
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டம் கொல்கத்தாவின் பிளே ஆஃப் வாய்ப்பை தீர்மானிக்கும் போட்டியாகும். மோதும் அணிகளின் பலம், பலவீனம் குறித்த ஒரு அலசலே இந்த முன்னோட்டம்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டம் கொல்கத்தாவின் பிளே ஆஃப் வாய்ப்பை தீர்மானிக்கும் போட்டியாகும். மோதும் அணிகளின் பலம், பலவீனம் குறித்த ஒரு அலசலே இந்த முன்னோட்டம்
நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் இறுதி ஆட்டத்தை எட்டி இருக்கிறது. ஒவ்வொரு அணிகளுக்கும் 13 போட்டிகள் முடிவடைந்து கடைசி லீக் ஆட்டத்தில் களம் இறங்குகின்றன.
இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை டி.ஒய்.பாடீல் மைதானத்தில் நடைபெறும் 66 ஆவது லீக் ஆட்டத்தில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட் அணியும் – ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரு அணிகளும் கடைசி லீக் ஆட்டத்தில் களம்காண்பதுடன் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் போட்டியாக இந்த ஆட்டம் அமைந்துள்ளது.
லக்னோ அணியை பொறுத்தவரை 13 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பதுடன் ஏறக்குறைய பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றியை வசப்படுத்தினால் முதலிரண்டு இடத்துக்கு முன்னேற முடியும் என்பதால் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து நான்கு ஆட்டங்களில் வெற்றியை வசப்படுத்திய லக்னோ கடைசியாக விளையாடிய 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்ததால் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளது. பேட்டிங்கில் கே.எல்.ராகுல், டி காக், ஹூடா ஆகிய மூவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர், ஒட்டுமொத்த அணியின் எண்ணிக்கையில் 61 விழுக்காடு இவர்கள் அடித்ததே.
மிடில் ஆர்டரில் விளையாடும் பதோனிக்கு மாற்றாக மணிஷ் பாண்டே, ஸ்டாய்னிஸ்-க்கு பதில் லிவிஸை களமிறக்க வாய்ப்புள்ளது. பந்துவீச்சில் அவேஷ் கான், பிஸ்னாய், ஹோல்டர் ஆகியோர் அசத்தி வருகின்றனர்.
கொல்கத்தா அணியை பொறுத்தவரை 13 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. சுனில் நரைனின் பேட்டிங்கை காலி செய்ததுதான் கொல்கத்தாவின் கைங்கரியமாக இருந்து வருகிறது, நிச்சயம் அவரை தொடக்கத்தில் இறக்கி விட்டால் பவர் ப்ளேயில் துவம்சம் செய்தால் கொல்கத்தா பெரிய இலக்கை எட்டி, பெரிய மார்ஜினில் வென்று நல்ல நெட் ரன் ரேட்டுடன் மற்ற முடிவுகளுக்காக காத்திருக்கலாம்.
இந்த போட்டியில் இமாலய வெற்றியை பதிவு செய்தாலும் அடுத்து நடைபெறவுள்ள போட்டி முடிவுக்காக கொல்கத்தா காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ரஹானேவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதில் பாபா இந்திரஜித் அல்லது ஷெல்டன் ஜேக்சன் களமிறக்கப்படவுள்ளனர். உமேஷ் யாதவ் காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியது கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சுனில் நரைன் ரன்களை விட்டுக்கொடுக்காமல் அசத்தி வருகிறார். ஆறு ரன்களுக்கும் குறைவான சிக்கன விகிதத்தில் வலம்வருவது எதிரணியை மிரட்டுகிறது.
கேப்டன் ஷ்ரேயஸ் எழுச்சி பெறவேண்டியது அணியின் அவசர தேவையாகும். கடைசியாக விளையாடிய ஆறு போட்டிகளில் 115 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். மிடில் ஆர்டரில் இவர் அசத்தினால் மட்டுமே இமாலய ஸ்கோரை எட்டமுடியும்.
THANKS TO : NEWS 18 TAMIL