கரூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவர். தனது அறிவால் ,கடின உழைப்பால் மிகச்சிறந்த உயரங்களை அடைந்தவர்.கரூரின் பெருமைமிகு அடையாளம்.சென்னை MIDSஇன் முன்னாள் இயக்குனர், பாரதிதாசன் பல்கலைக்கழக பொருளாதார துறையின் முன்னால் பேராசிரியர். எழுத்தாளர். ‘ஒரு நகரமும் ஒரு கிராமமும்’ கொங்கு பகுதியில் சமூக மாற்றங்கள் அவரது மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று.

அமராவதி ஆற்றுமணல் கொள்ளையைத் தடுக்க நாங்கள் நடத்திய போராட்டத்தின் போது அவரோடு பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. அவரது இழப்பு கரூருக்கும்,தமிழகத்திற்கும் பேரிழப்பாகவும். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
- திருமிகு. செ. ஜோதிமணி அவர்கள்,
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர்.