Saturday , June 3 2023
Breaking News
Home / இந்தியா / அரசு பங்களாவை காலி செய்ய ஒப்புதல்; மக்களவை செயலகத்திற்கு ராகுல் காந்தி கடிதம்
MyHoster

அரசு பங்களாவை காலி செய்ய ஒப்புதல்; மக்களவை செயலகத்திற்கு ராகுல் காந்தி கடிதம்

அரசு பங்களாவை காலி செய்ய ஒப்புதல் அளித்து மக்களவை செயலகத்திற்கு ராகுல் காந்தி கடிதம் எழுதி உள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது எம்.பி. பதவியை அதிரடியாக பறித்தது.

2004-ம் ஆண்டு, மக்களவை எம்.பி.யாக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், டெல்லியில் உள்ள எண் 12, துக்ளக் சாலை பகுதியில் அமைந்த அரசு பங்களா அவருக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், எம்.பி. பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டு உள்ளார்.

இந்த சூழலில், அரசு ஒதுக்கிய பங்களாவில் இருந்து வெளியேறும்படி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மக்களவை வீட்டு வசதி குழு நேற்று நோட்டீஸ் அனுப்பியது.

விதிகளின்படி, உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒரு மாதத்தில் அவர் அரசு பங்களாவில் இருந்து வெளியேற வேண்டும். கடந்த மார்ச் 23-ந்தேதி மக்களவை செயலகம் அவரை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது.

இதனால், வருகிற ஏப்ரல் 22-ந்தேதிக்குள் ராகுல் காந்தி, அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும். சூரத் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்ததும் அவருக்கு உடனடியாக ஜாமீனும் வழங்கியது. அவருக்கு மேல் நீதிமன்றம் ஒன்றில் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் அளித்தது. ஆனால், அந்த மேல் நீதிமன்றம் அவருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மற்றும் தண்டனைக்கு தடை விதிக்கவில்லை எனில், 8 ஆண்டுகளுக்கு ராகுல் காந்தியால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உள்ளது. இந்த நிலையில், ராகுல் காந்தி மக்களவை செயலகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், எனக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை ரத்து செய்து கடிதம் அனுப்பியதற்காக தங்களுக்கு நன்றி. பொதுமக்களின் விருப்பத்தின்பேரில் கடந்த 4 முறை மக்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நான், எனது மகிழ்ச்சியான தருணங்களை இதில் செலவிட்டேன். எனது உரிமைகளுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாமல், தங்களது கடிதத்தில் அடங்கிய விவரங்களின்படி நிச்சயம் நடப்பேன் என தெரிவித்து உள்ளார்.

Bala Trust

About Admin

Check Also

கிராமசபை கூட்டத்தின் பயன் என்ன??

கிராமசபை கூட்டத்தின் பயன் என்ன??, நாம் என்ன செய்ய வேண்டும்??, நம் கிராம வளர்ச்சிக்கு நாமே சட்டம் இயற்றுவோம், கேள்விகளை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES