
கரூரில் தற்போது இயங்கி வரும் TNEB செயற்பொறியாளர் (கிராமியம்) அலுவலகம் தற்போது க .பரமத்தி கொண்டு செல்ல தீவிர முயற்சி
இதனால் அரவக்குறிச்சி பகுதியில் உள்ள 22 க்கு மேற்பட்ட ஊராட்சியில் உள்ள 150 க்கு மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் விவசாயிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது நமது பகுதி அதிகம் மழையை நம்பியும் நிலத்தடி நீரை நம்பியும் இப்பகுதியில் பல்லாயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் மின் இணைப்புகள் பெற்ற விவசாயம் செய்து வருகின்றனர். பல்வேறு சிறு குரு தொழிற்சாலைகளும் உள்ளன இந்த விவசாய மின் இணைப்புகளுக்கு புதிதாக விண்ணப்பிக்கவும் பெயர் மாற்றம் செய்யவும் நாம் அடிக்கடி செயற்பொறியாளர் (கிராமியம்) அலுவலகம் செல்ல வேண்டி இருக்கும் இவ்வளவு காலம் அதற்காக நாம் கரூர் தான் சென்று வந்தோம் தற்போது இந்த அலுவலகத்தை க.பரமத்திக்கு மாற்றுவதால் அங்கு சொந்த கட்டிடம் கூட இல்லை வாடகை கட்டத்தில் கட்டடத்துக்கு தான் செல்ல வேண்டும் அவ்வாறு அங்கு அலுவலகத்தை கொண்டு செல்வதால் இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கரூர் 30 Km சென்று அங்கிருந்து கோவை செல்லும் பேருந்து ஏறி k.பரமத்தி 30 km சென்று அலுவலரை சந்திப்பது மிகவும் சிரமமான காரியம் இந்த முடிவை எந்தவித கத்துக்கேட்பு கூட்டமும் நடத்தாமல் திடீரென தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் முடிவெடுத்துள்ளது. இவ்வலுவலகம் கிராமிய அலுவலகம் என்பதால் அரவக்குறிச்சி தான் தலைமை இடமாக கொண்டு செயல்பட வேண்டும் அரவக்குறிச்சியில் தான் அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அரவக்குறிசியில் தான் செயல்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து 1996 லேயே தீர்ப்பு ஆணையும் பெறப்பட்டுள்ளது இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மின்சார வாரிய உயர் அதிகாரிகள் செயல்படுவது இப்பகுதி மக்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது எனவே மேற்கண்ட அலுவலகத்தை அரவக்குறிச்சி பகுதியில் உள்ள மின்சார வாரியத்துக்கு சொந்தமான கட்டிடத்தில் இயக்கினால் அனைவருக்கும் சிரமம் இருக்காது. இல்லையால் கரூரிலேயாது விட்டுவிட வேண்டும் இதனை செய்வார்களா அரசும் அதிகாரிகளும் என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு.
குறிப்பு :
முன்பு அதிமுக ஆட்சியில் சின்னதாராபுரத்திற்கு மாற்றம் செய்வதாக இருந்ததை பொதுமக்களின் நலன் கருதி அரவக்குறிச்சியில் அலுவலகம் இருந்தால் சிறப்பானது என கருதி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அரவக்குறிச்சியிலேயே TNEB ‘ D ‘ OFFICE அமைத்துக் கொள்ள தீர்ப்பும் வழங்கிய பின்பும் தற்பொழுது மீண்டும் பரமத்திக்கு மாற்றம் செய்வது என்பது அதிக மக்கள் தொகை கொண்ட அரவை வட்ட மக்களுக்கு மேலும் சிரமங்களை ஏற்படுத்தும் என்பதால் தற்போதைய கழக ஆட்சியில் மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் இந்த அலுவலகத்தை அரவக்குறிச்சியிலேயே அமைக்க முயற்சிக்க வேண்டும் என பொது மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்