மதுரை பீ.பீ.குளம் அருகே உள்ள மருதுபாண்டியர் நகரில் பாஜக சார்பில் தூய்மைப்பணி முகாம் மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் பாஸ்கரன் ஜி சிறப்பாக செய்திருந்தார்.
இதில் மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், விளையாட்டு மற்றும் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் செந்தில்குமார், மண்டல் தலைவர் மாணிக்கவேல், மகளிரணி மாவட்ட தலைவி ஓம்சக்தி தனலட்சுமி,மண்டல் பொதுச் செயலாளர் சுரேஷ், பாண்டியராஜன், மண்டல் பொருளாளர் குட்டி என்ற மணிவண்ணன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் தூய்மை பணியாளர்களுக்கு முக கவசங்களையும் அவர்கள் வழங்கினர்.
மதுரையில் பாஜக ஊடகப்பிரிவு நிர்வாகிகள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்
விருதுநகர் மாவட்டத்திற்கு ரூபாய் 2000 ஆயிரம் கோடியில் ஜவுளி பூங்கா அறிவித்த பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்து பா.ஜ.க.மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் சாத்தூரில் இருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை மார்ச் 31ம் தேதி வெள்ளிகிழமை மாலை 4 மணிக்கு செல்கிறார்.
அதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மதுரை அண்ணா பஸ் நிலைய பகுதிகளில் பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்பட வியாபார நிறுவனங்களுக்கு பாஜ.க.ஊடக பிரிவு மாநில செயலாளர் நாகராஜன், மதுரை மாவட்ட ஊடக பிரிவு மாவட்ட தலைவர்கள் செல்வமாணிக்கம் ,ரவிசந்திரபாண்டியன், காளிதாஸ் நிர்வாகிகள் பாஸ்கர் குமார் உள்பட பலர் வழங்கினர்.
சென்னை வடபழனி முருகன் கோவில் அருகே உள்ள சண்முகம் திருமண மண்டபத்தில், தமிழக திரைப்பட துணை நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்பட உதவியாளர் நல சங்கம் சார்பாக மகளிர் தின விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாநில தலைவி கடலூர் சாந்தி, துணை தலைவி மேரி தலைமை வகித்தனர். சென்னை மாவட்ட தலைவர் திராவிடன் முன்னிலை வகித்தார்.
இதில் கலாவதி, கலைச்செல்வி, செல்வி.சாஸ்திரி, பாண்டிச்சேரி வசந்தி,சுமதி, லெட்சுமி,தேவி, K.R லெட்சுமி, மதுரை சுப்புலெட்சுமி ஆகியோர் வரவேற்று பேசினர்.
முன்னாள் மத்திய உளவுத்துறை அதிகாரி திரைப்பட நடிகர் வடுகபட்டி எம்.செல்வம், பிசிகரன், மாநில தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் பாஸ்கர், பொருளாளர் ராஜேந்திரகுமார், அமைப்பு செயலாளர் கமலக்கண்ணன், துணைத்தலைவர் நடராஜன், துணை செயலாளர் K.R வெங்கட் சத்திய மூர்த்தி, செயற்குழு உறுப்பினர் அய்யாசாமி, , செங்கல்பட்டு மாவட்ட தலைவர் விஜயராம், திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஆறுமுகம், சென்னை மாவட்ட செயலாளர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவின் முடிவில் கேஸ்டிங் டைரக்டர் மதுக்கூர் சத்யா நன்றியுரை கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
அந்த வகையில் மதுரையில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா தலைமையில் கட்சி நிர்வாகிகள் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்வில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் கணேஷ்பிரபு, மற்றும் பகுதி கழக செயலாளர்கள், வட்டக்கழக செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ராகுல் காந்தி அவர்களின் தகுதி நீக்கம் தொடர்பாக விவாதிக்க வேண்டும்.
இன்று (28-03-2023) நாடாளுமன்றத்தில் *தலைவர் ராகுல் காந்தி அவர்களின்* தகுதி நீக்கம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று ஒத்திவைப்புத் தீர்மானம் *நமது கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.செ.ஜோதிமணி அவர்கள்* கொடுத்துள்ளார்.
இந்திய கோர்ட்டில் நடைபெறும் ராகுல்காந்தி மீதான வழக்கை கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திரமோடி, நீரவ் மோடி, லலித் மோடியை குறிப்பிட்டு ‘அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்று முடிகிறது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
மோடி சமூகம் குறித்து அவதூறு ஏற்படுத்தும் என்ற வகையில் பேசியதாக கூறி ராகுல்காந்தி மீது பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும், முன்னாள் மந்திரியுமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த 24-ம் தேதி ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதேவேளை, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய ராகுல்காந்திக்கு அவகாசம் வழங்கி 30 நாட்கள் ஜாமினும் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. மேலும், ராகுலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்திலும் எதிரொலித்து வருகிறது.
இந்நிலையில், அவதூறு வழக்கில் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட நிகழ்வு தொடர்பாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெள்ளைமாளிகை துணை செய்தித்தொடர்பாளர் வேதாந்த் படேலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்திற்கு மரியாதை அளிப்பது எந்த ஜனநாயகத்திற்கும் அடிப்படை.
இந்திய கோர்ட்டில் நடைபெறும் ராகுல்காந்தி மீதான வழங்கை நாங்கள் கவனித்து வருகிறோம்.
தென் தமிழகத்தில் முதன்முறையாக மதுரையில் உள்ள அப்போலோ சிறப்பு மருத்துவமனை மற்றும் சொசைட்டி ஆஃப் நியூரோ கிரிட்டிக்கல் கேர் இந்தியாவுடன் இணைந்து நடத்தப்படும் விரிவான நரம்பியல் சிகிச்சை படிப்பு கற்றுத் தரப்படுகிறது.
மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நரம்பியல்துறை மயக்கவியல் நிபுணர் மற்றும் நியூரோ கிரிட்டிகல் கேர் ஆலோசகர் டாக்டர். பி. நிஷா கூறியதாவது
“நரம்பியல் சிகிச்சை என்பது நரம்பியல் கோளாறு அல்லது நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மிகவும் தனித்துவம் வாய்ந்த மருத்துவ பகுதியாகும். இந்த நோயாளிகளுக்கு சிறந்த மேற்பார்வை மற்றும் தனிப்பட்ட கவனிப்பு தேவைப்படுகிறது. இவற்றிற்கு இதற்கென சிறப்பு பயிற்சி மருத்துவ குழுவிற்கு தேவைப்படுகிறது. நியூரோ அனாட்டமி, நியூரோ பிசியாலஜி, நியூரோ இமேஜிங், மற்றும் நரம்பியல் நெருக்கடிகளை நிர்வகித்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் இந்தியாவில் உள்ள தலைசிறந்த நரம்பியல் மற்றும் நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர்களால் நிறுவப்பட்ட பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நரம்பியல் நிபுணர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள், அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் மற்றும் பிற உடல்நல பராமரிப்பு நிபுணர்கள். சிக்கலான நரம்பியல் பிரச்சனைகள் உள்ள நோயாளிகளை திறம்பட நிர்வகிப்பதற்கு தேவையான அவர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதில் ஆர்வமுள்ள பயிற்சி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வகுப்பறை பயிற்சி, நடைமுறை பயிற்சி மற்றும் பட்டறை பயிற்சியின் கலவையாக அமையும். நியூரோ கிரிட்டிகல் கேர் கோர்ஸ் தொடங்கப்பட்டிருப்பது தென் தமிழகத்தில் உள்ள மக்களுக்கு வரவேற்கத்தக்க வளர்ச்சியாகும்.
இரண்டு நாள் படிப்பு மார்ச் 25, 2023 முதல் மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் தொடங்குகிறது. டெல்லி எய்ம்ஸ், பிஜிஐ சண்டிகர், நிம்ஹன்ச் பெங்களூர், சிஎம்சி வேலூர் ஆகிய இடங்களில் இருந்து சுமார் 60 பிரதிநிதிகள் மற்றும் பேராசிரியர்கள் பாடத்திட்டத்தில் பங்கேற்கின்றனர்.”
இதுகுறித்து டாக்டர். பிரவீன் ராஜன்-ஜேடிஎம்எஸ் அப்போலோ மருத்துவமனை, மதுரை அவர்கள் பேசுகையில் “அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நரம்பியல் அவசர நிலை நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த சிகிச்சையை வழங்குவதற்காக பிரத்தியேக நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவை அறிமுகப்படுத்தி நோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அளித்துக் கொண்டிருக்கிறது. நரம்பியல் சிகிச்சை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த மருத்துவ துறையாகும். இது நரம்பியல் காயங்கள் அல்லது கோளாறுகள் உள்ள நரம்பியல் நோயாளிகளின் மேலாண்மையை கையாள்கிறது. இந்த நோயாளிகளுக்கு தீவிர கண்காணிப்பு மற்றும் சிறப்பு சிகிச்சை தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட சிகிச்சை வழங்குவதற்கு சிறப்பு பயிற்சி தேவைப்படுகிறது. பக்கவாதம், அதிர்ச்சிகரமான மூளைக்காயம், மூளை மற்றும் முதுகெலும்பு கட்டிகள், தலையில் காயங்கள் மற்றும் வலிப்பு தாக்கங்கள் போன்ற முக்கியமான நரம்பியல் பிரச்சனைகள் கொண்ட நோயாளிகளை திறம்பட நிர்வாகிப்பதற்கு தேவையான அறிவு மற்றும் திறன்களை மருத்துவ நிபுணர்களுக்கு வழங்குவதற்காக இந்த பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.” அப்போலோ மருத்துவமனையின் மதுரை மண்டல தலைமை செயல் அதிகாரி திரு. நீலக்கண்ணன் கூறுகையில் “உலக தலை காயம் தினத்தை முன்னிட்டு மூளை காயத்தில் இருந்து குணமடைந்த இருவர் தங்களின் அனுபவங்களை பற்றி விவரித்தனர் அவர்களின் பேச்சு எங்கள் அப்போலோ மருத்துவமனையின் நரம்பியல் சிகிச்சை துறையின் வல்லுநர்களின் திறன் குறித்து நாங்கள் பெருமைப்படும் வகையில் இருந்தது.”
மூத்த ஆலோசகர் நரம்பியல் நிபுணர் டாக்டர். எஸ். என். கார்த்திக் கூறுகையில் “இடது பக்க பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 60 வயது ஆணுக்கு மூளையில் அழுத்தம் அதிகரித்து ரத்தக் கசிவு ஏற்பட்டு சுய நினைவற்ற நிலையில் இங்கு அழைத்துவரப்பட்டார் அவருக்கு முக்கியமான உயிர் காக்கும் அவசர அறுவை சிகிச்சை உடனடியாக தாமதமின்றி எங்களது மருத்துவ நிபுணர்களால் வழங்கப்பட்டு அவரது உயிர் காப்பாற்றப்பட்டு பின்னர் பக்கவாத பிரிவுக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டார்.”
மேலும் டாக்டர்கள் குழு டாக்டர். எஸ். மீனாட்சி சுந்தரம் மூத்த ஆலோசகர் நரம்பியல் நிபுணர், டாக்டர். பி. சுரேஷ் மூத்த ஆலோசகர் நரம்பியல் நிபுணர், டாக்டர். எஸ். சுந்தர்ராஜன் முதுநிலை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் ஜே கெவின் ஜோசப் முதுநிலை ஆலோசகர் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், மார்க்கட்டிங் மண்டல பொது மேலாளர் கே. மணிகண்டன், அப்போலோ மதுரை தலைமை அதிகாரி டாக்டர். நிகில் திவாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
38 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் மரியாதை: கொண்டாடித் தீர்த்த மதுரை ரசிகர்கள்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குனர் இமயம் பாரதிராஜா, இசைஞானி இளையராஜா ஆகியோரது வெற்றி கூட்டணியில், கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியாகி 125 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடிய வெற்றித் திரைப்படம் முதல் மரியாதை.
படத்தின் பாடல் என்று பட்டிதொட்டி எங்கும் ரசிகர்களை 85 காலகட்டத்தில் முணுமுணுக்க வைத்ததது.படத்தில் பாடல்களை எழுதிய வைரமுத்து, இயக்குநர் பாரதிராஜா ஆகியோருக்கு தேசிய விருதும் கிடைத்தது.
மண்ணின் மனத்தோடு எடுக்கப்பட்டதால், இன்றைக்கும் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடுகிறார்கள்.தற்போது நவீன தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் முறையில் ரி ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் மதுரை மற்றும் தமிழகம் முழுவதும் 50 திரையரங்குகளில் வெள்ளியன்று வெளியாகி முதல் மரியாதை படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
அதிலும் எதார்த்த சினிமாக்களை தங்களது தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடும் மதுரை சினிமா ரசிகர்கள் வயது வித்தியாசம் இன்றி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் முதல் மரியாதை படத்தை கொண்டாடி தீர்க்கின்றனர்.
அப்போதைய கல்பனா திரையரங்கம் என சினிமா ரசிகர்கள் கொண்டாடிய தற்போதைய மதுரை அண்ணாமலை திரையரங்கம் முன்பாக சிவாஜி பைன் ஆர்ட்ஸ் குணசேகரன் தலைமையில் , சிவாஜி பைன் ஆர்ட்ஸ் ஆசிரியத்தேவன் முன்னிலையில் கூடிய ஏராளமான சிவாஜி கணேசன் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் ஞாயிற்றுக்கிழமை மாலை நேர காட்சியை அலங்கரித்தனர்.
டிக்கெட் விற்பனையான சில மணி நேரத்திலேயே திரையரங்கம் நிறைந்து ஹவுஸ் ஃபுல் காட்சியாக மாறியது அனைவரையும் வியக்க வைத்தது.
வயது வித்தியாசம் இன்றி கூடிய ரசிகர்கள் திரையரங்கிற்கு வெளியேயும் உள்ளேயும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ஆதரவு குரல் எழுப்பி தங்களது இரண்டாம் மரியாதையை கொடுத்தனர்.
திரைப்படம் குறித்து நம்மிடம் பேசிய சிவாஜி பைன் ஆர்ட்ஸ் செய்தி தொடர்பாளர் ஆசிரியத்தேவன், உலகத்தில் ஒரே வானம் ஒரே பூமி அதே போல் ஒரே நடிகர் செவாலியர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டும்தான். அவரது திரைப்படங்கள் கர்ணன் ராஜபார்ட் ரங்கதுரை, பட்டிக்காடா பட்டணமா இவையெல்லாம் எப்படி மறுபடியும் டிஜிட்டல் ரிலீஸ் ஆகி வெற்றி நடை போட்டதோ அதனை விட மாபெரும் வெற்றியை முதல் மரியாதை பெறும் என சிலாகித்துக் கூறினார். மேலும் முதல் மரியாதை படத்தை பொறுத்தவரை மலைச்சாமி என்ற கதாபாத்திரத்திற்கு மிக கச்சிதமாக பொருத்தப்பட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அதனை சரியாக செய்தவர் இயக்குனர் பாரதிராஜா என கூறியதோடு, சித்திரை திருவிழாவிற்கு முன்னர் சிவாஜி திருவிழாவை கொண்டாடுகிறோம்என பெருமிதத்தோடு குறிப்பிட்டார். பேட்டியின் போது தேனூர் சாமிக்காளை உடன் இருந்தார்
இனி எத்தனை படங்கள் வந்தாலும் நடிகர் திலகத்திற்கு தனி மவுசு தான் போல!
நெல் கொள்முதல் நிலையங்களில் கிலோவுக்கு 50 பைசா கமிஷன் : பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜன் மதுரையில் பேச்சு.
மதுரை திருமங்கலத்தில் பாஜக விவசாய அணி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விவசாய அணி மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.தேவர், செயற்குழு உறுப்பினர் செந்தூர் பாண்டியன், பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார், விவசாய அணி மதுரை மாநகர் மாவட்ட தலைவர் துரைபாஸ்கர், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ரத்தினசாமி மற்றும் சுரேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார். பின்னர் அவர் பேசுகையில்:- நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு கிலோவுக்கு 50 பைசா கமிஷன் கொடுத்தால்தான் நெல்லை விற்கும் சூழ்நிலை உள்ளது. உரிய சேமிப்பு கிடங்கு இல்லாமல் லட்சக்கணக்கான டன் நெல்மணிகள் மழையினால் வீணாகிறது. மத்திய அரசின் விவசாய திட்டங்களை விவசாயிகளுக்கு கொண்டு செல்ல மாநில அரசு சுணக்கம் காட்டுகிறது.
தமிழக வேளாண் பட்ஜெட் வெறும் கண்துடைப்பு தான். இந்த பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வாசனை திரவியம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.
தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர். பிச்சைவேல் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை கோச்சடை டோக் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கா.கவியரசு, மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில் மாநில மகளிரணி துணைச் செயலாளர் ஷர்மிளா பானு, ஆசிரியர் மாணிக்கராஜ், ராமன்,ஜெகநாதன், முருகேசபாண்டியன் ,உமா மகேஸ்வரி விஜயா, பவர்.ராஜேந்திரன், விஜயராஜா, சின்னச்சாமி, அனிதா ரூபி, இளமி.நாச்சியம்மாள், இன்சூரன்ஸ் ராஜா, மணிகண்ட பிரபு, பிரகாஷ், முருகேசன், சிவதிருமாறன், அசாருதீன், சுமதி, திவ்யபாரதி, ஜெயபாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்