
பஸ்சிற்குள் சிக்கி இருந்த 20 க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பத்தனம்திட்டா:
தமிழகத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 62 க்கும் மேற்பட்டோர் ஒரு பஸ்சில் சபரிமலைக்கு சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு திரும்பி கொண்டு இருந்தனர்.
நிலக்கல் அருகே இலவுங்கல் என்ற இடத்தில் இலவுங்கல்எருமேலி வரும் போது 3 வது வளைவில் பஸ் எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதின் பஸ் டிரைவர் பலத்த காயம் அடைந்தார். விபத்து நடந்த பகுதிக்கு இருந்து ஆம்புலன்ஸ், தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்தனர். உடனடியாக மீட்கப்பட்டவர்கள் உள்ளூர் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பஸ்சிற்குள் சிக்கி இருந்த 20 க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.நெட்வொர்க் இல்லாத சபரிமலை வனப்பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் திவ்யா எஸ்.ஐயர் கூறியதாவது:-
மீட்கப்பட்டவர்கள் உள்ளூர் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சுகாதாரத் துறையினர், தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார் ஒருங்கிணைந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. தற்போது அதிகபட்ச மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளது மேலும், படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்படுவார்கள் என்று தெரிவித்தார்.