Wednesday , June 7 2023
Breaking News
Home / உலகம் (page 10)

உலகம்

World

பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழக நலன் பிரிவின் மதுரை மாவட்ட செயலாளராக ஆர்.சசிக்குமார் நியமனம்.!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம் ஜி, பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் ஆகியோர் வழிகாட்டுதலின் படியும், மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் ஒப்புதலோடும், பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழக நலன் பிரிவின் மதுரை மாவட்ட செயலாளராக ஆர்.சசிக்குமாரை, மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் நியமனம் செய்துள்ளார்

புதிதாக நியமனம் செய்யப்பட்ட சசிக்குமாருக்கு நிர்வாகிகள் ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முன்னணி வர்த்தக மின் வாகன உற்பத்தியாளரான அல்டிகிரீன் டீலர்ஷிப் மையம் மதுரையில் துவக்கம்.!



இந்தியாவின் முன்னணி வர்த்தக மின் வாகன உற்பத்தியாளரான அல்டிகிரீன், தமிழ்நாட்டில் தனது 3-வது விற்பனை டீலர்ஷிப் மையத்தை மதுரை ஆரப்பாளையம் புட்டுத்தோப்பு பகுதியில் தொடங்கியுள்ளது.

இது நாடு முழுவதும் சமீபகாலத்தில் துவக்கப்பட்ட 25-வது சில்லரை விற்பனை மையமாகும். கோவையில் டீலர்ஷிப் மையத்தை அமைத்த மகாசக்தி குழுமமே மதுரையிலும் டீலர்ஷிப் மையத்தை அமைத்துள்ளது.

இந்த விற்பனை மையத்தை அல்டிகிரீன் தலைமை செயல் அதிகாரி அமிதாப் சரண் தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது:
தமிழ்நாட்டில் துவக்கப்பட்டுள்ள இந்த 3-வது டீலர்ஷிப் மையத்தின் வாயிலாக தேசிய அளவில் மின் வர்த்தக வாகனங்களுக்கான வலுவான கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துச் சென்றுள்ளோம்.

இந்தியாவில் வேகமாக வளர்ச்சி பெற்று வரும் இரண்டாம் நிலை நகரங்களில் வாடிக்கையாளர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் சந்தை கட்டமைப்பை உருவாக்கும் செயல்திட்டத்தின்படி, மதுரையில் இந்த விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

பல்வேறு பிரிவுகளில் உலகத் தரம் வாய்ந்த வாகனங்களை உற்பத்தி செய்து அளிக்க திட்டமிட்டுள்ளோம். இவற்றின் விற்பனைக்காக மகாசக்தி குழுமத்துடன் கூட்டுறவை தொடர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மகாசக்தி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டி.கே தனசேகரன் பேசுகையில், அல்டிகிரீன் நிறுவனத்துடன் இணைந்து மதுரையில் ஒரு மின்சார வாகன புரட்சியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளோம்.

தமிழ்நாடு அரசின் புதிய மின் வாகனக் கொள்கையின் படி, தமிழ்நாட்டில் மின் வாகனங்களுக்கு அனுமதி கட்டணம், சாலை வரி, பதிவு கட்டணம் போன்றவை ரத்து செய்யப்படுகிறது. மேலும் மின் வாகனங்களுக்கு மாறும் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தக் கூடியதாகவும், கட்டுப்படியாகக் கூடிய விலையில் கிடைக்கச் செய்யும் வகையிலும் வாகனங்களை உருவாக்கி காற்று மாசற்ற போக்குவரத்தை கட்டமைக்கும் நோக்கத்தினை நிறைவேற்றும் பணிகளை விரைவுபடுத்துவோம் என்றார்.

மதுரை மாவட்ட தொழில் மையம் மற்றும் பெட்கிராட் இணைந்து நடத்தும் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு (PMEGP) திட்ட விழிப்புணர்வு முகாம்.!

மதுரை மாவட்ட தொழில் மையம் மற்றும் பெட்கிராட் இணைந்து நடத்தும் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு (PMEGP) உருவாக்கும் திட்டத்தின் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் எஸ்.கணேசன் தலைமையில் எஸ்.எஸ் காலனியில் உள்ள பெட்கிராட் கூட்ட அரங்கில் நடைபெற்றது.


பெட்கிராட் நிர்வாக இயக்குனர் எம்.சுப்புராம் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
KVIC மண்டல இயக்குனர் அசோகன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

KVIB பொது மேலாளர் தேவராஜ் திட்டங்கள் குறித்து பேசினார்.
மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர்கள் கிருஷ்ணன், முகமது மசூது, உதவி பொறியாளர் அனீஷ் ஆகியோர் மானியத்துடன் சுயதொழில் துவங்க ஏதுவாக உள்ள அனைத்து திட்டங்களையும் விளக்கிப் பேசினார்.

இந்நிகழ்வில் பெட்கிராட் பொதுச்செயலாளர் அங்குச்சாமி, பொருளாளர் கிருஷ்ணவேணி, செயலாளர் சாராள்ரூபி, துணைத்தலைவர் மார்ட்டின் லூதர்கிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆதரவற்ற நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் எஸ்டிபிஐ கட்சியின் மூலம் வழங்கப்பட்டது.

இதனை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் ரத்தினவேல் அவர்களிடம் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மதுரை வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன், தெற்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் சிராஜுதீன் ஆகியோர் வழங்கினார்கள்.

இதில் அரசு ராஜாஜி மருத்துவமனையின் மருத்துவர்களும் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் சார்பாக ஏழை, எளியோருக்கு அன்னதானம்.!

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் அமைப்பின் தேசிய இயக்குனர் சர்க்கார் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு மாநிலத் தலைவர் டாக்டர்.பாரீஸ் வழிகாட்டுதலின்படி , தமிழ்நாடு பொதுச்செயலாளர் கா.கவியரசு தலைமையிலும், மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் முன்னிலையிலும், மதுரை கோரிப்பாளையம் அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே ஏழை, எளிய மக்களுக்கு காலை உணவு மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது.

பின்னர் கே.புதூர் காந்திபுரம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள பெரியோர்களுக்கு மதிய உணவு மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி, மதுரை மாநகர் தெற்கு மாவட்ட தலைவர் சங்கர்பிரபு, தெற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், புறநகர் வடக்கு மாவட்ட தலைவர் திருப்பதி, செயலாளர் விஜயராஜா, துணைச்செயலாளர் பஸ்ஸ்டாண்ட் அசோக், வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பிரகாஷ், ஷேக் அப்துல்லா, பால் முனீஸ்வரன், மணிகண்டபிரபு, கவிஞர் மணிகண்டன், மாவட்ட மகளிரணி செயலாளர் இளமி.நாச்சியம்மாள், துணைச் செயலாளர்கள் திவ்யபாரதி, சுமதி, வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்க நிர்வாகிகள் வீரமணி பிரபு, ரமேஷ் காந்தி தங்கப்பாண்டி, ஜெயபாண்டி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறையில் தொழிலதிபர் நடத்திய சமபந்தி போஜனம்.!


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், திமுக பிரமுகருமான ப.ஷாவலியுல்லாஹ் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுடன் சமத்துவத்தை பேணும் வகையில் திமுக சார்பில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் தனியார் திருமண மண்டபத்தில் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம். முருகன், சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், தஞ்சை மண்டல தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர், மயிலாடுதுறை நகர செயலாளர் மற்றும் நகர மன்ற தலைவர் செல்வராஜ், உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து வட மாநிலத் தொழிலாளர்களுக்கு சால்வை, மாலைகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள்,பெண்கள் என்று வட மாநில தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர்.

அனைவருக்கும் மதிய விருந்து பரிமாறப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட திமுக பொறுப்பாளர்கள் சமபந்தி விருந்தில் அமர்ந்து உணவு உட்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி பற்றி தெரிவித்த தொழிலதிபர் ப.ஷாவலியுல்லாஹ் மயிலாடுதுறை மட்டுமன்றி தமிழக முழுவதும் தொடர்ந்து இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும், அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தை சீர்குலைக்க நடைபெறும் சதித்திட்டத்தை திமுகவினர் ஒன்றிணைந்து முறியடிப்பார்கள் என்று கூறினார்.

மதுரையை சேர்ந்த உமா மகேஸ்வரிக்கு புதுமைப்பெண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

திருச்சியில் தமிழச்சி கூட்டமைப்பு மற்றும் அவார்டு இந்திய அறக்கட்டளை சார்பாக விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது

இதில் மதுரையை சேர்ந்த உமா மகேஸ்வரி அவர்களின் பல்வேறு சமூக சேவையை பாராட்டி புதுமைப்பெண் விருதை தமிழச்சி கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் லதா கலைவாணன்,சேலம் மாவட்ட தலைவர் கனகாம்பாள், இயற்கை இந்தியா நிறுவனர் சின்னய்யா நடேசன் ஆகியோர் வழங்கி கௌரவித்தனர்.

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் மத்திய 2-ஆம் பகுதி அதிமுக சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம்.!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட மத்திய 2-ஆம் பகுதி கழகத்தின் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் ஆரப்பாளையம் கிராஸ் ரோடு திருமலை நாயக்கர் சிலை அருகே நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்திற்கு மத்திய 2-ஆம் பகுதி கழகச் செயலாளர் ஞானசேகரன் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாநகர் மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் பாண்டிச்செல்வி ஞானசேகரன் சிறப்பாக செய்திருந்தார்.

இந்நிகழ்வில் பகுதி கழகச் செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஈரோட்டை சேர்ந்த கவிதாவுக்கு புதுமைப்பெண் விருது வழங்கி கௌரவிப்பு.!

திருச்சியில் தமிழச்சி கூட்டமைப்பு மற்றும் அவார்டு இந்திய அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் ஈரோட்டை சேர்ந்த சமூக சேவகி கவிதாவுக்கு, அவரின் ஆன்மீக சேவையை பாராட்டி புதுமைப்பெண் விருதை தமிழச்சி கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் லதா கலைவாணன் மற்றும் சேலம் மாவட்ட தலைவர் கனகாம்பாள், இயற்கை இந்தியா நிறுவனர் சின்னய்யா நடேசன் ஆகியோர் வழங்கி கௌரவித்தனர்.

தொடர்ந்து இடைவிடாமல் 360 நாளாக உணவு வழங்கி வரும், மதுரை மாவட்டம் திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் நிர்வாகிகளுக்கு குவியும் பாராட்டு.!!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக தினமும் ஏழை, எளியோர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் 360-வது நாளான இன்று சனிக்கிழமை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமங்கலம் நகர்மன்ற 23-வது வார்டு உறுப்பினர் அமுதா சரவணன் தலைமையேற்று 60-க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு மதிய உணவை வழங்கினார்.

இந்நிகழ்விற்கு டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி பழனி முருகன், துணைச் செயலாளர் எஸ்.எம் ரகுபதி, அறங்காவலர்கள் குருபிரசாத்,அன்னபூரணி, பொருளாளர் அருள்ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து இடைவிடாமல் 360-நாளாக ஏழை எளியோர்களுக்கு உணவை வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES