Tuesday , July 5 2022
Breaking News
Home / உலகம் (page 35)

உலகம்

World

பாவம் !! 600 பெண்களை ! நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த காமுகன்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்காரர்கள்!

தற்போது தான் தமிழக அளவில் பொள்ளாச்சி சம்பவம் பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஆந்திராவில் 600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த காமூகனின் செயல் அதையும் மிஞ்சுமளவிற்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசி.. 600 பெண்களை.. டிரஸ்ஸை கழற்றுமாறு மிரட்டி.. அவர்களை நிர்வாணமாக்கி.. அதனையும் வீடியோவாக பதிவு செய்து.. லட்சக்கணக்கில் பணம் பறித்த காம வெறி மிருகத்தை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர்தான் ராஜ்செழியன் என்ற பிரதீப். இதனால் நைட் வேலைக்கு போனால் காலையில்தான் திரும்பி வருவார். இவரது மனைவி, ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.

அவர் வழக்கம்போல் காலையில் வேலைக்கு போய்விட்டு சாயங்காலம் வீட்டுக்கு வருவார். நைட் ஷிப்ட் என்பதால் பிரதீப் பகலில் வீட்டில் தனியாகத்தான் இருப்பார். அப்போது, பெண்களின் செல்போன் நம்பர்களை சேகரித்து அவர்களிடம் தினந்தோறும் பேச ஆரம்பித்தார்.

அதில் சில அழகான பெண்கள் தென்பட்டால், அவர்களை ஏமாற்றி பணம் பறிக்கவும் செய்தார். இதற்கு இவருக்கு அர்ச்சனா ஜெகதீஷ் என்ற பெண்ணே உடந்தையாக இருந்தார். “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. ஸ்டார் ஓட்டலில் வேலை.. லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும்” என்று அர்ச்சனா பேசவும், இளம் பெண்கள் அதில் விழுந்துவிடுவர். இதன்பிறகு பிரதீப்தான் இன்டர்வியூ நடத்துவதுபோல அந்த பெண்களிடம் பேச ஆரம்பிப்பார்.
வாட்ஸ்அப் வீடியோ காலில்தான் இந்த இன்டர்வியூ நடக்கும். உங்களுக்கு நல்ல உடல் அமைப்பு இருக்கிறதா, அதை பார்த்துதான் வேலைக்கு எடுக்கலாமா வேணாம்னு சொல்ல முடியும், அதனால உங்க நிர்வாண படத்தை எனக்கு அனுப்பி வைங்க என்று பிரதீப் கேட்க.. லட்சக்கணக்கான சம்பளத்துக்கு ஆசைப்பட்ட பெண்களும் தங்களது நிர்வாண படத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
சில சமயம் வீடியோ கால் மூலமாகவே, டிரஸ்களை கழட்டி உடல் அமைப்பை காட்டும்படி சொல்வாராம். அந்த பெண்களும் அப்படியே செய்திருக்கிறார்கள். இதை எல்லாம் ரெக்கார்ட் செய்து கொண்டு, மீண்டும் அந்த பெண்களிடமே அந்த நிர்வாண படங்களை போட்டு காட்டி, இதை சோஷியல் மீடியாவில் போடாமல் இருக்க வேண்டுமானால், பணம் தேவை என்று மிரட்டுவார்.
இப்படியே லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார். எத்தனை பெண்கள் தெரியுமா.. கிட்டத்தட்ட 600 பெண்களுக்கு மேல்.. இவர்கள் 16 மாநிலங்களை சேர்ந்தவர்கள். இதில் ஆந்திராவை சேர்ந்த ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டும் சந்தேகம் வந்து, இதை பற்றி விசாரிக்கவும்தான், பிரதீப்பின் கோர முகம் வெளிப்பட்டது.


ஐதராபாத் போலீசில் அந்த பெண் புகார் தெரிவிக்க, சென்னையில் பிரதீப்பை கைது செய்தது போலீஸ். அப்போதுதான், பிரதீப்பின் கம்ப்யூட்டர்கள், செல்போன்களை பார்த்து அதிர்ந்து போய்விட்டனர். 2000-க்கும் மேற்பட்ட நிர்வாண போட்டோக்கள், செல்போன், கம்ப்யூட்டர்களை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமான விசாரணை நடந்து வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு #முதலமைச்சரின் #சிறப்பு_குறை_தீர்க்கும்_திட்டம்

#மக்களைத்தேடி_மாவட்ட_நிர்வாகம் என்ற உன்னத நோக்கத்தில் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற உரிய நோக்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 19.08.2019 அன்று சேலம் மாவட்டத்தில் ‘மாண்புமிகு தமிழ்நாடு #முதலமைச்சரின் #சிறப்பு_குறை_தீர்க்கும்_திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.
மேலும், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இத்திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
அதனடிப்படையில், கரூர் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழச்சிகளில், கரூர் நகராட்சி 1,2,3,4,5 வார்டு மற்றும் மண்மங்கலம் வட்டம் கோயம்பள்ளியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.#எம்ஆர்_விஜயபாஸ்கர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.அன்பழகன் அவர்கள் தலைமையில் பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
அவ்வாறு பெறப்படும் மனுக்கள் அனைத்தும் அன்றையதினமே, இத்திட்டத்திற்கென்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யும் முறையில் பதிவுசெய்து, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த மனுக்களின் மீது உரிய விசாரணை செய்து, தகுதிவாய்ந்த நபர்களுக்கு அவர்களின் கோரிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றித்தரும் வகையில், சம்மந்தப்பட்ட துறையின் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
விதிகளுக்குட்பட்டு அரசின் உதவிகளை பெற தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைவருக்கும் உரிய நலத்திட்ட உதவிகள் செப்டம்பர் மாதம் வழங்கப்படவுள்ளது.
எனவே, பொதுமக்கள் இந்த சிறப்பான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற தேவைகளுக்கும், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகைகள் தேவைப்படுவோர்,
மேலும் பொதுமக்கள் நலன் சார்ந்த கோரிக்கை மனுக்களை உங்கள் பகுதிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெற வரும் அரசுத்துறை அலுவலர்களிடம் வழங்கி பயன்பெறவேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
 
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.ம.கீதா, திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.ஏ.ஆர்.காளியப்பன், கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.திருவிகா, மொத்த கூட்டுறவு விற்பனை பண்டகசாலை தலைவர் திரு.நெடுஞ்செலியன், தளவாபாளையம் கூட்டுறவு வங்கித்தலைவர் திருமதி.ரேணுகா, கரூர் நகராட்சி ஆணையர்(பொ) திரு.இராஜேந்திரன், கரூர் வருவாய் கோட்டாச்சியர் திருமதி.சந்தியா,சமுக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் திரு.சரவணமூர்த்தி, மண்மங்கலம் வட்டாச்சியர் திரு.இரவிக்குமார். முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திரு.காமராஜ்,கூட்டுறவு சங்கபிரதிநிதிகள் திரு.கமலக்கண்ணன், திரு.வி.சி.கே.ஜெயராஜ், தமிழ்நாடு திரு.செல்வராஜ், திருமதி.மல்லிகா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நந்தவனம் வாசகர் வட்டம் தொடக்க விழா

கரூர்.

இனிய நந்தவனம் வாசகர் வட்டம் தொடக்க விழா

21/10/2018 அன்று கரூர் மணவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. வழக்கறிஞர் கே.சஹிலா பேகம் தலைமையில் சக்சஸ் சந்ரு வாசகர் வட்டத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் கவிஞர் பா.தென்றல் இனிய நந்தவனம் வளர்ச்சிபற்றி சிறப்புரையாற்றினார் கரூர் மாவட்ட எழுத்தளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . வாசகர்களுடன் சமகால இலக்கியம் , அரசியல் , சமுக அவலங்கள் குறித்து கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டது
விழா ஏற்பாட்டினை சக்சஸ் சந்ரு சிறப்பாக ஏற்பாடு செய்து உதவினர்
தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் வாசகர் வட்டம் தொடங்க இருக்கிறோம் எங்களோடு இணைந்து பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

Tik டிவி. செய்திகள்

கரூர் நகரில் புது பொலிவுடன் இயங்கி வரும் ஸ்ரீ கணேஷ் ஜுவல்லரி மார்ட்.

கரூர்.15.10.2018

கரூர் நகரில் புது பொலிவுடன் இயங்கி வரும் ஸ்ரீ கணேஷ் ஜுவல்லரி மார்ட் நிறுவனமும் தனது தீபாவளி விற்பனையில் விற்பனைக்கு புதிய வகை மாடல்கள் இறக்குமதி செய்யப்பட்டும் வாடிக்கையாளர் விரும்பும் வகைகள் உள்ளன என அறிவிக்கப்பட்டது மக்களும் வாடிக்கையாளர்களும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்த நிறுவனதால் கேட்டு கொள்ளப்பட்டது. ஜவகர் பஜார்.அடையார் ஆனந்தபவன் எதிரில்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES