ஏன்,
அச்சு ஊடகங்களில் உள்ள சொந்தங்களை, தொலைக்காட்சி ஊடகங்களில் உள்ள சொந்தங்கள் வேறு பிரித்து பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது..??
இதற்கு என்ன காரணம்?
அச்சு ஊடகத்திலிருந்து தொலைக்காட்சி ஊடகம் எளிதில் பாமர மக்களை சென்றடைய கூடியது.
ஏனென்றால் செய்தித்தாள்கள் கல்வி கற்றவர்கள் மட்டுமே படிக்கப்படுபவையாகும். ஆனால் தொலைக்காட்சி அப்படி அல்ல.
தொலைக்காட்சி, வெகுஜன மக்களின் ஊடகம்.
நமது நாட்டின் கிராமப்புற பகுதிகளின் மூலை முடுக்குகளில் எல்லாம், அந்தந்த மக்களின் மொழிகளில் ஊடுருவிப் பரவியுள்ளது.
எனவே பெறுமதிப்பு மிக்க ஓர் ஊடகமாக, தொலைக்காட்சி, மிக அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அச்சு ஊடகங்களிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் பணிபுரியும் அனைவருமே ஊடக ஜாதி என்ற ஓர் குடையின் கீழ் பயணிக்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது.
பத்திரிகையாளர்கள் பணிபுரியும், நான்காவது தூண் என்ற வலிமை பொருந்திய ஊடகங்கள், நன்னெறிகள் மற்றும் நன்னடத்தை நெறிகள் இடம்பெற்றுள்ள ஓர் ஊடகங்களாக இருக்க வேண்டும் என்பதே தற்போதுள்ள தேவையாகும். இதன்மூலம் தான் நாம் மேம்பட முடியும்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து ஏகோபித்த குரலெழுப்புவதற்கு அச்சு ஊடகங்கள், மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் உள்ள அனைவரும் ஒன்று கூட வேண்டும்.
பத்திரிகையாளர்களின் சங்கங்களுக்கு, நாம் ஒன்றுகூட வேண்டும்.
ஓர் ஊடக சொந்தத்திற்கு பிரச்சனை என்று வரும் போது ஒன்று கூடாத சங்கங்கள் மற்றும் பத்திரிகையாளர்களை வியப்பாக பார்க்கிறது, இந்த சமூகம்.
இந்நிலை மாற வேண்டும்.
சங்க தலைவர்களே ஒன்றுகூடுங்கள். ஊடக சுதந்திரத்திற்கு ஒருமித்த குரல் கொடுங்கள்.
எனது நோக்கம், சங்கங்களை பிரிப்பதல்ல. சங்கமமாக இருப்போம் என்று வலியுறுத்துவதே.
நாம் களம் கண்டால், ஊடகத்தை வஞ்சிப்பவர்கள் அனைவரும் காணாமல் போவது உறுதி…
களத்தில் நின்று போராட நான் தயார்.
ராபர்ட் ராஜ்
மாநில பொதுச்செயலாளர்
தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன்
9842 77 77 33