Saturday , June 3 2023
Breaking News
Home / இந்தியா / ராகுல் காந்தி தகுதி நீக்கம் – சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு…
MyHoster

ராகுல் காந்தி தகுதி நீக்கம் – சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு…

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த நிலையில் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதாவது சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யட்டதை எதிர்த்து பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Bala Trust

About Admin

Check Also

கிராமசபை கூட்டத்தின் பயன் என்ன??

கிராமசபை கூட்டத்தின் பயன் என்ன??, நாம் என்ன செய்ய வேண்டும்??, நம் கிராம வளர்ச்சிக்கு நாமே சட்டம் இயற்றுவோம், கேள்விகளை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES