அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில்.பன்னீர் செல்வம் மனுக்கள் தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. சென்னை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு தலைமையிலான அமர்வு விசாரித்தது. ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். …
Read More »திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்காணிக்கை நகைகளை உருக்குவதற்காகபிற உலோகத்தை பிரித்தெடுக்கும் பணி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காணிக்கை நகைகளை உருக்குவதற்காக பிற உலோகத்தை பிரித்தெடுக்கும் பணி தொடங்கியது. திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகளை உருக்குவதற்கு வசதியாக பிற உலோகங்களை பிரித்தெடுக்கும் பணி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தொடங்கியது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் உபயமாகவும், உண்டியல் காணிக்கையாகவும் செலுத்திய தங்க நகைகள் பயன்பாடற்று இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. தமிழக இந்து சமய …
Read More »சென்னை: கே.கே.நகர் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி
சென்னை கே.கே. நகரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. சென்னை, சென்னை கே.கே. நகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் இன்று கொள்ளை முயற்சி நடந்துள்ளது. கல்லை வைத்து ஏடிஎம் இயந்திரத்தை முழுமையாக உடைக்க முடியாததால் கொள்ளை முயற்சி தோல்வியடைந்துள்ளது. கொள்ளை முயற்சியின் போது ஆந்திராவில் உள்ள ஏடிஎம் கட்டுப்பாட்டு மையத்தில் அலாரம் ஒலித்ததால் உடனடியாக சென்னை போலீசாருக்கு அதிகாரிகள் தகவல் கொடுத்துள்ளனர். தகவல் கிடைத்த …
Read More »நடுவானில் பயணிக்கு திடீர் நெஞ்சு வலி – சென்னையில் விமானம் அவரசமாக தரையிறக்கம்
விமானத்தில் நடுவானில் பயணிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால், விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது. சென்னை, அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் நடுவானில் பயணிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால், விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது. நியூயார்க்கில் இருந்து 318 பயணிகளுடன் சென்ற அந்த விமானத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த கென்னடி என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, சென்னை விமான நிலையத்தில் …
Read More »“மின் கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்?” – சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
மின் கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். சென்னை, சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி எதற்காக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது என கேள்வி எழுப்பினார். இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்து பேசினார். சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:- கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 84% அளவுக்கு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது …
Read More »குரூப்-4 தேர்வு புகார் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
குரூப்-4 தேர்வு புகார் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். சென்னை, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அரசு நிர்வாகம் முறையாக நடைபெற வேண்டுமானால், அதற்கு அடித்தளமாக விளங்குபவர்கள் அரசுப் பணியாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. மக்களுக்குத் தேவையான சான்றிதழ்களை வழங்குவது, பேரிடர் காலத்தில் மீட்பு, நிவாரணம், மறுவாழ்வு போன்ற பணிகளை மேற்கொள்வது, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, உணவுப் பொருட்களை …
Read More »இன்று கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் இளம் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களின் தகுதி நீக்கத்தை கண்டித்தும் அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறவும் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் லைட் ஹவுஸ் கார்னர் காந்தி சிலை முன்பு மாபெரும் சத்தியாகிரக அறப்போராட்டம்….
இன்று கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் இளம் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களின் தகுதி நீக்கத்தை கண்டித்தும் அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறவும் தேசிய தலைவர் திரு மல்லிகார்ஜுன கார்கே அவர்களின் அறிவிப்பு படி மாநில தலைவர் திரு கே. எஸ் அழகிரி அவர்களின் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் லைட் ஹவுஸ் கார்னர் காந்தி சிலை முன்பு மாபெரும் …
Read More »அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்த வழக்கில் விரைவில் தீர்ப்பு…
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். சென்னை, அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளை நீதிபதி கே.குமரேஷ்பாபு கடந்த புதன்கிழமை விசாரித்தார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என்று இருதரப்பிலும் மூத்த வக்கீல்கள் பலர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து …
Read More »பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் குறித்து சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் குறித்து சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்தார். சென்னை, தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்கள் ஆப்சென்ட் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்து பேசினார். சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது:- கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் …
Read More »பூட்டுலேயே சாவியை மறந்து வைத்து சென்றதால் வீடு புகுந்து தங்க மோதிரம், வெள்ளி திருட்டு
பூட்டுலேயே சாவியை மறந்து வைத்து சென்றதால் வீடு புகுந்து தங்க மோதிரம் மற்றும் வெள்ளியை மர்மநபர்கள் திருடி சென்றனர். சென்னை, சென்னை திருவொற்றியூர் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 42). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சசிகலா. இவர், திருவொற்றியூர் பூந்தோட்ட சாலையில் உள்ள கடைக்கு செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சாவியை மறந்துபோய் பூட்டுலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டார். பின்னர் இரவில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, …
Read More »