சென்னை : தாம்பரம் – விழுப்புரம் இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லாத பயணியர் ரயில்கள், வரும் 16ம் தேதி முதல் தினமும் இயக்கப்பட உள்ளன. கொரோனா பாதிப்புக்கு பின், தாம்பரம் – விழுப்புரம் இடையே, முன்பதிவு இல்லாத பயணியர் ரயில்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் வாரம் ஆறு நாட்களுக்கு இயக்கப்படுகின்றன. பயணியரின் கோரிக்கையை ஏற்று, தாம்பரம் – விழுப்புரம் பயணியர் ரயில் வரும் 16ம் தேதி முதல்; விழுப்புரம் …
Read More »முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு.. அனைவரும் மாஸ்க் அணிய வேண்டுகோள்!!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா (Coronavirus) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்” என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44 வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் …
Read More »ஜெயலலிதா சொத்துகளுக்கு குறி… காளான் போல முளைக்கும் புதுப்புது உறவுகள்! இதுவரை நடந்தது என்ன?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகள் ஜெ.தீபக் மற்றும் ஜெ.தீபா ஆகியோரை மட்டுமே ஜெயலலிதாவின் முறையான வாரிசுகளாக அறிவித்து சென்னை உயர்நீதிமன்றம் 2020ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் வாசுதேவன் அந்த மனுவில் கூறியிருந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்தில் தனக்கு பங்கு கோரி கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த முதியவர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் மறைந்த ஜெயலலிதாவின் …
Read More »விழுப்புரத்தில் சுதந்திர போராட்ட வீரர் படத்திற்கு அமைச்சர் பொன்முடி மரியாதை..!
விழுப்புரத்தில் சுதந்திர போராட்ட வீரர் படத்திற்கு அமைச்சர் பொன்முடி மரியாதை செலுத்தினார். விழுப்புரம் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே விழுப்புரம் காந்திசிலை அருகே நேற்று தமிழக யாதவ மகாசபை, தென்இந்திய யாதவ மகாசபை ஒருங்கிணைந்து சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை குருபூஜையாக கொண்டாடினர். இதில் சிறப்பு விருந்தினராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு அலங்கரித்து …
Read More »ஈரோட்டில் 30 ஆயிரம் விசைத்தறிகள் மீண்டும் இயங்க தொடங்கியது
ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம், அசோகபுரம், மாணிக்கம் பாளையம், லக்காபுரம், சித்தோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் என மொத்தம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இந்த விசைத்தறிகளில் காட்டன் துணி, ரயான் துணி உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் மட்டும் ரயான் துணி உற்பத்தி நடந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி நடந்து வந்தது. …
Read More »கோவில் நுழைவு வாயிலில் நித்தியானந்தாவுக்கு சிலை வைத்து கும்பாபிஷேகம்? – பக்தர்கள் அதிர்ச்சி
கோவிலின் நுழைவு வாயிலில் 18 அடி உயரத்தில் நித்தியானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலை காணப்பட்டது சேதராப்பட்டு, புதுச்சேரி மாநிலம் குருமாம்பேட் அருகே உள்ள பெரம்பையில் நித்தியானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசிய முருகன் கோவில் போல் இங்கு ஒரு கோவிலைக் கட்டி வந்தார். இந்த கோவிலில் 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு ஸ்ரீ பத்துமலை முருகன் ஆலயம் என பெயரிடப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. …
Read More »மடத்துக்குளம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் காரத்தொழுவு கணியூர் சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் மழை பொழிகிறது வாகன ஒட்டிகள் அவதி இருசக்கார வாகனத்தில் செல்வோர் சாலை ஓரம் ஒதுங்கி நிற்கின்றனர்
Read More »திருப்பூர் மாவட்டத்தில் தொடரும் ஆபத்து..!
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது கண்காணிப்பில் இருப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 21 பேர் தொற்றினால் இருந்து மீண்டனர். தொடர்ந்து தினசரி பாதிப்பு 20ஐ கடந்த பதிவாகதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 150-லிருந்து 162 ஆக பதிவாகியுள்ளது
Read More »தங்கம் விலை திடீர் சரிவு!! சவரனுக்கு ரூ.72 குறைவு!
இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,680க்கு விற்பனையாகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு குறைந்து, ரூ.63.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Read More »கல்லணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்:-
ஜூலை 11, கல்லணையில் குவிந்த சுற்றுலா பயணிகள், தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி: விடுமுறை நாளையொட்டி நேற்று கல்லணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் காவிரியில் குளித்து மகிழ்ந்தனர். கல்லணை தஞ்சை மாவட்டத்தில் சுற்றுலா தலமான கல்லணையில் நேற்று விடுமுறை நாளையொட்டி கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் தனது குழந்தைகளுடன் கல்லணையை பார்க்க குவிந்தனர். மாலையில் கல்லணை பாலம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட …
Read More »