Tuesday , July 5 2022
Breaking News
Home / உலகம் (page 31)

உலகம்

World

உலகின் மூத்த மொழி தமிழ் மொழி தோன்றிய இடம் – சிவகங்கை கீழடி

கீழடித் தொல்பொருள்களின் காலம் கிமு ஆறாம் (கிமு 600) நூற்றாண்டு என்பது உறுதியாகிவிட்டது. அந்த உறுதிப்பாடு உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நிலத்தின் வரலாற்றுப் பெருஞ்சிறப்புகள் யாவை ?

1. அப்போது புத்தர் பிறந்திருக்கவில்லை. புத்தர் கிமு 563ஆம் ஆண்டுதான் பிறக்கிறார். கீழடித் தொல்லகம் புத்தர் காலத்திற்கும் முந்தி நிற்கிறது. இந்திய வரலாற்றின் முதற்பக்கங்கள் மொகஞ்சதாரோ, அரப்பா, அடுத்து புத்தர், மகாவீரர் என்று தொடங்கும். சான்றுகளைக் கேட்கும் வரலாறு இனி வாயடைத்து நிற்கும். இந்திய வரலாற்றின் முதற்பக்கங்களில் தமிழர் நாகரிகத்தைப் பற்றி இனிக் கூறியாகவேண்டும்.

2. அப்போது அஜந்தாக் குகைகள் குடையப்பட்டிருக்கவில்லை. அஜந்தாக் குகைகளில் புத்தமதச் செல்வாக்கு மிக்கிருப்பதால் அவை புத்தர் காலத்திற்குப் பிறகே பெரும்பாலும் குடையப்பட்டன. அதன் பழைமையான குகையினைக் கிமு இரண்டாம் நூற்றாண்டு வரைக்கும் ஏற்றுக்கொள்கின்றனர். கீழடிச் சான்றுகள் அவற்றுக்கும் முந்தியன.

3. கபாடபுரத்திற்கு நேர்ந்த கடல்கோளின் பின்னர் இன்றைய மதுரை நகரத்திற்குப் பாண்டியர்கள் இடம்பெயர்ந்தனர். அங்கே தோற்றுவித்து வளர்க்கப்பட்டதே கடைச்சங்கம். கடைச்சங்கத்தின் காலம் கிமு இரண்டாம் நூற்றாண்டு என்பதற்கே பலர் பல்வேறு குறுக்கு வழக்குகளோடு வருவர். சான்றெங்கே, ஆதாரம் எங்கே என்று நிற்பர். இப்போது கிமு ஆறாம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துகள் தெளிந்த சான்றுகளாகிவிட்டன.

5. ஆதன், சாத்தன் ஆகிய பெயர்கள் நம் இலக்கண உரைகளில் தொடர்ந்து மேற்கோள் காட்டப்படுகின்றன. ஆதனின் தந்தை ஆந்தை எனப்படுவார். சாத்தனின் தந்தை சாத்தந்தை எனப்படுவார். பிசிர் என்ற ஊரில் வாழ்ந்த ஆதனின் தந்தையே பிசிர் ஆந்தையார் எனப்பட்டார். அகநானூறு, புறநானூறு, நற்றிணை ஆகிய சங்க இலக்கிய நூல்களில் பிசிராந்தையார் பாடிய ஆறு பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவர் யாராயினும் ஆதன் என்ற பெயர் வைக்கும் பழக்கம் தொல் தமிழரிடையே பரந்திருந்தது என்பது வெள்ளிடைமலை. ஆதன் என்பதற்கு உயிர் என்று பொருள். உயிரன்.

6. ஒடிய மாநிலம் புவனேசுவரம் உதயகிரிக் குகைகளின் நெற்றியில் பொறிக்கப்பட்டுள்ள காரவேலனின் கல்வெட்டு பதின்மூன்று நூற்றாண்டுகளாய் நிலவிய சேர சோழ பாண்டியர்களின் கூட்டாட்சி வலிமையைக் கூறுகிறது. “தமிர தேக சங்காத்தம்” என்பது அக்கல்வெட்டினில் உள்ள தொடர். ஒடிய மன்னன் காரவேலன் அசோகருக்குப் பிறகு அப்பகுதியினை ஆண்டவன். கிமு இரண்டாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவன். “அக்கல்வெட்டினில் இருப்பது பதின்மூன்று நூற்றாண்டுகள் இல்லை, வெறும் பதின்மூன்று ஆண்டுகளாகத்தான் இருக்கவேண்டும்” என்ற வழக்கும் ஓடியது. கீழடியில் பெருந்தமிழர் நாகரிகம் செழித்து வளர்ந்திருக்கும் நிலைமையைக் காண்கையில் காரவேலன் கல்வெட்டு கூறுவது பதின்மூன்று நூற்றாண்டுகளாகவே இருக்க வேண்டும்.

7. வைகை ஆறு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு பேராறாக நிறைந்து ஓடியிருக்க வேண்டும். அதன் கரைவெளி எங்கும் பாண்டியப் பேரரசில் பெருவாழ்வு வாழ்ந்த குடிகளின் தடயங்களைக் கண்டெடுத்திருக்கிறோம்.

8. எழுத்துமுறை தோன்றுவதற்கு முன்பே பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேச்சுமுறை நிலவியிருக்க வேண்டும். மொழித்தோற்றத்தின் இளமைக் காலம் இன்னும் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்லும். அனைத்தையும் கொண்டு கூட்டிப் பார்க்கையில் தமிழ் மொழியின் தொன்மையைப் பகரும் சான்றுகள் பல பல்லாயிரம் ஆண்டுகட்கு முந்தியவை என்பது தெளிவாக நம் கண்ணுக்கே தெரிகிறது.

9. கீழடியில் தங்க அணிகள் கிடைத்திருக்கின்றன. தொலைவுத் தேயங்களிலிருந்து வருவிக்கப்பட்ட மணிகள் கிடைத்திருக்கின்றன. மண்ணைக் கொண்டு பாண்டங்கள் செய்தல் என்னும் தொழில்நுட்பம் சிறப்படைந்திருக்கிறது. இருப்புப் பொருள்களும் பல்வேறு மாழைப் பொருள்களும் (உலோகம்) பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. தனிப்பான்மையான குடிவாழ்வின் தன்னிகரற்ற வரலாற்று வளர்ச்சி நிலைகள் இவை.

10. இன்றைய நிலைப்பாட்டிலிருந்து வரலாற்றினைப் பார்ப்பது தவறு. மதங்கள், சாதிகள், பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் என இன்று நாம் பற்றிப் பழகியிருக்கும் சிறுகண்களைக்கொண்டு பழைமையில் தேடுவது நன்றன்று. ஒற்றை நிலையில் ஒரு நிலத்தின் வரலாறும் அமையாது. காலப்போக்கில் அது பல்வேறு நிலைகளுக்கு முகங்கொடுத்தாக வேண்டும். நம் வரலாறெங்கும் அவ்வாறே நிகழ்ந்தது. எது எப்படியாயினும் அன்றைக்கும் இன்றைக்கும் இக்குடிவாழ்வின் பற்றுதலாக இருப்பது ஒன்றேயொன்று. அதுதான் முன்னைப் பழையதும் பின்னைப் புதியதுமான தமிழ்மொழி !

– கவிஞர் மகுடேசுவரன்

ஆஸ்திரேலியாவில் இரண்டாம் மொழிப்பாடத்தில் ‘தமிழ்’

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் மாகாணத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் தமிழ் மொழியும் ஒரு படமாக கற்றுத்தரப்படும் என  நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான தமிழ் மொழிப்பாடம் உள்ளடங்கிய புதிய பாடத்திட்டத்தையும் அம்மாகாண அரசு வெளியிட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இரண்டாவது மொழிப்பாடமாக தமிழ் பயிற்றுவிக்கப்பட உள்ளது. இந்தி, பஞ்சாபி, பெர்சியன் மொழிகளையும் பாடத்திட்டத்தில் சேர்க்க நியூ சவுத் வேல்ஸ் அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆம்புலன்ஸ் தாமதங்களால் உயிரிழப்பு இனி இல்லை – வெகு விரைவில் உயிர் காக்கும் கரங்களின் ஆம்புலன்ஸ் சேவை தமிழகம் முழுவதும்

ஆம்புலன்ஸ் தாமதங்களால் உயிரிழப்பு இனி இல்லை வெகு விரைவில் உயிர் காக்கும் கரங்களின் ஆம்புலன்ஸ் சேவை தமிழகம் முழுவதும்முழுவதும்

பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய சுபஸ்ரீ ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் லோடு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 23 வயது பொறியாளரான சுபஸ்ரீ, அலுவலகம் முடிந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் ஓரத்தில் அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் அவரது மகன் திருமணத்துக்கு வைத்திருந்த பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது. அதனால், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது, அங்கே வந்த தண்ணீர் லாரியில் சிக்கி படுகாயமடைந்தார். காயமடைந்த அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி சுபஸ்ரீ உயிரிழந்தார். இதனிடையே அவர் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,, சுபஸ்ரீ விபத்தில் சிக்கி அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

சுபஸ்ரீ விபத்தில் சிக்கியுடன் தண்ணீர் கேட்டு கதறியுள்ளார். அப்போது அருகில் இருந்தார்கள் சுபஸ்ரீக்கு உதவியுள்ளார்கள். உடனே 108ஆம்புலன்ஸுக்கு அழைத்துள்ளார்கள். ஆனால் ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஆக, அங்கிருந்த லோடு ஆட்டோவில் சுபஸ்ரீயை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.

 பகுத்தறிவு பகலவனுக்கு அகவைதின வாழ்த்துக்கள்.

கடவுள் மறுப்பு கொள்கையோடு மட்டும் இவரை பார்ப்பது, ஒரு புத்தகத்தின் அட்டையை மட்டும் பார்த்தது போன்று தான்…

பகுத்தறிவு பகலவனுக்கு அகவைதின வாழ்த்துக்கள்.

வின்ஸ்டன் சர்ச்சில் மாளிகையில் இருந்து தங்க டாய்லெட் திருட்டுவின்ஸ்டன் சர்ச்சில் மாளிகையில் இருந்து தங்க டாய்லெட் திருட்டு

பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்த பிளென்ஹெய்ம் மாளிகையில் தங்க டாய்லெட் இரு தினங்களுக்கு முன்பு வைக்கப்பட்டது. அதன்மதிப்பு ஒரு மில்லியன் பவுண்ட். இந்திய ரூபாய் மதிப்பில் 8.88 கோடி. இத்தாலிய கலைஞர் மௌரிஸோ கட்டெலன் இந்தத் தங்க டாய்லெட்டை வடிவமைத்திருந்தார்.இதற்கு முன்பாக நியூயார்க்கின் குக்கென்ஹெய்ம் அருங்காட்சியத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,பிளென்ஹெய்ம் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த தங்க டாய்லெட் திருட்டுப் போகியுள்ளது.டாய்லெட் திருட்டு தொடர்பாக லண்டன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குறைந்தபட்சம் இரண்டு வாகனங்களில் இந்த டாய்லெட்டை திருடர்கள் திருடிக் கொண்டு போய் இருக்கலாம் என்று போலீசார் கூறியுள்ளனர்.

இந்தியாவில் நேரு, காந்தி மற்றும் அனைத்து தலைவர்களையும் ஆங்கிலேயர் சிறையில் அடைத்தார்கள்

*இந்தியாவில் நேரு, காந்தி மற்றும் அனைத்து தலைவர்களையும் ஆங்கிலேயர் சிறையில் அடைத்தார்கள்.*

*ஆனால் டாக்டர் பீ ஆர் அம்பேத்காரை மட்டும் ஏன் சிறைச்சாலையில் ஆங்கிலேயர் அடைக்கச் வில்லை தெரியுமா.?*

*பிரிட்டிஷ் நாட்டில் அவர் படித்தச் யுனிவர்சிட்டியில் ஒரு சங்கம் உண்டு. (LAW படித்தவர்களுக்கு மட்டும் அந்த சங்கம், officer club) அந்த சங்கத்தில் உலக அளவில் உள்ள அறிவாளிகள் மட்டுமே உறுப்பினர் ஆக இருக்க முடியும் ஆனால் அவ்வளவு எளிதாக அந்த சங்கத்தில் உறுப்பினர் ஆக முடியாது. ஏன் என்றால் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் அரசியல் அமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்தவர்கள் மட்டுமே அந்த சங்கத்தில் உறுப்பினர் ஆக இருக்க முடியும்.*

*officer club,அந்தச் சங்கத்தில் இந்தியாவில் இருந்து உறுப்பினர் ஆன நபர் ஒரேத் தலைவர் டாக்டர் பீ ஆர் அம்பேத்கர் மட்டுமே. டாக்டர் அம்பேத்காரை கைது செய்ய வேண்டும் என்றால் அந்த சங்கத்தில் முதலில் அனுமதி பெற்ற பிறகே கைது செய்ய முடியும். ஆனால்.அந்த சங்கத்தில் உள்ளவர்கள் தான் நாட்டில் மிகச்சிறந்த தெளிவான, ஆற்றல் பொருந்த்திய அறிவாளியாக இருக்க முடியும்.*

*அப்படி இருக்கும் போது அவர்கள் ஈடுபடும் போராட்டம் எப்படி தவறாகச் இருக்க முடியும். இது தெரியாத ஒரு ஆங்கிலேய அதிகாரி ஒருவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நடத்திய கோவில் நுழைவு போராட்டத்தை பல ஆயிரம் பேரைத் திரட்டி ஈடுபடும் போது டாக்டர் அம்பேத்காரை கைது செய்வேன் என்று பிரிட்டிஷ் அதிகாரி மிரட்டி உள்ளான்.*

*அந்த அதிகாரி. உடனே டாக்டர் அம்பேத்கரை கைது செய்ய முற்படும்போது டாக்டர் அம்பேத்கர் என்னை கைது செய்ய பிடிவாரண்டு இருக்கா என்று கேட்டு உள்ளார்.*

*உடனே அவனும் பிடி வாரண்டு தயார் செய்து கொடுத்துள்ளான். அந்த பிடிவாரண்டை டாக்டர் அம்பேத்கர் டைப் பண்ணி அதை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு
அனுப்பி வைத்தார் அதை பார்த்த பிரிட்டிஷ் அரசு அந்த அதிகாரியை உடனே சஸ்பெண்ட் செய்தது ஏன் என்றால் டாக்டர் அம்பேத்காரை கைது செய்ய வேண்டும் என்றால் பிரிட்டிஷ் நாட்டில் உள்ள உலக அறிவாளிகலுக்கான” officer club” சங்கத்தில் முதலில் அனுமதி பெற்ற பிறகே கைது செய்ய முடியும். ஆனால் டாக்டர் அம்பேத்காரை அவ்வளவு எளிமையாக கைது செய்ய முடியாது. அந்த அதிகாரி இது கூடத் தெரியாமல் இருந்திருக்கிரானே என்பதால் பிரிட்டிஷ் அரசு அவனை உடனே சஸ்பெண்ட் பன்னியது.*

உடனே டாக்டர் அம்பேத்கர் பிரிட்டிஷ் அரசிடம் ஒருத் கோரிக்கை வைக்கிறார் அந்த போலிஸ் அதிகாரியை சஸ்பெண்ட் பன்னுனா மட்டும் போதுமா என்று? அதற்கு உடனே பிரிட்டிஷ் அரசு அனைத்து பிரிட்டிஷ் அதிகாரிகளையும் வெளியேற்றப்பட்டு அந்த அதிகாரியை பிரிட்டிஷ் நாட்டிற்கே வரவழைத்துக் கொண்டது.

*இந்தியாவில் இருந்து இது வரை அந்த சங்கத்தில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்காரை தவிர வேறுயாரும் இது வரை உறுப்பினர் ஆக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.*

சுபஸ்ரீ மரணத்தின் எதிரொலி – மதுரை அஜீத் ரசிகர்களின் உறுதிமொழி

தல அஜித் படங்களுக்கு அவர் புகழைப் பரப்பும் விதமாக எந்த ஒரு நிகழ்விலும் பொது இடங்களில் பேனர் வைக்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்கிறோம் இப்படிக்கு நடிகர் அஜித் அவர்களின் மதுரை ரசிகர்கள்.

சுயவிளம்பரம் செய்யும் ஆளும் ஆண்ட அறநெறி அற்ற அரசியவாதிகளுக்கு என்ன பாடம் கற்பிக்கப்போகிறோம் ???

சுயவிளம்பரம் செய்யும் ஆளும் ஆண்ட அறநெறி அற்ற அரசியவாதிகளுக்கு என்ன பாடம் கற்பிக்கப்போகிறோம் ???.

TNYouthParty – தமிழ்நாடு இளைஞர் கட்சி

நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகங்கள் – பயத்துடன் பயணிகள்

கரூர் .வெள்ளி 12 செப்டம்பர் 19

அச்சத்தில் தமிழகம்… தொடர் வண்டி பேனர்கள் …

சென்னையில் நடந்தது போல நம் பகுதியிலும் நடந்துவிடுமோ என்ற அசத்தில் தமிழக மக்கள். தொடர் பேனர் கலாச்சாரம் ஊரிற்கு ஊர் அதிகரித்து வருவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் இட நெருக்கடியான இடங்களிலும் தொடர் பேனர்கள் அதிகரிப்பால் உயிர் பயத்துடனேயே பயணிக்கின்றனர். நகராட்சி நிர்வாகங்கள் அலட்சிய போக்குடன் இருப்பதாகவும் இனியாவது வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்…

நன்றி சத்தியம் தொலைக்காட்சி.

 

இரா.இராஜ்குமார்.

இளைஞர் குரல்

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES