
தலைவர் ராகுல் காந்தி அவர்கள் 2019 நாடாளுமன்ற பொது தேர்தல் பரப்புரையின் போது “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என பேசியதாக தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கின் மீது அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக இன்று சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மத்தியில் உள்ள பாசிச பா.ஜ.க அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் கருத்து சுதந்திரத்தை தொடர்ந்து அச்சுறுத்து வருகிறது. எனது தலைவர் ராகுல் காந்தி அவர்கள் உண்மையின் பக்கம் நிற்கிறார்.அமலாக்கத்துறை, நீதிமன்றம், காவல்துறை, சி.பி.ஐ , சி.ஐ.டி மற்றும் தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகள் மூலம் எவ்வளவு அச்சுறுத்தல் கொடுத்தாலும் உண்மை பக்கமே நிற்கிறார். உண்மையை மட்டுமே பேசுகிறார். தொடர்ந்து இந்தியாவின் ஜனநாயகத்தையும் மாண்பையும் காப்பாற்ற போராடி வருகிறார். ஆனால், எனது தலைவரின் உண்மை ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி போன்ற மக்கள் விரோத சித்தாந்தம் கொண்ட அமைப்புகளை அச்சுறுத்துகிறது. நீங்கள் இந்தியாவின் ஜனநாயகத்தையும் மாண்பையும் அழிக்க துடிக்கிறீர்கள்….
இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சவும் மாட்டோம் அடிபணிய மாட்டோம் தொடர்ந்து போராடுவோம் நாங்கள் காங்கிரஸ்காரர்கள்…
https://www.ilangyarkural.com/wp-content/uploads/2023/03/IYC-4.pdf