Tuesday , September 26 2023
Breaking News
Home / இந்தியா / ஆம்புலன்ஸ் தாமதங்களால் உயிரிழப்பு இனி இல்லை – வெகு விரைவில் உயிர் காக்கும் கரங்களின் ஆம்புலன்ஸ் சேவை தமிழகம் முழுவதும்
MyHoster

ஆம்புலன்ஸ் தாமதங்களால் உயிரிழப்பு இனி இல்லை – வெகு விரைவில் உயிர் காக்கும் கரங்களின் ஆம்புலன்ஸ் சேவை தமிழகம் முழுவதும்

ஆம்புலன்ஸ் தாமதங்களால் உயிரிழப்பு இனி இல்லை வெகு விரைவில் உயிர் காக்கும் கரங்களின் ஆம்புலன்ஸ் சேவை தமிழகம் முழுவதும்முழுவதும்

பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய சுபஸ்ரீ ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் லோடு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 23 வயது பொறியாளரான சுபஸ்ரீ, அலுவலகம் முடிந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் ஓரத்தில் அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் அவரது மகன் திருமணத்துக்கு வைத்திருந்த பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது. அதனால், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது, அங்கே வந்த தண்ணீர் லாரியில் சிக்கி படுகாயமடைந்தார். காயமடைந்த அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி சுபஸ்ரீ உயிரிழந்தார். இதனிடையே அவர் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,, சுபஸ்ரீ விபத்தில் சிக்கி அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

சுபஸ்ரீ விபத்தில் சிக்கியுடன் தண்ணீர் கேட்டு கதறியுள்ளார். அப்போது அருகில் இருந்தார்கள் சுபஸ்ரீக்கு உதவியுள்ளார்கள். உடனே 108ஆம்புலன்ஸுக்கு அழைத்துள்ளார்கள். ஆனால் ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஆக, அங்கிருந்த லோடு ஆட்டோவில் சுபஸ்ரீயை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.

Bala Trust

About Admin

Check Also

மதுரை பழங்காநத்தத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பாக நாளை திங்கட்கிழமை மாபெரும் பெருந்திரள் முறையீடு கோரிக்கை போராட்டம். ஆ.ம.ஆசிரியதேவன் அறிவிப்பு

மதுரை பழங்காநத்தத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பாக நாளை திங்கட்கிழமை மாபெரும் பெருந்திரள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES