நீண்ட நேரம் இரண்டும் பேசி கொண்டிருந்தன இந்த உலகம் யாரை நம்பும் என்னைத்தான் என்னைத்தான் என்று இரண்டும் மாறி மாறி சொல்லிக் கொண்டே அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றன…
தன் ஆடைகளை களைந்து கிணற்றில் இறங்கி குளிக்க ஆரம்பித்தன சுத்தமான நீர் மிதமான சூட்டில் உண்மை மெய்மறந்து குளிக்க ஆரம்பிக்க, பொய் மேலே வந்து உண்மையின் ஆடைகளை அணிந்துக்கொண்டு நான் தான் உண்மை என ஊர்சுற்ற ஆரம்பித்து விட்டது…
கிணற்றில் இருந்த உண்மை அம்மனமாக வெளியே வர அதன் ஆடைகளை காணோம் பொய் ஆடையையும் அணிய முடியாது இருந்தாலும் ஊரில் உள்ள எல்லோரிடமும் நான் தான் உண்மை என சொல்லியும் யாரும் நம்பவில்லை கல்லால் அடிக்க தொடங்கி விட்டனர்..
உண்மை மீண்டும் போய் கிணற்றில் ஓளிந்து கொண்டது …
இந்த பொய் ஆனந்தமாக தனது புளுகிமூட்டை கதைகளுடன் மின்னல் வேகத்தில் உலகை சுற்றி வந்தது…
மஞ்சள் சுடிதாரில் வந்த கவிதா தேவி, ஒரு வீராங்கனையை தலைக்கு மேல் தூக்கி சுழற்றியடித்த வீடியோவை பார்த்தவர்கள் மிரண்டிருப்பார்கள். ஹரியானாவைச் சேர்ந்த கவிதா தேவி, தற்போது, WWE எனப்படும் உலக பொழுதுபோக்கு மல்யுத்த அமைப்பில் சேருவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் பெருமையை பெறும் முதல் இந்தியப் பெண் கவிதா.
முன்னாள் பளுதூக்கும் வீராங்கனையான ஹரியானாவைச் சேர்ந்த கவிதா தேவி, சில மாதங்களுக்கு முன் நடந்த மே யங் கிளாசிக் பெண்கள் போட்டியில், கவிதா தேவி பங்கேற்றார்.
பிபி புல் புல் என்ற வீராங்கனையை தலைக்கு மேல் தூக்கி வீசிய காட்சி வீடியோவில் பரவியது. அந்தப் போட்டியில் கவிதா தோல்வியடைந்தாலும், மஞ்சள் நிற சுடிதார் அணிந்து அவர் பங்கேற்ற வீடியோ வெகு வேகமாக பரவியது.
மிகப் பிரபலமான மல்யுத்த வீரரான, பஞ்சாப்பை சேர்ந்த கிரேட் காளியிடம் பயிற்சி பெற்றவர் கவிதா. தற்போது டபிள்யூடபிள்யூஇ அமைப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த அமைப்புடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் முதல் இந்திய பெண் என்ற பெருமை கவிதாவுக்கு கிடைத்துள்ளது. இந்த போட்டிகளுக்காக சிறப்பு பயிற்சிகள் அவருக்கு வழங்கப்பட உள்ளது.
இவருடன், ஜோர்டானை சேர்ந்த ஷாதியா பெய்ஸோ என்ற பெண்ணும், ஒப்பந்தம் செய்துள்ளார். அரபு நாட்டைச் சேர்ந்த ஒரு பெண். மல்யுத்தத்தில் களமிறங்கப் போவதும் இதுவே முதல் முறையாகும்.
*கிரிகோரியன் ஆண்டின் 276 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 277 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 89 நாட்கள் உள்ளன.*
*?நிகழ்வுகள்*
?கிமு 42 – மார்க் அந்தோனியும், ஒக்டேவியனும் சீசரின் கொலையாளிகளான புரூட்டசு, கேசியசு ஆகியோருடன் பெரும் போரில் ஈடுபட்டனர்.
?1392 – ஏழாம் முகம்மது கிரனாதாவின் 12-வது சுல்தானாக முடி சூடினான்.
?1739 – உருசிய-துருக்கிப் போர் (1736–1739) முடிவில் உருசியாவுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
?1908 – பிராவ்தா செய்திப்பத்திரிகை லியோன் திரொட்ஸ்கியினாலும் அவரது சகாக்களினாலும் வியென்னாவில் வெளியிடப்பட்டது.
?1918 – மூன்றாம் போரிசு பல்கேரியாவின் மன்னனாக முடிசூடினான்.
?1929 – செர்பிய, குரோவாசிய, சுலோவீனிய இராச்சியம் இணைக்கப்பட்டு அதற்கு யுகோசுலாவியா எனப் பெயரிடப்பட்டது.
?1932 – ஈராக், பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
?1935 – இத்தாலி எதியோப்பியாவினுள் ஊடுருவியது.
?1942 – செருமனியில் இருந்து ஏ4-ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது 85 கிமீ உயரத்துக்கு சென்றது.
?1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படைகள் கிரேக்கத்தில் லிஞ்சியாதெசு கிராமத்தில் 92 பொதுமக்களைக் கொன்றனர்.
?1952 – ஐக்கிய இராச்சியம் வெற்றிகரமாக அணுவாயுதச் சோதனையை நடத்தியது.
?1962 – சிக்மா 7 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வொல்லி சீரா ஒன்பது மணி நேரத்தில் ஆறு தடவைகள் பூமியைச் சுற்றினார்.
?1963 – ஒண்டுராசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு இராணுவ ஆட்சி ஆரம்பமானது.
?1981 – வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் ஐரியக் குடியரசு இராணுவக் கைதிகளின் ஏழு மாத உண்ணாநோன்பு முடிவுக்கு வந்தது. 10 பேர் இறந்தனர்.
?1985 – அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.
?1989 – பனாமாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டு, புரட்சியில் ஈடுபட்ட 11 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
?1990 – செருமானிய மீளிணைவு: செருமானிய சனநாயகக் குடியரசு முடிவுக்கு வந்தது. கிழக்கும் மேற்கும் செருமனி என்ற பெயரில் இணைந்தன.
?1993 – சோமாலியாவின் இராணுவத் தலைவர் முகம்மது பரா ஐடிடு என்பவனின் தலைமையிலான ஆயுதக் குழுவினரைப் பிடிக்க எடுத்த முயற்சியில் 18 அமெரிக்கப் போர்வீரர்களும் 1,000 சோமாலிகளும் கொல்லப்பட்டனர்.
?2001 – வங்காளதேசத்தின் நாடாளுமன்றத் தேர்தலில் காலிதா சியாவின் வங்காளதேசக் தேசியக் கட்சி வெற்றி பெற்றது.
?2010 – 2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் தில்லி நகரில் ஆரம்பமாயின.
?2013 – இத்தாலியின் லம்பெதூசா தீவில் ஆப்பிரிக்கக் குடியேறிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 134 பேர் உயிரிழந்தனர்.
?2015 – ஆப்கானித்தானில் குண்டூசு மருத்துவமனை மீது வான் தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
?கிமு 331– பேரரசர் அலெக்சாந்தர் பாரசீகத்தின் மூன்றாம் டாரியசு மன்னனை குவாகமேலா சமரில் வென்றான்.
?366– முதலாம் தாமசுஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
?959 – முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
?965 – பதின்மூன்றாம் ஜான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
?1553 – இங்கிலாந்தின் முதலாம் மேரியின் முடிசூடல் நிகழ்வு இடம்பெற்றது.
?1730 – உதுமானிய சுல்தான் மூன்றாம் அகமது முடி துறந்தான்.
?1787 – அலெக்சாந்தர் சுவோரொவ் தலைமையில் உருசியப் படைகள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தன.
?1795 – ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்ற இசுப்பிரிமொண்ட் சமரை அடுத்து, பிரான்சு தெற்கு நெதர்லாந்தை அதிகாரபூர்வமாகக் கைப்பற்றியது.
?1799 – கட்டபொம்மனை புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமான் கைது செய்தார்.
?1800 – எசுப்பானியா லூசியானாவை பிரான்சிடம் தந்தது. முப்பது மாதங்களின் பின்னர் ஐக்கிய அமெரிக்கா அதனை பிரான்சிடம் இருந்து வாங்கியது.
?1814 – நெப்போலியனின் தோல்வியை அடுத்து ஐரோப்பாவின் புதிய அரசியல் வரைபடத்தை வரைவதற்காக வியன்னா மாநாடு கூடியது.
?1827 – உருசிய-பாரசீகப் போர்: உருசிய இராணுவம் யெரெவானைக் கைப்பற்றியது. ஆர்மீனியாவில் முசுலிம்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
?1833 – இலங்கையில் சட்டவாக்கப் பேரவை, மற்றும் நிறைவேற்றுப் பேரவை ஆகியன ஆரம்பிக்கப்பட்டன.[1]
?1843 – நியூசு ஆப் த வேர்ல்ட் பத்திரிகை லண்டனில் வெளியிட ஆரம்பிக்கப்பட்டது.
?1854 – இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.
?1880 – இந்தியாவுடனான காசுக்கட்டளை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
?1887 – பிரித்தானியா பலூசிஸ்தானைக் கைப்பற்றியது.
?1892 – இலங்கையில் இந்திய இரண்டு அணா நாணயம் செல்லுபடியற்றதாக்கப்பட்டு, வெள்ளி நாணயம் அறிமுகமானது.[2]
?1898 – உருசியாவின் முக்கிய நகரங்களிலிருந்து யூதர்கள் இரண்டாம் நிக்கலாஸ் மன்னனால் வெளியேற்றப்பட்டனர்.
?1910 – லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் கட்டடம் பெரும் குண்டுவெடிப்பினால் தகர்க்கப்பட்டதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
?1918 – முதலாம் உலகப் போர்: அரபுப் படைகள் சிரியாவின் டமாஸ்கசு நகரைக் கைப்பற்றினர்.
?1936 – பிரான்சிஸ்கோ பிராங்கோ எசுப்பானியாவின் தேசிய அரசின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
?1939 – இரண்டாம் உலகப் போர்: ஒரு மாத கால முற்றுகையின் பின்னர் செருமனியப் படைகள் வார்சாவா நகரைக் கைப்பற்றின.
?1942 – இரண்டாம் உலகப் போர்:: அமெரிக்காவின் குரூபர் கப்பல் ஆங்காங்கில் இருந்து பிரித்தானியப் போர்க் கைதிகளை ஏற்றி வந்த லிசுபன் மாரு என்ற கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
?1943 – நாபொலியின் நான்கு நாட்கள்: நேச நாடுகளின் படைகள் நாபொலி நகரைக் கைப்பற்றின.
?1896 – லியாகத் அலி கான், பாக்கித்தானின் 1வது பிரதமர் (இ. 1951)
?1904 – ஏ. கே. கோபாலன், இந்தியக் கல்வியாளர், அரசியல்வாதி (இ. 1977)
?1906 – எஸ். டி. பர்மன், இந்தித் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர் (இ. 1975)
?1912 – கத்லீன் ஒல்லரென்ழ்சா, ஆங்கிலேய கணிதவியலாளர், வானியலாளர், அரசியல்வாதி (இ. 2014)
?1918 – ஜி. வெங்கடசாமி, இந்தியத் தொழிலதிபர், கண் மருத்துவர் (இ. 2006)
?1924 – ஜிம்மி கார்ட்டர், அமெரிக்காவின் 39வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்
?1927 – சிவாஜி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2001)
?1928 – சூ சுங்ச்சி, சீனாவின் 5வது பிரதமர்
?1932 – அரங்க முருகையன், தமிழறிஞர், எழுத்தாளர் (இ 2009)
?1936 – கே. எஸ். சிவகுமாரன், ஈழத்து எழுத்தாளர், திறனாய்வாளர்
?1941 – சி. க. சிற்றம்பலம், ஈழத்து வரலாற்றாய்வாளர், கல்வியாளர், எழுத்தாளர்
?1941 – செ. யோகநாதன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2008)
?1956 – தெரசா மே, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
?1958 – ஆந்தரே கெய்ம், உருசிய-டச்சு இயற்பியலாளர்
?1998 – பாலச்சந்திரன், இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சிறுவன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கடைசி மகன் (இ. 2009)
இறப்புகள்
?1404 – ஒன்பதாம் போனிஃபாஸ் (திருத்தந்தை) (பி. 1356)
?1973 – பாபநாசம் சிவன், கருநாடக, தமிழிசை அறிஞர் (பி. 1890)
?2008 – பூர்ணம் விஸ்வநாதன், தமிழக நாடக, திரைப்பட நடிகர் (பி. 1921)
?2010 – அவுதவின் தோல்பசு, பிரான்சிய வானியலாளர் (பி. 1924)
?2012 – எரிக் ஹாப்ஸ்பாம், எகிப்திய-ஆங்கிலேய மார்க்சிய சிந்தனையாளர், வரலாற்றாளர் (பி. 1917)
?2013 – டாம் கிளான்சி, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1947)
?2014 – ராபர்ட் செரா, வெனிசுவேலாவின் அரசியல்வாதி (பி. 1987)
சிறப்பு தினம்
?குழந்தைகள் தினம் (எல் சால்வடோர், குவாத்தமாலா, இலங்கை)
?சீன தேசிய தினம்
?விடுதலை தினம் (சைப்பிரசு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1960); (நைஜீரியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1960); (பலாவு, ஐக்கிய நாடுகளிடம் இருந்து, 1994); (துவாலு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1978)
குழந்தைகளுக்கு மட்டும்தான் எதிர்பார்ப்புகள் இருக்கும்என்றில்லை முதியவர்களுக்கும் எதிர்பார்ப்புகள் அதிகம், பாதுகாப்பு குறித்த அச்சம் இருக்கும்.
வயதான பெற்றோரை பிள்ளைகள் கைவிட்டால் அவர்களுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கத்தக்க வகையில் சட்டத்தை திருத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கிறது.
பெற்று, வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை அவர்களது முதுமை காலத்தில் உடன்வைத்து காத்து பராமரிக்க வேண்டி கடமை பிள்ளைகளுக்கு உண்டு.
ஆனால் இந்த கடமையை இன்றைய தலைமுறை பிள்ளைகள் எளிதாக துறக்கின்றனர்.
இதனால் வயதான காலத்தில் பெற்றோர் அல்லாடுகிற நிலை உள்ளது. அவர்களை கவனிக்க யாருமற்ற சூழலும் உருவாகிறது. இது அவர்களை மன உளைச்சலில் தள்ளுகிறது. ஒரு கட்டத்தில் விபரீத முடிவு எடுக்கவும் வைக்கிறது.
இது பிரதமர் அலுவலகத்தின் கவனத்துக்கு சென்றிருக்கிறது. இதையடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சமூக நலம் மற்றும் அதிகார வழங்கல் துறை அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது.
அதன்பேரில் அந்த அமைச்சகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. தற்போது பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு, நலச்சட்டம்-2007-ன்படி, வயதான பெற்றோரை உடன் வைத்து பராமரிக்காமல், பிள்ளைகள் கைவிட்டால் 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்க முடியும்.
இப்போது இந்த சட்டத்தை திருத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தண்டனை 3 மாதத்தில் இருந்து 6 மாதமாக அதிகரிக்கப்படுகிறது.
தண்டனையை அதிகரிப்பதுடன் வயதான பெற்றோரை, மூத்த குடிமக்களை பாதுகாக்கிற கடமை யாருக்கெல்லாம் உண்டு என்பதற்கான உறவு வரம்பினை விரிவுபடுத்தவும் வரைவு மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், குழந்தைகள் மட்டுமின்றி தத்து குழந்தைகள், மருமகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகள் ஆகியோருக்கும் மூத்த குடிமக்களை காக்கிற கடமை உண்டு என்பது சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்படுகிறது.
தற்போது மகன்கள், மகள்கள், பேரக்குழந்தைகள் மட்டுமே சட்ட வரம்புக்குள் வருகிறார்கள்.
தற்போது பராமரிப்பு தொகையாக பெற்றோருக்கு ரூ.10 ஆயிரம் வரை தரலாம் என்றிருக்கிறது. இந்த வரம்பை நீக்கி விட்டு, இப்போது பிள்ளைகள் நல்ல சம்பளம் பெறுவதால் அதற்கு ஏற்ற வகையில் பெற்றோருக்கு கூடுதல் தொகையை பராமரிப்பு செலவாக தரவும் சட்ட திருத்தத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வயதானவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தையும் மரியாதைகளையும் கொடுக்கவேண்டும், அவர்களுக்கு உரிய உரிமைகளையும், சுதந்திரத்தையும் அளிக்கவேண்டும்.
கீழடித் தொல்பொருள்களின் காலம் கிமு ஆறாம் (கிமு 600) நூற்றாண்டு என்பது உறுதியாகிவிட்டது. அந்த உறுதிப்பாடு உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நிலத்தின் வரலாற்றுப் பெருஞ்சிறப்புகள் யாவை ?
1. அப்போது புத்தர் பிறந்திருக்கவில்லை. புத்தர் கிமு 563ஆம் ஆண்டுதான் பிறக்கிறார். கீழடித் தொல்லகம் புத்தர் காலத்திற்கும் முந்தி நிற்கிறது. இந்திய வரலாற்றின் முதற்பக்கங்கள் மொகஞ்சதாரோ, அரப்பா, அடுத்து புத்தர், மகாவீரர் என்று தொடங்கும். சான்றுகளைக் கேட்கும் வரலாறு இனி வாயடைத்து நிற்கும். இந்திய வரலாற்றின் முதற்பக்கங்களில் தமிழர் நாகரிகத்தைப் பற்றி இனிக் கூறியாகவேண்டும்.
2. அப்போது அஜந்தாக் குகைகள் குடையப்பட்டிருக்கவில்லை. அஜந்தாக் குகைகளில் புத்தமதச் செல்வாக்கு மிக்கிருப்பதால் அவை புத்தர் காலத்திற்குப் பிறகே பெரும்பாலும் குடையப்பட்டன. அதன் பழைமையான குகையினைக் கிமு இரண்டாம் நூற்றாண்டு வரைக்கும் ஏற்றுக்கொள்கின்றனர். கீழடிச் சான்றுகள் அவற்றுக்கும் முந்தியன.
3. கபாடபுரத்திற்கு நேர்ந்த கடல்கோளின் பின்னர் இன்றைய மதுரை நகரத்திற்குப் பாண்டியர்கள் இடம்பெயர்ந்தனர். அங்கே தோற்றுவித்து வளர்க்கப்பட்டதே கடைச்சங்கம். கடைச்சங்கத்தின் காலம் கிமு இரண்டாம் நூற்றாண்டு என்பதற்கே பலர் பல்வேறு குறுக்கு வழக்குகளோடு வருவர். சான்றெங்கே, ஆதாரம் எங்கே என்று நிற்பர். இப்போது கிமு ஆறாம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துகள் தெளிந்த சான்றுகளாகிவிட்டன.
5. ஆதன், சாத்தன் ஆகிய பெயர்கள் நம் இலக்கண உரைகளில் தொடர்ந்து மேற்கோள் காட்டப்படுகின்றன. ஆதனின் தந்தை ஆந்தை எனப்படுவார். சாத்தனின் தந்தை சாத்தந்தை எனப்படுவார். பிசிர் என்ற ஊரில் வாழ்ந்த ஆதனின் தந்தையே பிசிர் ஆந்தையார் எனப்பட்டார். அகநானூறு, புறநானூறு, நற்றிணை ஆகிய சங்க இலக்கிய நூல்களில் பிசிராந்தையார் பாடிய ஆறு பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவர் யாராயினும் ஆதன் என்ற பெயர் வைக்கும் பழக்கம் தொல் தமிழரிடையே பரந்திருந்தது என்பது வெள்ளிடைமலை. ஆதன் என்பதற்கு உயிர் என்று பொருள். உயிரன்.
6. ஒடிய மாநிலம் புவனேசுவரம் உதயகிரிக் குகைகளின் நெற்றியில் பொறிக்கப்பட்டுள்ள காரவேலனின் கல்வெட்டு பதின்மூன்று நூற்றாண்டுகளாய் நிலவிய சேர சோழ பாண்டியர்களின் கூட்டாட்சி வலிமையைக் கூறுகிறது. “தமிர தேக சங்காத்தம்” என்பது அக்கல்வெட்டினில் உள்ள தொடர். ஒடிய மன்னன் காரவேலன் அசோகருக்குப் பிறகு அப்பகுதியினை ஆண்டவன். கிமு இரண்டாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவன். “அக்கல்வெட்டினில் இருப்பது பதின்மூன்று நூற்றாண்டுகள் இல்லை, வெறும் பதின்மூன்று ஆண்டுகளாகத்தான் இருக்கவேண்டும்” என்ற வழக்கும் ஓடியது. கீழடியில் பெருந்தமிழர் நாகரிகம் செழித்து வளர்ந்திருக்கும் நிலைமையைக் காண்கையில் காரவேலன் கல்வெட்டு கூறுவது பதின்மூன்று நூற்றாண்டுகளாகவே இருக்க வேண்டும்.
7. வைகை ஆறு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு பேராறாக நிறைந்து ஓடியிருக்க வேண்டும். அதன் கரைவெளி எங்கும் பாண்டியப் பேரரசில் பெருவாழ்வு வாழ்ந்த குடிகளின் தடயங்களைக் கண்டெடுத்திருக்கிறோம்.
8. எழுத்துமுறை தோன்றுவதற்கு முன்பே பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேச்சுமுறை நிலவியிருக்க வேண்டும். மொழித்தோற்றத்தின் இளமைக் காலம் இன்னும் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்லும். அனைத்தையும் கொண்டு கூட்டிப் பார்க்கையில் தமிழ் மொழியின் தொன்மையைப் பகரும் சான்றுகள் பல பல்லாயிரம் ஆண்டுகட்கு முந்தியவை என்பது தெளிவாக நம் கண்ணுக்கே தெரிகிறது.
9. கீழடியில் தங்க அணிகள் கிடைத்திருக்கின்றன. தொலைவுத் தேயங்களிலிருந்து வருவிக்கப்பட்ட மணிகள் கிடைத்திருக்கின்றன. மண்ணைக் கொண்டு பாண்டங்கள் செய்தல் என்னும் தொழில்நுட்பம் சிறப்படைந்திருக்கிறது. இருப்புப் பொருள்களும் பல்வேறு மாழைப் பொருள்களும் (உலோகம்) பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. தனிப்பான்மையான குடிவாழ்வின் தன்னிகரற்ற வரலாற்று வளர்ச்சி நிலைகள் இவை.
10. இன்றைய நிலைப்பாட்டிலிருந்து வரலாற்றினைப் பார்ப்பது தவறு. மதங்கள், சாதிகள், பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் என இன்று நாம் பற்றிப் பழகியிருக்கும் சிறுகண்களைக்கொண்டு பழைமையில் தேடுவது நன்றன்று. ஒற்றை நிலையில் ஒரு நிலத்தின் வரலாறும் அமையாது. காலப்போக்கில் அது பல்வேறு நிலைகளுக்கு முகங்கொடுத்தாக வேண்டும். நம் வரலாறெங்கும் அவ்வாறே நிகழ்ந்தது. எது எப்படியாயினும் அன்றைக்கும் இன்றைக்கும் இக்குடிவாழ்வின் பற்றுதலாக இருப்பது ஒன்றேயொன்று. அதுதான் முன்னைப் பழையதும் பின்னைப் புதியதுமான தமிழ்மொழி !
ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் மாகாணத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் தமிழ் மொழியும் ஒரு படமாக கற்றுத்தரப்படும் என நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான தமிழ் மொழிப்பாடம் உள்ளடங்கிய புதிய பாடத்திட்டத்தையும் அம்மாகாண அரசு வெளியிட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இரண்டாவது மொழிப்பாடமாக தமிழ் பயிற்றுவிக்கப்பட உள்ளது. இந்தி, பஞ்சாபி, பெர்சியன் மொழிகளையும் பாடத்திட்டத்தில் சேர்க்க நியூ சவுத் வேல்ஸ் அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆம்புலன்ஸ் தாமதங்களால் உயிரிழப்பு இனி இல்லை வெகு விரைவில் உயிர் காக்கும் கரங்களின் ஆம்புலன்ஸ் சேவை தமிழகம் முழுவதும்முழுவதும்
பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய சுபஸ்ரீ ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் லோடு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 23 வயது பொறியாளரான சுபஸ்ரீ, அலுவலகம் முடிந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் ஓரத்தில் அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் அவரது மகன் திருமணத்துக்கு வைத்திருந்த பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது. அதனால், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது, அங்கே வந்த தண்ணீர் லாரியில் சிக்கி படுகாயமடைந்தார். காயமடைந்த அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி சுபஸ்ரீ உயிரிழந்தார். இதனிடையே அவர் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,, சுபஸ்ரீ விபத்தில் சிக்கி அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
சுபஸ்ரீ விபத்தில் சிக்கியுடன் தண்ணீர் கேட்டு கதறியுள்ளார். அப்போது அருகில் இருந்தார்கள் சுபஸ்ரீக்கு உதவியுள்ளார்கள். உடனே 108ஆம்புலன்ஸுக்கு அழைத்துள்ளார்கள். ஆனால் ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஆக, அங்கிருந்த லோடு ஆட்டோவில் சுபஸ்ரீயை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.