Wednesday , June 7 2023
Breaking News
Home / உலகம் (page 4)

உலகம்

World

ஏழை தொழிலாளிக்கு நிதி உதவி வழங்கிய தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா நிர்வாகிகள்.

தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் தேசிய இயக்குனர் சர்க்கார் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர்.நம்புதாளை பாரீஸ் அவர்களின் ஆலோசனைப்படி, உடல் நலம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ள ஏழை கூலி தொழிலாளி ரவிக்கு,
தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கா.கவியரசு நிதியுதவி வழங்கி அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.


இந்நிகழ்வின்போது மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார், வடக்கு மாவட்ட செயலாளர் சின்னசாமி, இணைத் தலைவர் ஷேக் அப்துல்லா, மாவட்ட இணைச் செயலாளர் பிரகாஷ், மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பவர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பாக மதுரையில் இணைப் பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.!

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பாக மதுரை பழங்காநத்தம் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதாக கூறப்படும் செங்கல்பட்டு மாவட்ட வீட்டு வசதி துணைப்பதிவாளர் உமாதேவியை கண்டித்து மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மாவட்ட செயலாளர் சீனியப்பா முன்னிலை வகித்தார்.TNGEA
மாவட்ட செயலாளர் நீதிராஜா, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் இரா.தமிழ், மாவட்ட இணை செயலாளர்கள் பரமசிவம், ராமதாஸ், மாவட்ட தலைவர் மூர்த்தி, மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ராஜூ, வட்டக்கிளை செயலாளர்கள் முத்துவேல், பழனிவேல் ஆகியோர் ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினர்.

TAGCEA மாநில செயலாளர் சந்திர போஸ் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட பொருளாளர் தீனதயாளன் நன்றியுரை கூறினார்.

மதுரையில் இறந்து கிடந்த நாயை அடக்கம் செய்த தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் நிர்வாகிகள்.!

மதுரையில் இறந்து கிடந்த நாயை அடக்கம் செய்த தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மதுரை மாவட்டம் அழகர்கோவில் ரோடு கடச்சனேந்தல் பகுதியில் சாலை ஓரமாக நாய் ஒன்று இறந்து கிடந்தது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்த்து கொண்டே சென்ற நிலையில் அந்த வழியாக காலையில் வாக்கிங் சென்ற தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா மாநில பொதுச் செயலாளர் கவியரசு மற்றும் மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் வி.பி.ஆர் செல்வகுமார் ஆகியோர் மற்றவர்களை போல் வேடிக்கை பார்த்து செல்லாமல் உடனடியாக மம்பட்டி கடப்பாரையுடன் களத்தில் இறங்கினர்.

பின்னர் அருகில் உள்ள காலி இடத்தில் குழியை தோண்டி நாயை அடக்கம் செய்து பாலை ஊற்றி இறுதி சடங்கை செய்தனர்.

நாய் இறந்து கிடப்பதை வேடிக்கை பார்த்து சென்றவர்களுக்கு மத்தியில் அந்த நன்றியுள்ள வாயில்லா ஜீவனை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்த சமூக சேவகர்கள் கவியரசு மற்றும் வி.பி.ஆர் செல்வக்குமாரை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பெரிதும் பாராட்டினர்.

மதுரை செல்லூரில் சங்கேஸ்வரர் அறக்கட்டளை சார்பாக பொதுமருத்துவ முகாம்.!

மதுரை செல்லூரில் சிறப்பாக செயல்பட்டு வரும் சங்கேஸ்வரர் அறக்கட்டளை நிர்வாகிகள் ஏழை,எளிய மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர். ஒவ்வொரு பிரதோஷம் அன்று சிவபெருமானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்தும் அன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானத்தை வழங்கி வருகின்றனர்.

மேலும் மாணவ,மாணவிகளுக்கு நோட்புக் கல்வி உபகரணங்கள் போன்ற கல்வி உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் செல்லூர் திருவாப்புடையார் கோவில் அருகே உள்ள செங்குந்தர் திருமண மண்டபத்தில் அப்பகுதியை சேர்ந்த ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் அறக்கட்டளை நிறுவனர் ரவிசங்கர் தலைமையில் நடைபெற்றது.

இந்த பொது மருத்துவ முகாமை சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மாமன்ற உறுப்பினர் லோகமணி ரஞ்சித்குமார் தொடங்கி வைத்தார்.

மருத்துவர்கள் கோதை, ஸ்ரீ லேகா, காயத்ரி தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இம்முகாமில் 200- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.மேலும் பிசியோதெரபி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இவ்விழாவில் அறக்கட்டளை தலைவர் ஸ்ரீ சீனிவாசன், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் வீரபாண்டியன், துணைத்தலைவர் சதீஸ்குமார், துணைச்செயலாளர் பாண்டியன்,துணை பொருளாளர் P S சதீஸ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை கோ.புதூர் ஐ.டி.ஐ வளாகத்தில் தமிழ்நாடு தொழில் பயிற்சி அலுவலர் சங்கம் சார்பாக மாநில செயற்குழு கூட்டம்.!

மதுரை கோ.புதூர் அரசினர் ஐ.டி.ஐ வளாகத்தில் தமிழ்நாடு தொழில் பயிற்சி அலுவலர் சங்கம் சார்பாக மாநில செயற்குழு கூட்டம் கிளைத் தலைவர் தோழர் முத்துவேல் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் TNITOA தலைமை நிலைய செயலாளர் சுப்பிரமணியன் துவக்க உரையாற்றினார்.

துணை இயக்குனர் ரமேஷ்குமார், அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வர் கே.எஸ் அமுதா, TNGEA மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்டச் செயலாளர் நீதிராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் இரா.தமிழ் ஆகியோர் வாழ்த்துரை கூறினர். துணை இயக்குனர் ரமேஷ்குமார், மாநிலத் தலைவர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் மாநில செயலாளர் நவநீதன் நன்றியுரை கூறினார்.

மேலும் இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வலிமை டுடே ஆசிரியர் புயல் பாஸ்கர் ஏற்பாட்டில் அன்னதானம் : கா.கவியரசு மற்றும் வி.பி.ஆர் செல்வகுமார் தொடங்கி வைத்தனர்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருள்மிகு ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வலிமை டுடே பத்திரிகை ஆசிரியர் புயல் பாஸ்கர் ஏற்பாட்டில் நடைபெற்ற அன்னதானத்தை தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கா.கவியரசு
மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர் வி.பி.ஆர்.செல்வகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் புறநகர் வடக்கு மாவட்ட தலைவர் திருப்பதி,மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர்
சின்னச்சாமி, இணைச் செயலாளர் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

மதுரை காளவாசல் சிக்னலில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கிய பாஜகவினர்.!

பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தினத்தை முன்னிட்டு மதுரை காளவாசல் சிக்னலில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

முன்னதாக சொக்கலிங்க நகர் பகுதியில் கிளைத் தலைவர் முருகன் தலைமையில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் சிறப்பாக செய்திருந்தார். காளவாசல் மண்டல் தலைவர் முனைவர் பிச்சைவேல் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் மகளிரணி மாவட்ட தலைவி ஓம்சக்தி தனலட்சுமி,
மாவட்ட துணைத் தலைவர் மீனா, மாவட்ட செயலாளர் மெகருன்னிஷா, அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் அருள்மிகு மாரி, மீனவரணி மாவட்ட தலைவர் இளங்கோமணி, இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்டச் செயலாளர் சசிகுமார், உள்ளாட்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் கே.எம் முத்துராஜ், மற்றும் நிர்வாகிகள் சாய் ஸ்ரீராம் கிருஷ்ணமூர்த்தி, ராஜா, துர்க்கை. செந்தில், ஆன்மீக பிரிவு கண்ணன், மாரீஸ்வரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தினத்தை முன்னிட்டு மதுரை காளவாசல் மண்டல் கிளைத் தலைவர்களின் வீடுகளுக்கு சென்று கௌரவித்த பாஜகவினர்.!

மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்தரன் அவர்களின் வழிகாட்டுதலின் படி, பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தினத்தை கொண்டாடும் விதமாக மதுரை மாநகர் காளவாசல் மண்டலுக்கு உட்பட்ட பூத் கிளைத் தலைவர்கள் முருகன், பாண்டியம்மாள், அமுதா, சிவா, மூர்த்தி, தனம், பிச்சை, பரதன், முத்துப்பாண்டி, கார்த்திகேயன் ஆகிய கிளைத் தலைவர்களின் இல்லத்திற்கே நேரில் சென்று அவர்களை கௌரவிக்கும் விதமாக சால்வை அணிவித்தும் இனிப்பு மற்றும் புத்தாடைகளை பாஜக மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் வழங்கி கௌரவித்தார்.

மேலும் 2024 ஆம் ஆண்டு வரவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதிருந்தே களப்பணியை தொடங்குங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு காளவாசல் மண்டல் தலைவர் முனைவர் பிச்சைவேல் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் கே.எம் முத்துராஜ், இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்டச் செயலாளர் சசிக்குமார் மற்றும் நிர்வாகிகள் சிவக்குமார், ஸ்ரீராம், ஆன்மீகப் பிரிவு கண்ணன், ராஜன், ராதாகிருஷ்ணன், மாரிஸ்வரன், பொன்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக வள்ளலார் நினைவு தண்ணீர் பந்தல் திறப்பு விழா.!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக வள்ளலார் நினைவு தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது

கோடை வெயில் கடுமையாக உள்ளதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மதியம் 12:00 மணி முதல் 3:00 மணி வரை வெளிய வர வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் முக்கியமாக வேலை நிமித்தமாக வெளியே வந்தே ஆகவேண்டும் என்று கட்டாயத்தில் உள்ள பொதுமக்கள் வாகன ஓட்டிகள் வெயிலையும் பொருட்படுத்தாது தங்களது பணிகளை செய்து வருகின்றனர். தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் பருக வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பணி நிமித்தமாக வெளியே வரும் திருமங்கலத்தை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.

இவர்களின் கஷ்டத்தை போக்கும் பொருட்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் நீதிமன்றம் அருகே அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக வாடகை கார் ஓட்டுநர் நலச்சங்கம் இணைந்து நீர் மோர் பந்தல் திறந்துள்ளனர்.

திருமங்கலம் நகர் வாடகை கார் ஓட்டுநர்கள் நலச் சங்கத்தின் தலைவர் அரசு கண்ணன் திறந்து வைத்தார். அன்னை வசந்தா டிரஸ்ட் துணைத்தலைவர் ரகுபதி வரவேற்று பேசினார்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருமங்கலம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் இருளப்பன், செயலாளர் சக்கையன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் ஓட்டுநர்கள் நலச்சங்க செயலாளர் ராஜாபாய், பொருளாளர் பெருமாள், துணைத் தலைவர் கனி, நிர்வாக குழு முகமது யாசின், கவிராஜா, அழகுராஜா,டிரஸ்ட் நிர்வாகிகள் தலைவர் அமுதவள்ளி, ஆறுமுகம்,சித்ரா ரகுபதி, அருள்ஜோதி, காளியப்பன், அழகர்சாமி, குருபிரசாத், அன்னபூரணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோடை வெயிலில் மக்களை காப்பதற்காக நீர் மோர் பந்தலை திறந்துள்ள அன்னை வசந்தா டிரஸ்ட் நிர்வாகிகளை பொதுமக்கள் பாராட்டி சென்றனர்.

திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட்டுக்கு வி.பி.ஆர்.செல்வகுமார் இரண்டு அரிசி சிப்பத்தை வழங்கினார்.!

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் அமைப்பின் தேசிய இயக்குனர் சர்க்கார் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் பாரீஸ் வழிகாட்டுதலின் பேரில், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கா.கவியரசு ஆலோசனைப்படி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஏழை,எளிய முதியோர்களுக்கு தொடர்ந்து இடைவிடாமல் 380 நாளாக மதிய உணவை வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் நிர்வாகிகளின் சிறப்பான சமூக சேவையை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் இரண்டு அரிசி சிப்பத்தை, அன்னை வசந்தா டிரஸ்ட் துணைத் தலைவர் ரகுபதி அவர்களிடம் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது வடக்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, மாநில துணைச் செயலாளர் பிரகாஷ் ,மாவட்ட துணைச்செயலாளர் சிவதிருமாறன், டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி, துணைத்தலைவர் ஆறுமுகம், பொருளாளர் அருள்ஜோதி, கௌரவ ஆலோசகர் காளியப்பன், செல்வம் உடன் இருந்தனர்.
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES