Tuesday , September 26 2023
Breaking News
Home / கரூர் / உடலில் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் வழிகள்
MyHoster

உடலில் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் வழிகள்

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் வழிகள்…!

பூண்டு: 5 அல்லது 8 பூண்டு பற்களை நன்றாக வேக வைத்து பாலில் கலந்து, காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்பு கணிசமாக குறைந்துவிடும்.

ஆப்பிள்: பொதுவாக, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் கெட்ட கொழுப்பை, உடலில் சேரவிடாமல் தடுக்கும். இதற்கு சிறந்த உதாரணமாக ஆப்பிள் பழத்தை குறிப்பிடலாம்.

கொள்ளு: ஐந்து கிராம் கொள்ளுடன், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு காணாமல் போய்விடும். கொள்ளை வேக வைத்து, அரைத்து வடிகட்டி, சிறிது இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்து தாளித்து ரசமாக குடிக்கலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.

கறிவேப்பிலை: கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். கறிவேப்பிலையுடன் கொள்ளு சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிடலாம்.

மிளகு: வாழைத்தண்டு சாறில் கரு மிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய வைத்து பொடிக்கவும். உணவில் மிளகிற்கு பதிலாக இந்த பொடியை பயன்படுத்தவும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.

சீரகம்: ஒரு லிட்டர் தண்ணீருடன் 20 கிராம் சீரகத்தை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதை தண்ணீருக்குப் பதிலாக பயன்படுத்தினால் உடலில் கெட்டக் கொழுப்பு தங்காது.

இஞ்சி: ஏலக்காய்: இஞ்சியின் மேல்தோலை சீவி, ஏலக்காய் சிறிது சேர்த்து நன்றாக இடிக்கவும். இதில் 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி குடிக்கவும்.

சோற்றுக் கற்றாழை: சோற்றுக் கற்றாழையின் மேல் தோல் சீவி, ஜெல்லை எடுத்து நன்கு கழுவவும். தினமும் காலை கற்றாழை ஜெல்லை எலுமிச்சை அளவு எடுத்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடற்சூட்டுடன், கொழுப்பும் குறையும்.

Bala Trust

About Admin

Check Also

அரசியலுக்கு வரும் பெண்களை ஊக்கப்படுத்தாவிட்டாலும், மலினப்படுத்தும் வேலையை செய்யாமல் இருக்கலாம்…

அரசியல் பின்புலம் இல்லாமல் சாதாரண குடும்பத்தில் இருந்து பல்வேறு போராட்டங்களை தினம் தினம் கடந்து அரசியலுக்கு வரும் பெண்களை ஊக்கப்படுத்தாவிட்டாலும், …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES