப்போது, பெண்களின் செல்போன் நம்பர்களை சேகரித்து அவர்களிடம் தினந்தோறும் பேச ஆரம்பித்தார்.

அதில் சில அழகான பெண்கள் தென்பட்டால், அவர்களை ஏமாற்றி பணம் பறிக்கவும் செய்தார். இதற்கு இவருக்கு அர்ச்சனா ஜெகதீஷ் என்ற பெண்ணே உடந்தையாக இருந்தார். “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. ஸ்டார் ஓட்டலில் வேலை.. லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும்” என்று அர்ச்சனா பேசவும், இளம் பெண்கள் அதில் விழுந்துவிடுவர். இதன்பிறகு பிரதீப்தான் இன்டர்வியூ நடத்துவதுபோல அந்த பெண்களிடம் பேச ஆரம்பிப்பார்.
வாட்ஸ்அப் வீடியோ காலில்தான் இந்த இன்டர்வியூ நடக்கும். உங்களுக்கு நல்ல உடல் அமைப்பு இருக்கிறதா, அதை பார்த்துதான் வேலைக்கு எடுக்கலாமா வேணாம்னு சொல்ல முடியும், அதனால உங்க நிர்வாண படத்தை எனக்கு அனுப்பி வைங்க என்று பிரதீப் கேட்க.. லட்சக்கணக்கான சம்பளத்துக்கு ஆசைப்பட்ட பெண்களும் தங்களது நிர்வாண படத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
சில சமயம் வீடியோ கால் மூலமாகவே, டிரஸ்களை கழட்டி உடல் அமைப்பை காட்டும்படி சொல்வாராம். அந்த பெண்களும் அப்படியே செய்திருக்கிறார்கள். இதை எல்லாம் ரெக்கார்ட் செய்து கொண்டு, மீண்டும் அந்த பெண்களிடமே அந்த நிர்வாண படங்களை போட்டு காட்டி, இதை சோஷியல் மீடியாவில் போடாமல் இருக்க வேண்டுமானால், பணம் தேவை என்று மிரட்டுவார்.
இப்படியே லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார். எத்தனை பெண்கள் தெரியுமா.. கிட்டத்தட்ட 600 பெண்களுக்கு மேல்.. இவர்கள் 16 மாநிலங்களை சேர்ந்தவர்கள். இதில் ஆந்திராவை சேர்ந்த ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டும் சந்தேகம் வந்து, இதை பற்றி விசாரிக்கவும்தான், பிரதீப்பின் கோர முகம் வெளிப்பட்டது.


ஐதராபாத் போலீசில் அந்த பெண் புகார் தெரிவிக்க, சென்னையில் பிரதீப்பை கைது செய்தது போலீஸ். அப்போதுதான், பிரதீப்பின் கம்ப்யூட்டர்கள், செல்போன்களை பார்த்து அதிர்ந்து போய்விட்டனர். 2000-க்கும் மேற்பட்ட நிர்வாண போட்டோக்கள், செல்போன், கம்ப்யூட்டர்களை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமான விசாரணை நடந்து வருகிறது.

Bala Trust

About Admin

Check Also

மதுரை மாவட்ட நபார்டு வங்கி நிதி உதவி பெற்று சாஜர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிறைவு விழா..!

மதுரை மாவட்ட நபார்டு வங்கி நிதி உதவி பெற்று சாஜர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES