
மதுரை பாத்திமா நகரில் ஸ்ரீ சுடலை மாடசாமி கோவில் உற்சவ விழாவை முன்னிட்டு நடந்த அன்னதானத்தை குற்ற வழக்கு தொடர்புத்துறை உதவி இயக்குனர் உதயகுமார் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மதுரை பை.பாஸ் ரோடு பாத்திமா நகரில் கள்ளர் குல தொண்டைமான் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ சுடலை மாடசாமி திருக்கோவில் 61-வது உற்சவ விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அன்று நடந்த வில்லிசை நிகழ்ச்சியை பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் அவர்களும், பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சனிக்கிழமை அன்று நடந்த கும்மி பாட்டு நிகழ்ச்சியை தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவனர் திருமாறன் ஜி மற்றும் வடக்கம்பட்டி வி.பி.எம் பட்டாசு கம்பெனி உரிமையாளர் துரைப்பாண்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த மாபெரும் அன்னதானத்தை குற்ற வழக்கு தொடர்புத்துறை உதவி இயக்குனர் மற்றும் சட்ட ஆலோசகர் உதயகுமார் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், திரைப்பட பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டி தலைவர் பொன்னையா, செயலாளர் பொன்ராஜ், பொருளாளர் சங்கர் மற்றும் விழா அமைப்பாளர்கள் அந்தோணி முத்துராஜ், அழகர்சாமி, கோவிந்தராஜ், ஆனந்தகுமார், பிரதீப்மல்லிராஜ், சண்முகம் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.