Thursday , December 8 2022
Breaking News
Home / கரூர் / அபு கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் மருத்துவ உதவி
MyHoster

அபு கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் மருத்துவ உதவி

அபு கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் திரு. அபுபக்கர் ( வயது – 19 ) த/பெ. சையது அவர்கள் மகன் சாலை விபத்தில் சிக்கி ஒரு கால் இழந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் என்று சமூக வலைதளத்தில் மற்றும் இளைஞர் குரலிலும் பதிவிட்டிருந்தோம்.

அதன் பலனாக,

1. திரு. அன்சாரி ( மலேசியா ?? ) அவர்கள் உடனே 20,000/- ரூபாய் மருத்துவ செலவிற்கு அளித்துள்ளார். 2. எ.ஆர்.எஸ் கல்லூரி தாளாளர் திருமதி ரீகானா பேகம் அவர்கள் ரூபாய் : 50,000/- மருத்துவ செலவை ஏற்றுக்கொண்டார். 3. திரு. இதிரீஸ் அவர்கள் ரூபாய் 10,300/- அளித்துள்ளார். 4. பெயர் தெரியாத நபர் ரூபாய் 3000/- அளித்துள்ளார். இதை நேற்று இரவு திரு. சையத் அவர்களிடம் மருத்துவ செலவிற்கான ஆவணங்களும் , பணமும் நமது அறக்கட்டளையின் தலைவர் முனைவர் அ.அபுல் ஹசேன் , எ.ஆர்.எஸ் கல்லூரி தாளாளர் திருமதி. ரீகானா பேகம் , அறக்கட்டளையின் உறுப்பினர் திரு. சபீர் ஆகியோர் மூலம் வழங்கப்பட்டது. தக்க சமயத்தில் உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். தங்களால் இயன்ற உதவி செய்ய வேண்டி விரும்பி கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

நன்றி – இளைஞர் குரல்.

Bala Trust

About Admin

Check Also

அன்னை இந்திரா காந்தியின் 106வது பிறந்த நாள் விழா…

அன்னை இந்திரா காந்தியின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கட்சி அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES