Saturday , April 1 2023
Breaking News
Home / சினிமா

சினிமா

Cinema

விவாகரத்து வதந்திக்கு விஷ்ணு விஷால் விளக்கம்

தமிழில் வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமான விஷ்ணு விஷால் பிரபல நடிகராக உயர்ந்துள்ளார். அவர் நடிப்பில் வந்த ராட்சசன், எப்.ஐ.ஆர்., கட்டா குஸ்தி படங்கள் நல்ல வசூல் பார்த்தன. தற்போது ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். விஷ்ணு விஷாலுக்கு ஏற்கனவே திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விவாகரத்து செய்து விட்டு ஜுவாலா கட்டாவை 2-வது திருமணம் செய்து கொண்டார். சில …

Read More »

நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வருவேன் – நடிகை சமந்தா

நடிகை சமந்தாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இதனால் புதிய படங்களில் அவர் நடிக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் இந்தி வெப் தொடர் படப்பிடிப்பில் பங்கேற்றார். தெலுங்கில் குஷி படப்பிடிப்பிலும் இணைய இருக்கிறார். கடும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். இதனால் நோய் பாதிப்பில் இருந்து சமந்தா பூரணமாக குணமடைந்து விட்டதாக தகவல் பரவியது. …

Read More »

நடிகர் அஜித்தின் தந்தை உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!

நடிகர் அஜித்தின் தந்தை உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை, தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் ( வயது 86) நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை 3:15 மணியளவில் …

Read More »

நடிகர் அஜித்குமாரின் தந்தை காலமானார்..!

நடிகர் அஜித்குமாரின் தந்தை காலமானார். சென்னை, தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியன் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது (86). மறைந்த சுப்ரமணியத்தின் இறுதிச்சடங்கு பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் …

Read More »

இறுதிகட்டத்தில் படப்பிடிப்பு… ரஜினியின் ஜெயிலர் ரிலீஸ் எப்போது?

ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. ஏற்கனவே சென்னை, மங்களூரு, ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. வசூல் சாதனை நிகழ்த்திய காந்தாரா படப்பிடிப்பு நடந்த பண்ணை வீட்டிலும் முக்கிய காட்சிகளை படமாக்கி உள்ளனர். தற்போது சென்னை அருகே இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்த மாதம் கடைசியில் முழு படப்பிடிப்பையும் முடித்து விடும் முடிவோடு பணிகளை வேகப்படுத்தி உள்ளனர். படப்பிடிப்பு …

Read More »

சந்திரமுகி-2 படத்தில் லாரன்ஸ், கங்கனா தோற்றம் கசிந்தது

ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் 2005-ல் திரைக்கு வந்த சந்திரமுகி படம் பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும் கங்கனா ரணாவத் நாயகியாகவும் நடிக்கின்றனர். லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார், ரவிமரியா, மனோபாலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை பி.வாசு இயக்குகிறார். படவேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு சந்திரமுகி …

Read More »

மாரடைப்பில் இருந்து மீண்ட நடிகை சுஷ்மிதா பெண்களுக்கு அறிவுரை

பிரபல இந்தி நடிகை சுஷ்மிதா சென். இவர் தமிழில் ரட்சகன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். முதல்வன் படத்தில் இடம்பெற்ற சக்கலக்க பேபி பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். சுஷ்மிதா சென்னுக்கு சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு தற்போது சிகிச்சைக்குப்பின் குணமடைந்து இருக்கிறார். இதையடுத்து சுஷ்மிதா சென் கூறும்போது, “பெண்களுக்கும், ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் மாரடைப்பு வராது என்பது உண்மை இல்லை என்பது என் மூலம் நிரூபணமாகியுள்ளது. இதய நாளங்களில் 90 சதவீதம் அடைப்பு …

Read More »

தனுஷ் 45 படத்தில் செல்வராகவனுடன் இணைந்த தனுஷ்: வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்

தனுஷ் அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்து வருகின்றார். அசுரன் படத்தில் இருந்து இடைவெளி விடாமல் நிறைய படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். அசுரன் படத்தை முடித்தபிறகு பட்டாசு படத்தில் நடித்தார் தனுஷ். பட்டாசு படம் வெளியான பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜெகமே தந்திரம் படத்தில் நடித்தார் தனுஷ். அதற்கு அடுத்து டி41 படமான கர்ணன் படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருக்கிறார் தனுஷ். கர்ணன் படத்தின் படப்பிடிப்பு 90% …

Read More »

கொரோனாவால் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்…

ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் 25-வது படமாக உருவாகி வரும் ‘நோ டைம் டூ டை’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனின் ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்டின் ரகசிய குறிப்பெண் 007. ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பல ஆங்கிலத் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. இந்த படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். வசூலிலும் பல்வேறு சாதனைகள் படைக்கிறது.  ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் இதுவரை மொத்தம் …

Read More »

பிக்பாஸ் பிரபலங்கள் நடிக்கும் தலையெழுத்து என்ற படத்திற்கு புதுமுக துணை நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேர்வு

பிக்பாஸ் பிரபலங்கள் நடிக்கும் தலையெழுத்து என்ற படத்திற்கு புதுமுக துணை நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேர்வு செய்ய இருப்பதால் விருப்பமுள்ளவர்கள் 14/02/2020 அன்று காலை 11 AM மணியளவில் சங்ககிரி ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி இந்த வாய்ப்பினை பயன்படுத்துமாறு படக் குழுவினர் இளைஞர் குரல் வாயிலாக தெரிவிக்கிறார்கள். தொடர்புக்கு: 9965557755 / 6379230726 Shree Sathyam Engineering & …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES