Friday , May 20 2022
Breaking News
Home / உலகம் (page 5)

உலகம்

World

அன்னை தெரசா கல்லூரி நடத்தும் பேச்சரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமா?

அன்னை தெரசா கல்லூரி
திருக்கழுக்குன்றம்
செங்கல்பட்டு மாவட்டம்

தமிழ்த்துறையும் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவையும் இணைந்து நடத்தும் கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான பேச்சரங்கம்

https://forms.gle/KwvuaQ8w1y1eXPd39

நாள் 13/8/2021
நேரம் : காலை 10.00

தலைப்பு : வளர்ச்சி பாதையில் இந்தியா

நிடங்கள் : 3 நிமிடம் மட்டும்

பங்கேற்பாளர்கள் கவனத்திற்கு

 1. ஆரஞ்ச் தமிழ் டாட் காம் வலையொளி வழியாக ஒலிபரப்பப்படும்.
  2.பன்னாட்டளவில் பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள்.
  3.தலைப்புக்கேற்ற பொருண்மையில் மட்டுமே பேசவேண்டும்.
  4.மூன்று நிமிடங்கள் உங்களுக்கானது..
  தமிழ் வணக்கம்
  அவை வணக்கம்
  எடுத்தல்,தொடுத்தல், முடித்தல்,நன்றி என்ற முறையில் உங்கள் பேச்சு இருத்தல் வேண்டும்.
  5.உலக அளவில் சென்று சேர்வதால் அரசியல் கலக்கக் கூடாது.தலைவர்களின் பெயர் உச்சரிக்க வேண்டிய இடம் வரும்போது மதிப்பு மிகு சொற்களை பயன்படுத்த வேண்டும்.உண்மைக்கு புறம்பான சொற்களை தவிர்க்க வேண்டும்.இந்தியாவின் பெருமைகளைப் பறைசாற்றுவதாக மட்டும் இருத்தல் வேண்டும்.
  6.பேச்சரங்கத்திற்கான குவியம் (ZOOM ) அனுப்பப்படும்.
  7.உங்கள் பெயர் அழைக்கப்படும் போது ஒலி,ஒளி வாங்கியினைத் திறந்து பேசுங்கள்.
  8.இணைய அவை ,உடை நாகரிகங்கள் கடைபிடிக்க வேண்டும்.
  9..உங்கள் பெயரினையும் மாவட்டத்தினையும் மட்டும் இங்கே குறிப்பிடுங்கள்.
  10.பதிவுக் கட்டணம் இல்லை
  11.பங்கேற்பாளர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும்.
  வாழ்த்துகள்🙏🙏💐💐💐💐💐

விரைவில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது…

குழந்தைகளின் எதிர் காலத்தை முன்னிட்டு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஒரு சிலர் கேட்கிறார்கள்.

விரைவில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது என மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற்ற தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி பவளவிழா ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்ற புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஆதீன கலைக் கல்லூரியின் பவளவிழா 75வது ஆண்டு துவக்க விழா தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற தெலங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் லலிதா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணாசிங் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

விழாவை, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், திருப்பனந்தாள் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசாமி தம்பிரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், சிறப்புரையாற்றிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், உண்மையாக, கடுமையாக உழைத்தால் யார் வேண்டுமேனாலும் ஆளுனராக முடியும் என்பதை இந்து சமயம் எனக்கு சொல்லிகொடுத்தது, உழைக்க வேண்டும், படிக்க வேண்டும், உண்மையாக இருக்க வேண்டும் என்பதை இறைவழிபாடுதான் சொல்லிகொடுத்தது.

உலகத்தில் வளர்ந்த நாடுகளால் கூட கொரோனாவிற்கு தடுப்பூசி தயாரிக்க முடியாதபோது இந்தியா தடுப்பூசியை தயாரித்து மக்களுக்கு கொடுத்தது என்றால் இந்தியாவும், தமிழகமும் இறைபூமி. இறைவனின் அருள் நமக்கு உண்டு என்றார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பதால், சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்கின்றனர். ஆனால் குழந்தைகளின் எதிர் காலத்தை முன்னிட்டு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஒரு சிலர் கேட்கிறார்கள்.

விரைவில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்றார். மேகதாது பிரச்னை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தமிழிசை சௌந்தர்ராஜன், ஆளுநர் என்பதால் அரசியல் பேச விரும்பவில்லை, ஆனால் காவிரியானாலும், எந்த நதியின் நீரானாலும் மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு சரியாக கிடைக்க வேண்டும் என்பதே என்பதே தனது விருப்பம் என்று தெரிவித்தார்.

Thanks to : news 18

ஜனாதிபதி இன்று அடிக்கல் நாட்டவில்லை!!

மதுரையில் 70 கோடி ரூபாய் மதிப்பில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8 மாடி கட்டிடத்துடன் கலைஞர் நினைவு நூலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.

மதுரையில் அமையவுள்ள கலைஞர் நினைவு நூலகத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளால், ஜனாதிபதி இன்று அதற்கு அடிக்கல் நாட்ட மாட்டார் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மதுரையில் 70 கோடி ரூபாய் மதிப்பில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8 மாடி கட்டிடத்துடன் கலைஞர் நினைவு நூலகம் கட்ட மதுரை – நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது.

அந்த இடத்தில் உள்ள அரசு குடியிருப்பில் பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னி குக் வாழ்ந்துள்ளார் என்றும், அதனை இடிக்க கூடாது என்றும் பெரியாறு – வைகை ஆயக்கட்டு பாசன விவசாயிகள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அதனை தொடர்ந்து அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.
கர்னல் பென்னி குக் இறந்த பின்னரே அந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளதாகவும், எனவே அவர் அங்கு வாழ்ந்ததற்கான சாத்தியங்கள் இல்லை எனவும் விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.

கலைஞர் நினைவு நூலக விவகாரத்தில் எந்தவித சிக்கலும் ஏற்பட்டு விடக்கூடாது எனும் நோக்கில் தான், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 7 இடங்களும் நிராகரிக்கப்பட்டு, தற்போது பொதுப்பணித்துறை வசமுள்ள இந்த இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இதிலும் சர்ச்சைகள் எழுந்துள்ளதால் அரசு குழப்பத்தில் உள்ளது.

சட்டபேரவை நூற்றாண்டு விழா மற்றும் கலைஞர் பட திறப்பு விழாவில் பங்கேற்க இன்று தமிழகம் வரும் ஜனாதிபதி, மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகத்திற்கும் அடிக்கல் நாட்டுவார் என அதிகாரிகள் கூறிவந்த நிலையில், இட சர்ச்சை காரணமாக இன்று அதற்கான அடிக்கல் நாட்டப்படாது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இட சர்ச்சைக்கு உரிய தெளிவு பெற்று முற்றுப்புள்ளி வைத்த பின்னரே, அடிக்கல் நாட்டி பணிகள் துவங்கும் எனவும் அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

Thanks to : news 18

இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு அமல் !!

ஏற்கனவே வார இறுதி ஊரடங்கில் அமலில் இருந்த கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வருவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்தை ஒட்டி கடந்த 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மூன்று நாட்கள் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதற்கு இந்திய மருத்துவ சங்கம், விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள ‘டி’ பிரிவின் கீழ் வரும் பகுதிகளிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது தேவையற்றது. வணிகர்களின் நலனுக்காக பொதுமக்களின் நலனை கைவிட்டது வருத்தமளிக்கிறது

தளர்வுகளால் அரசுக்கு நெருக்கடி

தளர்வுகள் காரணமாக நோய்த்தொற்று அதிகரித்து, அதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டால் அதன் அடிப்படையில் மாநில அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். இந்த சூழலில் தளர்வுகள் முடிவடைந்ததை அடுத்து, இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரள மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

மீண்டும் முழு ஊரடங்கு

அப்போது கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மைக்ரோ நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளை
ஆட்சியர்கள் கண்டறிய வேண்டும். நோய்த்தொற்று பரவலுக்கு ஏற்ப உள்ளாட்சி அமைப்புகள் பிரிக்கப்பட்டிருந்தாலும் ஆட்சியர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

ஆட்சியர்கள் செய்ய வேண்டியது

தேவை ஏற்படும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து புதிய பாதிப்புகளை விரைவாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கேரளா முழுவதும் வரும் 23ஆம் தேதி அன்று 3 லட்சம் கொரோனா பரிசோதனைகளை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மேற்கொள்ள வேண்டும்.

அதில் 7 நாட்கள் TPR சராசரி அளவானது 10 சதவீதத்திற்கும் மேலுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அடுத்தடுத்த நாட்களில் அதிகப்படியான பரிசோதனைகளை செய்து கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Thanks to : samaiyam

உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்க கொள்கை முடிவு…

SpinalMuscularAtrophy எனும் அரிய நோய்க்கான மருந்துகளின் விலை எட்டா உயரத்தில் இருப்பதா?

உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்க கொள்கை முடிவு எடுத்திடுக என வலியுறுத்தி கடிதம் எழுதி இருக்கிறார் முதலைமைச்சர் அவர்கள்…

கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய விருப்பம்” – ஜாக்கி சான்

ஹாங்காங்கை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான், சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார்.

பெய்ஜிங்கில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கடந்த சில ஆண்டுகளில் சீனா பல்வேறு துறைகளில் முன்னேறிவருவதாகவும், பிற நாடுகளுக்கு செல்லும்போது இதனை உணர முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

67 வயதாகும் ஜாக்கி சான், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் வசித்து வருகிறார். ஹாங்காங்கிற்கு எதிராக சீனா பல்வேறு அடக்குமுறைகளை கையாளும் நிலையிலும், ஆளும் சீன கம்யுனிஸ்ட் கட்சிக்கு ஆதரவான கருத்துகளை ஜாக்கி சான் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

வங்கிக் கடன் மோசடி வழக்கில் இந்தியாவில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரி மெகுல் சோக்சி மருத்துவ சிகிச்சைக்காக ஆண்டிகுவா பார்போடஸுக்கு திரும்ப டொமினிக்கா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய மதிப்பில் சுமார் இரண்டே முக்கால் லட்சம் ரூபாய் பிணைத் தொகையாக செலுத்திவிட்டு சிகிச்சை பெறச் செல்லலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

நரம்பு தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதி அளிக்கும்படி மெகுல் சோக்சி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்தியாவிலிருந்து தப்பி சென்றதிலிருந்து ஆண்டிகுவாவில் தங்கியிருந்த மெகுல் சோக்சி டொமினிக்கா தீவுக்கு சென்றபோது சட்டவிரோதமாக நுழைந்ததாக கைது செய்யப்பட்டார். அவரை ஒப்படைக்கவேண்டும் என இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அவர் மீண்டும் ஆண்டிகுவா செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருப்பது அவரை இந்தியா அழைத்து வரும் முயற்சிகளுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

கனடா, அமெரிக்காவில் 100-க்கும் மேற்பட்டோர் பலி…

மேற்கு அமெரிக்கா மற்றும் கனடாவில் முன் எப்போதும் இல்லாத அளவில் வெப்பம் அதிகரித்துள்ளது. கடுமையாக வீசும் அனல் காற்றுக்கு, 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

கடும் வெயில் தாக்கி வெப்ப அலைகள் உருவானதால் ஆங்காங்கே கூலிங் மையங்கள் உருவாக்கப்பட்டன. கனடாவில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் கடும் அனல் காற்று வீசி வருகிறது. இங்குள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த வாரம், 45 டிகிரி செல்சியசாக பதிவான வெப்பநிலை, தற்போது, 49.5 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது. வான்கூவர் நகரில் மட்டும் அனல் காற்றுக்கு 134 பேர் பலியாகியுள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில், கடந்த 26 – 30ம் தேதிக்குள் அனல் காற்று மற்றும் வெப்பத்துக்கு 486 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கனடாவில் அனல் காற்று தொடர்ந்து வீசும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளதால், பொதுமக்கள்பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெப்பத்தை தணிக்க கடற்கரைகளிலும், நீச்சல் குளங்களிலும் குவிந்து கிடக்கும் நிலைக்கு, பெரும்பாலானோர் தள்ளப்பட்டுள்ளனர்.கடும் வெப்பம் காரணமாக கனடாவின் பல பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

கனடா மட்டுமின்றி, அமெரிக்காவின் மேற்கு பகுதியிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளது. காட்டுத் தீயாலும் பாதிப்பு கடும் வெப்பம், அனல் காற்றால் கடுமையாக பாதிக்கப் பட்டு உள்ள கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா மாகாணம், காட்டுத்தீயாலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் வெப்பம் காரணமாக, மேற்கு கனடாவில் உள்ள வனப்பகுதியில் தீப்பிடித்துள்ளது. தீ வேகமாக பரவி வருவதையடுத்து, வனப்பகுதியை ஒட்டியுள்ள பிரிட்டீஷ் கொலம்பியா மாகாணத்தின் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் வடமேற்கு மாகாணமான வாஷிங்டனில் 16 பேர் வெயிலுக்கு பலியாகியுள்ளனர்.

வான்கூவர் பகுதியில் வெப்ப அலை காரணமாக பள்ளிகள், கொரோனா தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டன. தெரு மூலைகளில் தற்காலிக நீரூற்றுகளையும் பனிப்புகை நிலையங்களையும் அங்கு உருவாக்கியுள்ளனர். அனைவருக்கும் குடிநீர் பாட்டில்களும் தொப்பிகளும் வழங்கப்பட்டன.

Thanks to news18

32.8 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது –அமெரிக்கா

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் மாடர்னா, பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 32,81,52,304 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 30 ஆம் தேதி (புதன்கிழமை) வெளியான தகவலின்படி மொத்தம் 32,65,21,526 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அமெரிக்காவில் இதுவரை 18,13,39,416 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், 15,58,84,601 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Thanks to Dinamalar

யூடியூபர் மதன் ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு !!

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடியது, சிறுவர்களைத் தவறாக வழி நடத்தியது, ஆபாசமாகப் பேசி யூடியூப்பில் காணொலி வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பப்ஜி விளையாட்டு மூலம் பிரபலமானவர் யூ-டியூப் கேம் மதன் என்ற மதன்குமார். இவர் மீது சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைம் காவல்துறையில் பலர் புகார் அளித்துள்ளனர். அதில் பப்ஜி விளையாட்டு மூலம் சிறுவர் சிறுமிகளுடன் ஆபாசமாக பேசி லட்சக்கணக்கில் பணம் பறித்து உள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் பிரிவு போலீஸார் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகாமல் தலைமறைவானார். தனது இருப்பிடத்தை கண்டுபிடிக்காதபடி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தப்பி வந்தார். அவரைத்தேடி வந்த போலீஸார் அவரது மனைவி, தந்தையைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவரது மனைவி பெயரில்தான் யூடியூப் இயங்கி வருவதும், மதனுடன் சேர்ந்து யூடியூப் காணொலியில் பேசுவதும் அவர்தான் என்பதும் தெரியவந்ததன்பேரில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தருமபுரியில் தலைமறைவாக இருந்த பப்ஜி மதனை காவல்துறையினர் ஜூன் 18 ஆம் தேதி கைது செய்தனர்.

இதையடுத்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மதனை ஆஜர்படுத்திய போலீஸார் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி மதன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் ஜூன் 28 ஆம் தேதி உத்தரவிட்டது. அவரது மனைவிக்கு மட்டும் 8 மாத கைக்குழந்தையுடன் இருப்பதை கருத்தில்கொண்டு ஜாமீன் வழங்கியது.

இதனையடுத்து ஜாமீன் கோரி மதன் என்ற மதன்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மையில்லை எனவும் எனவே இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன் விசாரணைக்கு வரவுள்ளது.

Thanks to : hindhu tamil

ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளி திறப்பு:

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து அரசுக்கு பிரைமரி, நர்சரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் நந்தகுமார் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் என்னென்ன தளர்வுகள் அறிவிக்கலாம் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவிப்பார்.

பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

தெலங்கானா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கல்லூரிகள், பள்ளிகள் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கர்நாடகாவிலும் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் மற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் கல்வி நிறுவனங்கள் விரைவில் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் பள்ளிகளை படிப்படியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரைமரி, நர்சரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் நந்தகுமார் வலியுறுத்தி உள்ளார்.
முதலில், 10 ,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்கலாம் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார். மேலும், ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிகளை திறக்க அரசை வலியுறுத்தியுள்ளார். அரசின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜூலை இறுதிக்குள் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் ஆகஸ்ட் தொடக்கத்தில் பள்ளிகள் திறப்பு அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

Thanks to : samaiyam

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES