Saturday , March 2 2024
Breaking News
Home / வட மாவட்டங்கள்

வட மாவட்டங்கள்

வட மாவட்டங்கள்

மோடியின் கனவு தமிழ்நாட்டில் நிறைவேறாது: கே.எஸ்.அழகிரி உறுதி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி விழாவில் பிரதமர் மோடி திட்டங்களை துவக்கி வைத்து உரையாற்றும் போது வெள்ள பாதிப்புகளில் இருந்து மீள தமிழக மக்களுக்கு துணை நிற்போம் என்று உறுதி வழங்கியிருக்கிறார். வெள்ள சேதத்தை பேரிடராக அறிவித்து தமிழகத்திற்கு நிதி வழங்க பிரதமர் மோடியை நேரிலும், நேற்றைய கூட்டத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். ஒன்றிய குழு வருகை புரிந்து அறிக்கை தாக்கல் செய்ததோடு, நிதியமைச்சர் …

Read More »

தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்: காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (நவ.14) காலை ஒருகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் …

Read More »

திராவிட மாடல் ‘திமுக’ அரசால் சிறப்பிக்கப்பட்ட இடதுசாரி தலைவர் சங்கரய்யா-முதல் தகைசால் தமிழர் விருது!

சென்னை: இந்தியாவின் முதுபெரும் இடதுசாரித் தலைவரான இன்று மறைந்த சங்கரய்யாவுக்கு (வயது 102) தமிழ்நாட்டில் ஆளும் திராவிட மாடல் திமுக அரசு தமது முதலாவது தகைசால் தமிழர் விருது வழங்கி பெருமைப்படுத்தியது. இந்தியாவின் விடுதலைக்காக சிறைவாசம் அனுபவித்தவர் சங்கரய்யா. 95 வயது வரை தமது போராட்ட குணத்தை இடைவிடாது கடைபிடித்தவர். 95 வயதில் ஆணவக் கொலைகளுக்கு எதிரான போராட்ட களத்தில் நின்றவர் சங்கரயா. இன்று வயது முதுமையின் காரணமாக 102 …

Read More »

காஷ்மீர் இந்தியாவில் இருப்பதற்கு காரணமானவர் ஜவஹர்லால் நேரு: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: ஜவஹர்லால் நேருவின் 135வது பிறந்த நாளையொட்டி, கிண்டி கத்திபாராவில் உள்ள அவரது சிலைக்கு அருகே அலங்கரிக்கப்பட்ட படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று நடந்தது. இதில், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, நிர்வாகிகள் கோபண்ணா, விஜய் வசந்த் எம்பி, அசன் மவுலானா எம்எல்ஏ உட்பட பலர் கலந்து கொண்டனர். நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு …

Read More »

தமிழ்நாட்டில் பருவமழையை ஒட்டி 4967 சிறப்பு நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன : அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை : தமிழ்நாட்டில் பருவமழையை ஒட்டி 4967 சிறப்பு நிவாரண முகாம்களும் கடலோர மாவட்டங்களில் 121 நிரந்தர உதவி பல்நோக்கு மையங்களும் தயார் நிலையில் உள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 19 செமீ மழை பெய்துள்ளது என்றும் நாகை. மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது என்றும் அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் அளித்துள்ளார்.

Read More »

அதிரடியாக பறந்த உத்தரவு.. அரசு மருத்துவமனை கேண்டீன்களில் ‘ரெய்டு’.. உணவு பாதுகாப்புத்துறை ஆணை!

சென்னை: அரசு மருத்துவமனைகளில் உள்ள கேண்டீன்களை ஆய்வு செய்ய மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தனியார் உணவக கேண்டீனில் எலி உலாவிய வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் அதிரடி உத்தரவு பறந்துள்ளது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கேண்டீனில் உணவு பொருட்களின் மீது எலி ஓடித் திரிவது போன்ற வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவியது. …

Read More »

ஆளுநருக்கு லாக்.. தேசிய அளவில் பாஜகவிற்கு பெரிய அடியாக மாற போகுது.. ஸ்டாலினின் மாஸ்டர் வியூகம்?

சென்னை: 161 படி ஆளுநர் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயம். அவருக்கு இந்த அவசியம் உள்ளது. பேரறிவாளன் விடுதலையில் இதுதான் நடந்தது. ஆளுநர் இதை செய்ய வில்லை என்றால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும், என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர். என் ரவி மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பதற்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ஆர். என் ரவியின் …

Read More »

ஆட்டோமொபைல் மட்டுமல்ல.. இனி ஐடியிலும் சென்னை கெத்துதான்.. திறக்கப்பட்ட பிரம்மாண்ட ஐடி பார்க்

சென்னை: சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிட்டாலாண்ட்(Capitaland) குழுமம் 50,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் அமைத்துள்ள சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை (International Tech Park) அமைத்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பூங்காவை இன்று திறந்து வைத்தார். ஆட்டோமொபைல் துறையில் டாப்பில் இருக்கும் தமிழ்நாடு தற்போது ஐடி துறையிலும் பாய்ச்சலை நிகழ்த்த தொடங்கி உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று …

Read More »

‘பெண்ணை தாக்கி நகை பறித்த பா.ஜ.க பிரமுகருக்கு 7 ஆண்டு சிறை’ நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

விழுப்புரம் : விழுப்புரம் அருகே உள்ள மரகதபுரம் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவருடைய மனைவி கலையரசி (35). இவர் கடந்த 8.4.2021 அன்று செஞ்சியில் உள்ள தன் தாய் வீட்டுக்குக் கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் சென்றுள்ளார்.Crime அப்போது வழியில் கலையரசி தன் குழந்தையின் மருந்து சீட்டை மறதியாக வீட்டிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டதாக கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதை எடுப்பதற்காக மரகதபுரத்தில் இருந்து கோவிந்தபுரம் செல்லும் வழியில் கண்டியமடை என்ற இடத்தில் …

Read More »

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.9 முதல் 11ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.9 முதல் 11ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.தீபாவளியை ஒட்டி நவ.9 முதல் 11ம் தேதி வரை சென்னையில் இருந்து இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் 3 நாட்களுக்கு மொத்தம் 10,975 பேருந்துகளும் பிற ஊர்களில் இருந்து 3 நாட்களுக்கு 5,920 என மொத்தமாக 16,895 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES