
மதுரை வடக்குமாசிவீதி அருள்மிகு தாஷ்டீக பாலகுருநாத சுவாமி ,அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா
மதுரை 1500 ஆண்டுகள் பழமையான சிவாலயமாக விளங்கும் தாஷ்டீக பாலகுருநாதசுவாமி, அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு நேற்றுகாலை கணபதி பூஜை ,மண்டப பூஜை, நவகிரக ஹோமம், விமான கலசங்கள் வைத்தல், போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து இன்று அதிகாலை யாகசாலையில் சிவாச்சாரியார்கள்வேதங்கள் முழங்க கடம் புறப்பாடாகி ராஜகோபுரம் விமானங்களில் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தீபாரதனைகளை தொடர்ந்து பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளர் கோ. தளபதி, மதுரை மாநகர மேயர் இந்திராணி பொன் வசந்த், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் , காவல்துறை ஆணையர், மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித்சிங்காலோன், முன்னாள் மேயர் பி .எம்.மன்னன், தொழிலதிபர் பிரபு நாயுடு, தளபதி மாரியப்பன் முன்னாள் மாமன்ற உறுப்பினர், நேரு ஆலால சுந்தர விநாயகர் கோவில் தலைவர் தம்பி பாலன், மற்றும் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்
.இந்நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு பட்டிமன்ற சக்கரவர்த்தி பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் நடுவராக பங்கேற்கும் சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகின்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருக்கோவில் விழா கமிட்டியினர்.குருசாமி பூஜாரியார், திருமலைசாமி பூஜாரியார், ராஜகோபால் சிவாச்சாரியார் ஆகியோர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.