Wednesday , June 7 2023
Breaking News
Home / தமிழகம் (page 3)

தமிழகம்

நடிகர் அஜித்தின் தந்தை உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!

நடிகர் அஜித்தின் தந்தை உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை, தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் ( வயது 86) நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை 3:15 மணியளவில் …

Read More »

பா.ஜ.க.வை வீழ்த்த மாற்று அணியை உருவாக்க வேண்டும்: சீமான்

பா.ஜ.க.வை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகள் ஒன்றிணைந்து மாற்று அணியை உருவாக்க வேண்டும். திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது , ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். வருகிற நாடளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தனித்து தான் போட்டியிடுவோம். எங்களது தலைமையில் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் வருவார்களா? என்பதை இப்போது கூற முடியாது. பிரதமரை விமர்சிக்கவே கூடாதா?. …

Read More »

ஆன்லைன் தடை மசோதா இன்று கவர்னருக்கு அனுப்பி வைப்பு?

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா அனைத்துக்கட்சி ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒரு மனதாக சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. சென்னை, ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமானவர்கள் பணத்தை இழந்து, தங்கள் வாழ்வை மாய்த்து வருகிறார்கள். எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தமிழக சட்டசபையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி …

Read More »

இந்திய தேசிய காங்கிரஸ் போராட்டம்: தமிழ்நாடு

“ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை”என்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டம்…. காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தில் பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. மோடி பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசிய வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என குஜராத் சூரத் நீதிமன்றம் …

Read More »

அரவக்குறிச்சியின் ஆரோக்கியம் வழக்கறிஞர் பஜ்லுள் ஹக்…

*அரவக்குறிச்சியின் ஆரோக்கியம் வழக்கறிஞர் பஜ்லுள் ஹக்* நான் கண்டு வியந்தவர்களில் அவரும் ஒருவர். 20 ஆண்டுகளுக்கு முன் பார்த்த அதே தோற்றம் என்றும் இளமையும் சுறுசுறுப்பும் அழகை அதிகரிக்கும் அழகே அவரின் ஆரோக்கியம். பல்வேறு தேவைகளுக்காகவும் பொது நலனுக்காகவும் அவரை சந்திக்க செல்வோம். இலவசமாக செய்து கொடுப்பார், நண்பர் அப்துல் ஹமீது ஹஸனி காசிமிஅறிமுகம் செய்து வைத்தார். அன்றிலிருந்து எங்கள் நட்பு தொடர்கிறது. நமது மதரஸாவின் முறைப்படுத்த வேண்டும் என …

Read More »

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் – ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். “அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார்” அதிமுகவின் புதிய விதிகள் செல்லாது, எம்ஜிஆர் வகுத்த அதிமுக விதிகள் தான் செல்லும் என தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கு, சென்னை …

Read More »

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு..!

வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.1 ரூபாய் 40 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் சற்று குறைந்து, அதன் பின்னர் ‘கிடுகிடு’வென அதிகரித்தது. அதன்படி, கடந்த 19-ந் தேதி ஒரு பவுன் ரூ.44 ஆயிரத்து 480-க்கு உயர்ந்து, வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. உலக சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதன் காரணமாக விலை ஏற்றத்துடன் இருப்பதாக கூறப்பட்டது. இ ந்த நிலையில் தொடர்ந்து …

Read More »

தமிழகத்தில் ஆணவக்கொலை சம்பவங்கள்: உரிய நடவக்கை எடுக்கப்படும்… சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் உறுதி

சமூக நீதி காக்கும் மண்ணாக தமிழகம் இருந்து வருகிறது என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறினார். சென்னை, கிருஷ்ணகிரி ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். எடப்பாடி பழனிசாமியின் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். இதுகுறித்து முதல் அமைச்சர் கூறும்போது, கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் ஜெகனை பெண்ணின் தந்தை உட்பட …

Read More »

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது. சென்னை, தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் கடந்த 20-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று உகாதி என்பதால் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இன்று காலை சட்டசபை தொடங்கியதும் …

Read More »

கொரோனா அதிகரிப்பு – பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை…!

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். புதுடெல்லி, இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1000க்கும் கீழ் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் 1000ஐ தாண்டி பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக பிரதமர் மோடி இன்று மாலை …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES