ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 15 ஆம் தேதி நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான கொரோனா தொற்றுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் …
Read More »பேராசிரியர் எஸ்.நீலகண்டன் அவர்கள் மறைவு…
கரூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவர். தனது அறிவால் ,கடின உழைப்பால் மிகச்சிறந்த உயரங்களை அடைந்தவர்.கரூரின் பெருமைமிகு அடையாளம்.சென்னை MIDSஇன் முன்னாள் இயக்குனர், பாரதிதாசன் பல்கலைக்கழக பொருளாதார துறையின் முன்னால் பேராசிரியர். எழுத்தாளர். ‘ஒரு நகரமும் ஒரு கிராமமும்’ கொங்கு பகுதியில் சமூக மாற்றங்கள் அவரது மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று. அமராவதி ஆற்றுமணல் கொள்ளையைத் தடுக்க நாங்கள் நடத்திய போராட்டத்தின் போது அவரோடு பணியாற்றிய அனுபவம் …
Read More »இந்திய தேசிய காங்கிரஸில் (INC) இணைந்த தருணம் – அரவக்குறிச்சி க.முகமது அலி. (வழக்கறிஞர்).
இன்று (13.02.2021) கரூர் நாடாளுமன்ற உறுப்பினர். செல்வி. ஜோதிமணி அவர்கள். மற்றும் கரூர் மாவட்ட தொழில்நுட்ப அணி தலைவர் அரவக்குறிச்சி. க. பாலமுருகன், அவர்கள் முன்னிலையில் நான் இந்திய தேசிய காங்கிரஸில் (INC) இணைந்த தருணம்.கரூர் மாவட்ட பொருளாளர் திரு மெய்ஞ்ஞானமூர்த்தி அவர்கள் அரவக்குறிச்சி பேரூராட்சி உறுப்பினர் சகோதரி K பஜிலா பானு. அவர்கள்.மற்றும் அரவக்குறிச்சி வட்டார தலைவர். காந்தி அவர்கள். மற்றும் கரூர் எஸ் கே எம் சாகுல் …
Read More »விவசாயம் சார்ந்த எமது மக்களுக்கு இதுவே பொங்கல் பரிசு – ஜோதிமணி எம்.பி
முழுவதும் விவசாயம் சார்ந்த எமது மக்களுக்கு இதுவே பொங்கல் பரிசு என ஜோதிமணி எம்.பி ட்வீட். பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வாய்த்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை கரும்புடன் ரூ. 1000 வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல்வரின் உத்தரவுக்கு நன்றி தெரிவித்து ஜோதிமணி எம்.பி ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘பொங்கல் தொகுப்பில் …
Read More »பாசிச சக்திகளை வீழ்த்துவோம். இந்தியாவை மீட்டெடுப்போம் – கசடற – 17 – வாழ்த்துக்கள் ராகுல்…
நீங்கள் ஒரு நாட்டின் மன்னர். உங்கள் நாடு அடிமைப்பட்டு விட்டது. ஆனால் நீங்கள் சரணடைய மறுக்கிறீர்கள். நீங்கள் மிகவும் நேசிக்கும் நாட்டு மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் எதிரியோ மிக மிக வலுவானவன். உங்கள் படைகளை உடைக்கிறான். உங்கள் தளபதிகளை விலைக்கு வாங்குகிறான். உங்கள் விசுவாசிகளை மிரட்டி கடத்துகிறான். உங்களுக்கு ஆயுதங்கள் கிடைக்காமல் செய்கிறான். கிட்டத்தட்ட உங்களால் போர் நடத்த முடியாத வகையில் நீங்கள் முடக்கப்படுகிறீர்கள். இப்போது உங்கள் முன் இருப்பது …
Read More »கரூர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவராக கே. சந்தோஷ் குமார் நியமனம்…
கரூர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்ட கே. சந்தோஷ் குமார் அவர்கள் நேற்று மாலை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய ஜோதிமணி எம்பி அவர்களை கரூரில் அவர்களது நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கியும் வாழ்த்துக்களை பெற்றபோது உடன் கரூர் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் மெய்யான மூர்த்தி அவர்களும் கரூர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் அண்ணன் கடவூர் குமார் அவர்களும் மலையாண்டி கடவூர் …
Read More »நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. ஜோதிமணி அவர்கள் முருங்கை கண்காட்சியைப் பார்வையிட்டார்.
நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. ஜோதிமணி அவர்கள் முருங்கை கண்காட்சியைப் பார்வையிட்டார்.
Read More »காங்கிரஸ் கட்சியின் தலைவராக மதிப்பிற்குரிய திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் பதவியேற்பு…
இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவராக மதிப்பிற்குரிய திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள், மதிப்பிற்குரிய அன்னை திருமிகு. சோனியா காந்தி,தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் முன்னிலையில் பதவியேற்ற நிகழ்வில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் குழு உறுப்பினர், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. செ. ஜோதிமணி அவர்கள் பங்கேற்றார்.
Read More »பாஜகவின் கலவர அரசியலை மீறி தமிழகம் தொடர்ந்து அமைதிப்பூங்காவாகவே இருக்கும் – ஜோதிமணி, கரூர், எம்.பி
கோவை ஒரு பெருமைக்குறிய தொழில் நகரம். மோடியின் மோசமான ஆட்சியில் தொழில்கள் சிதைந்து விட்டன. லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, மதவெறி பிடித்த, கலவர பாஜக, பொறுப்பற்ற முறையில், கோவையை தீவிரவாத நகரமாக சித்தரிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பொறுப்புமிகுந்த அரசு, குற்றவாளிகளை பிடிக்க விரைந்து செயல்பட்டுள்ளது. முறையான,விரைவான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் பாஜக …
Read More »