Saturday , June 3 2023
Breaking News
Home / சினிமா / நடிகர் அஜித்தின் தந்தை உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!
MyHoster

நடிகர் அஜித்தின் தந்தை உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!

நடிகர் அஜித்தின் தந்தை உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் ( வயது 86) நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை 3:15 மணியளவில் காலமானார். மறைந்த சுப்ரமணியத்தின் இறுதிச்சடங்கு பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் இன்று நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் அஜித்தின் தந்தை உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

Bala Trust

About Admin

Check Also

இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்நாடு கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறை, SKM லைப் கேர் இரத்தப் பரிசோதனை நிலையம், பாலா அறக்கட்டளை, வெள்ளியணை ஊராட்சி, அரசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்நாடு கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறை, SKM லைப் கேர் இரத்தப் பரிசோதனை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES