திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் பஜார் பகுதியில் அதிக அளவில் வாகனங்கள் செல்வதால் சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டு வாகன நெரிசல் அதிகமாக காணப்பட்டு வந்தது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இதனை தடுக்க 01.09.2019-ம் தேதியன்று ஆலங்குளம் காவல் நிலைய காவலர்கள் திரு.ஆனந்தராஜ் மற்றும் திரு.ஜெய பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து சாலையில் குண்டும் குழியுமாக இருந்த இடத்தை JCB இயந்திரம் வரவழைத்து பொதுமக்கள் உதவியோடு சாலையை சமன் செய்தனர். இதனால் வாகன ஓட்டிகள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சென்று வருகின்றனர். காவல் துறையினர் செய்த இத்தகைய பொதுப்பணியை மக்கள் மனதார பாராட்டி வருகின்றனர்.
