Saturday , June 3 2023
Breaking News
Home / நிகழ்வுகள் / thiruvanantha puram / கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்
MyHoster

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்

பொது இடங்களில் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் என கேரளா சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து உள்ளது. திருச்சூரில் கொரோனாவால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் இன்று 210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஐசியூ மற்றும் வென்டிலேட்டர் அமைப்புகளை தயார் செய்ய சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பொது இடங்களில் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் நினைவுபடுத்தி உள்ளார். நேற்று நடைபெற்ற உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பிரதமரின் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

Bala Trust

About Admin

Check Also

கிராமசபை கூட்டத்தின் பயன் என்ன??

கிராமசபை கூட்டத்தின் பயன் என்ன??, நாம் என்ன செய்ய வேண்டும்??, நம் கிராம வளர்ச்சிக்கு நாமே சட்டம் இயற்றுவோம், கேள்விகளை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES