Saturday , June 3 2023
Breaking News
Home / சினிமா / இறுதிகட்டத்தில் படப்பிடிப்பு… ரஜினியின் ஜெயிலர் ரிலீஸ் எப்போது?
MyHoster

இறுதிகட்டத்தில் படப்பிடிப்பு… ரஜினியின் ஜெயிலர் ரிலீஸ் எப்போது?

ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

ஏற்கனவே சென்னை, மங்களூரு, ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. வசூல் சாதனை நிகழ்த்திய காந்தாரா படப்பிடிப்பு நடந்த பண்ணை வீட்டிலும் முக்கிய காட்சிகளை படமாக்கி உள்ளனர்.

தற்போது சென்னை அருகே இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்த மாதம் கடைசியில் முழு படப்பிடிப்பையும் முடித்து விடும் முடிவோடு பணிகளை வேகப்படுத்தி உள்ளனர். படப்பிடிப்பு முடிந்ததும் உடனடியாக டப்பிங், இசை கோர்ப்பு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளை தொடங்க உள்ளார்கள். அப்போது ரிலீஸ் தேதியையும் அறிவிக்கிறார்கள்.

ஜெயிலர் படம் ஆகஸ்டு மாதம் அல்லது தீபாவளி பண்டிகையையொட்டி திரைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. இதில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நெல்சன் டைரக்டு செய்துள்ளார். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள தாதாவை விடுவிக்க ரவுடிகள் முற்றுகையிடுவதையும் அதை ஜெயிலராக இருக்கும் ரஜினிகாந்த் எப்படி முறியடிக்கிறார் என்பதும் கதை என்று கூறப்படுகிறது.

Bala Trust

About Admin

Check Also

விவாகரத்து வதந்திக்கு விஷ்ணு விஷால் விளக்கம்

தமிழில் வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமான விஷ்ணு விஷால் பிரபல நடிகராக உயர்ந்துள்ளார். அவர் நடிப்பில் வந்த ராட்சசன், …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES