Friday , December 9 2022
Breaking News
Home / Help2Help / Help 2 Help தன்னார்வ தொண்டு அமைப்பினர் சந்திப்பு…
MyHoster

Help 2 Help தன்னார்வ தொண்டு அமைப்பினர் சந்திப்பு…

Help 2 Help தன்னார்வ தொண்டு அமைப்பின் செயல்பாடுகளை விளக்கி எடுத்துரைத்து கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியப் பெருமக்களை இரத்த தானத்திற்கு உதவும் படி கேட்டுக் கொள்ள கொங்கு அறக்கட்டளைத் தலைவரும் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சேர்மன் திரு. அட்லஸ் நாச்சிமுத்து அவர்களைச் சந்தித்தோம்.

மனித நேயத்துடன் கலந்துரையாடிய திரு நாச்சிமுத்து அவர்கள் ஏதுவான நிகழ்ச்சி ஒன்றை கல்லூரியில் மிக விரைவில் ஏற்படுத்தித் தருவதாக உறுதி கூறினார்.

கல்லூரியின் ஆலோசகர் திரு. சேதுபதி அவர்களைத் தொடர்பு கொண்டு அடுத்தடுத்த செயல்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை கூறினார்.

Help 2 Help அமைப்பின் இரத்த தான செயல்பாடுகளையும் கள ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி திலகவதி, திரு ரவிசங்கர் ஆகியோரையும் வெகுவாகப் பாராட்டினார்.

திரு நாச்சிமுத்து அவர்களுக்கு Help 2 Help அமைப்பின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.சிவராமன், ஒருங்கிணைப்பாளர்.

Bala Trust

About Admin

Check Also

தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் சார்பாக கரூர் மாநகராட்சி ‘எனது குப்பை எனது பொறுப்பு ‘என்ற விழிப்புணர்வு நிகழ்வு

தமிழக அரசு அறிவித்துள்ள தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் சார்பாக கரூர் மாநகராட்சி ‘எனது குப்பை எனது பொறுப்பு ‘என்ற …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES