கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். அவரின் சீரிய முயற்சியால் அரவக்குறிச்சி பேரூராட்சியில் உள்ள பூங்காக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் எல்லாம் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. வண்ணான் பாறை என்று சொல்லக்கூடிய பகுதியில் இன்று வள மீட்பு பூங்கா மிகவும் அழகாக காட்சியளிக்கிறது.இந்தப் பூங்காவில் திராட்சைத் தோட்டம் மூலிகை தோட்டம் காய்கறிகள் தோட்டம் என பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி அரவக்குறிச்சி மக்களுக்கு ஓர் முன்னுதாரணமாக இருக்கும் ஓர் அரசு அதிகாரியை இளைஞர் குரல் சார்பாக வாழ்த்தி வரவேற்கிறோம். அதோடு மட்டுமில்லாமல் பூங்காவில் இயற்கை உரங்கள் தயாரிக்கப்பட்டு விவசாயத்திற்காக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. செயல் அலுவலர் அவர்களுக்கு உறுதுணையாக சிப்பாய்கள் படை வீரர்களைப் போன்று செயல்பட்டு இந்த பூங்காவை உருவாக்கும் பணியில் அலுவலக பணியாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
