இரவில் பொதுமக்களை பேருந்தில் திருச்சி கரூர் கோவை திருப்பூர் போன்ற இடங்களில் ஏற்ற மறுக்கும் போக்குவரத்து கழக பேருந்துகள் சிறைபிடிக்கும் போராட்டம் சம்பந்தமாக அமைதி பேச்சு வார்த்தை குளித்தலை தாலுகா அலுவலகத்தில் 11/10/2019 மாலை 4 மணிமுதல் 6 மணிவரை நடை பெற்றது.குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாகவும் சமூக அக்கறை உள்ள அரசியல் கட்சி நண்பர்கள்.சமூக ஆர்வலர்கள் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கலந்து …
Read More »மாமல்லபுரத்தில் வேட்டி சட்டையில் ஜின்பிங்கை வரவேற்ற மோடி
சீன அதிபரை வரவேற்க தமிழக பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் மோடி வருகை. மாமல்லபுரத்தில் அர்ஜுனன் தபசு பகுதியில் சீன அதிபரை பிரதமர் மோடி தற்போது அழைத்துச் செல்கிறார். தமிழர்களின் சிற்பக் கலையை அதிசயத்துடன் ரசித்து பார்க்கிறார் கன அதிபர், இதை அடுத்து ஐந்து ரதம் பகுதிக்கு இருவரும் செல்கி றார்கள். மாமல்லபுரத்தில் அர்ஜுனன் தபசு பகுதியில் சீன அதிபரை பிரதமர் மோடி தற்போது அழைத்துச் செல்கிறார். தமிழர்களின் சிற்பக் கலையை அதிசயத்துடன் …
Read More »திரு சேதுபதி ஆசிரியர் அவர்கள் கடந்த ஞாயிறு 06/10/2019 காலை ஏழு முப்பது மணி அளவில் இறைவனடி சேர்ந்தார்.
திரு சேதுபதி ஆசிரியர் அவர்கள் கடந்த ஞாயிறு 06/10/2019 காலை ஏழு முப்பது மணி அளவில் இறைவனடி சேர்ந்தார். வருகிற 16/10/2019 அன்று காரியம் கரூரில் உள்ள நாயுடு மஹாஜன் மண்டபம் (மேட்டுதெரு ) நடைபெறும் என்பதை அவர்களது மகன்கள் திரு. ஐயப்பன் மற்றும் தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் நகர செயலாளர் திரு.லோகேஷ் அவர்கள் இளைஞர் குரல் வாயிலாக ஆசிரிய பெருமக்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
Read More »வைகோ எம்பி அவர்கள் கீழடி அகழ்வாராய்ச்சி பகுதியில்….
வைகோ எம்பி அவர்கள் கீழடி அகழ்வாராய்ச்சி பகுதியில் கீழடி ஆய்வுக்காக 5 ஏக்கர் நிலம் வழங்கிய தமிழ் மூதாட்டி முத்துலட்சுமி அவர்களுக்கு தலைவர் வைகோ அவர்கள் நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். முத்துலெட்சுமி மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.
Read More »திருக்குறள்
திருக்குறள் (அதிகாரம்:ஆள்வினையுடைமை குறள் எண்:619) தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் பொழிப்பு (மு வரதராசன்): ஊழின் காரணத்தால் ஒரு செயல் முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும். மணக்குடவர் உரை: புண்ணியம் இன்மையால் ஆக்கம் இல்லையாயினும் ஒருவினையின் கண்ணே முயல்வானாயின் முயற்சி தன்னுடம்பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன் கொடுக்கும். இது புண்ணியமில்லையாயினும் பயன் கொடுக்கும் என்றது. பரிமேலழகர் உரை: தெய்வத்தான் ஆகாது எனினும் – …
Read More »பாண்டியாவின் இடத்தை பிடிக்க இருக்கும் 3 வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் இவர்கள் தான் – விவரம் இதோ
இந்திய அணியின் இளம் முன்னணி ஆல்ரவுண்டர் ஆன ஹார்டிக் பாண்டியா கடந்த செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது முதுகு பகுதியில் காயமடைந்தார். அதன் பிறகு சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் அணிக்கு திரும்பிய பாண்டியா அவ்வப்போது முதுகு வலியால் பாதிக்கப்பட்டார். எனவே அவர் தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இருந்தும் முதுகுவலி காரணமாக பாண்டியா விலகினார். இதனை அடுத்து முதுகு வலியின் தீர்வினை காண அவர் …
Read More »TNYP FB Live
அரசு பேருந்தும் A V S கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது
இன்று காலை 8.45 மணியளவில் அரசு பேருந்தும் A V S கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 22 கல்லூரி மாணவர்கள் உட்பட 30 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதில் 26 பேர் லேசான காயங்களுடனும், 4 பேர் பலத்த காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர் குரல் செய்திகளுக்காக காரிப்பட்டியிலிருந்து விமல்குமார்.
Read More »லைசென்ஸும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்…போலீசும் அபராதம் விதிக்கமாட்டாங்க..சூப்பர் இ-பைக் அறிமுகம்!
பெனெல்லி லியோன்சினோ 250 பைக் அறிமுகம்! இந்த இ-பைக்கில் பயணிப்பதற்கு ஹெல்மெட், லைசென்ஸ், பதிவெண் என எதையுமே வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்தியாவில் அறிமுகமானது சூப்பர் இ-பைக். கூடுதல் தகவலை கீழே காணலாம். குஜராத் மாநிலம், அஹமதாபாத் நகரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன தயாரிப்பு நிறுவனமான கிரீன்வோல்ட் மொபிலிட்டி நிறுவனம், அதன் புத்தம் புதிய மின்சார வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் தயாரிக்கும் …
Read More »வாரச்சந்தை குறுக்கே செல்லும் கழிவுநீர் வாய்க்கால் தரைப் பாலம் அருகே தேக்கம்
சின்னசேலம் வாரச்சந்தை குறுக்கே செல்லும் கழிவுநீர் வாய்க்கால் தரைப் பாலம் அருகே தேக்கம் ஏற்பட்டுள்ளது. அதை நீக்காமல் கால்வாயை கரையை உடைத்து நீரை சந்தையின் உள்ளே திருப்பி விடப்பட்டுள்ளது. சந்தை சேரும் சகதியுமாய் கடும் சுகாதாரக்கேடு உருவாகி நோய் பரவும் நிலை உருவாகியுள்ளது. இதை பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளுமா? அல்லது கை விடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இப்படிக்கு இளைஞர் குரல்
Read More »