ஆண்டு இறுதித் தேர்வு முடிந்ததும், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அடுத்த மாதம்(ஏப்ரல்) 21-ந்தேதி முதல் விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. சென்னை: பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 24-ந்தேதியுடன் நிறைவு பெற உள்ளது. பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 4-ந்தேதி தேர்வு தொடங்கிவிட்டது. அவர்களுக்கு 26-ந்தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. அதேபோல், எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற 27-ந்தேதி தொடங்க உள்ளது. …
Read More »சிறுபான்மை மக்களிடையே எதிர்க்கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது- முதல்வர்…
என்பிஆர் விஷயத்தில் சிறுபான்மை மக்களிடையே எதிர்க்கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை: சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் ஒரு பிரச்சனையை கிளப்பினார். அப்போது அவர் பேசும்போது, சட்டமன்ற மரபின்படி சட்டசபை நடந்து கொண்டிருக்கும்போது புதிய …
Read More »சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…
சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல், சவுதி அரேபியா கச்சா எண்ணெய் விலையை கணிசமாக குறைத்தது போன்ற காரணங்களால் கச்சா …
Read More »ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்…
எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சென்னை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட அதிமுகவை சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். 11 பேரையும் …
Read More »கொரோனா அச்சம் ; சென்னையில் 10 விமானங்கள் ரத்து…
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சென்னையில் இருந்து செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை, சீனாவின் உகான் மாகாணத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியா உள்ளிட்ட ஏராளமான உலக நாடுகளையும் மிரட்டி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் 39 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சென்னையில் 10 விமானங்கள் …
Read More »பேராசிரியர் க. அன்பழகன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி…
பேராசிரியர் க.அன்பழகன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய பேராசிரியர் க.அன்பழகன், நள்ளிரவு 1.10 மணி அளவில் மரணம் அடைந்தார். அன்பழகன் மரணம் அடைந்ததை அறிந்ததும் மு.க.ஸ்டாலின் கண்ணீர் சிந்தினார். ஆஸ்பத்திரிக்கு வந்த தி.மு.க. நிர்வாகிகள் துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டனர். அதனை தொடர்ந்து க.அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. …
Read More »ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம்- ரஜினிகாந்த்….
சென்னையில் இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்ததில் ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தியில்லை, ஏமாற்றமே என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் இன்று மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார். இதில் 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். இந்த சந்திப்பின்போது அரசியல் கட்சி பெயர் முடிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் சந்திப்பு கூட்டம் முடிந்து ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் …
Read More »கள்ளக்குறிச்சி, அரியலூர் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு…
கள்ளக்குறிச்சி, அரியலூர் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 24 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில், 3,350 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கின்றன. திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய 9 இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது. அதையடுத்து தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் …
Read More »பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த நாகை சிறுமி குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி – எடப்பாடி பழனிசாமி உத்தரவு…
பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த நாகை சிறுமி குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாகை மாவட்டத்தை சேர்ந்த சிறுமி இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றவர், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு பலத்த காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த கொடூர செயலுக்கு காரணமான …
Read More »பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் – பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அறிவிப்பு
பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க 31 அதிகாரிகள் நியமித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அறிவித்துள்ளார். சென்னை, தமிழகப் பள்ளிக் கல்வியில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் 2-ல்தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது வரை நடைபெற்று வருகின்றன. அதன்படி அறை கண்காணிப்பாளர், பறக்கும் படை அதிகாரிகள் உட்பட பொதுத்தேர்வு பணிகளுக்கு அனைத்துவித பள்ளிகளில் இருந்தும் ஆசிரியர்கள் தேர்வு …
Read More »