Monday , August 15 2022
Breaking News
Home / தென் மாவட்டங்கள் / திண்டுக்கல்

திண்டுக்கல்

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே கார் விபத்து…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவைச் சேர்ந்த (கல்வார்பட்டி செக் போஸ்ட் அருகே) காசிபாளையம் அருகே நான்கு சக்கர வாகன விபத்து வாகன ஓட்டுனரின் கவன குறைவால் பாலத்தின் கீழே விழுந்தது. காரில் பயணித்தவர்கள் உயிருக்கு சேதம் இல்லாமல் தப்பித்தனர். வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டியது முக்கியமான ஒன்று. தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது சர்வீஸ் ரோடு பிரியும் இடத்தில் மிக கவனமாக செல்ல வேண்டியது ஓட்டுநரின் கடமையாகும். …

Read More »

குழந்தை திருமணங்களில் திண்டுக்கல் முதலிடம்

திண்டுக்கல் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு பயிற்சியாளர் பெலிக்ஸ் ஜெயக்குமார் பேசுகையில், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் குழந்தை திருமணம் அதிகம் நடப்பதில் திண்டுக்கல் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. பாலியல் துன்புறுத்தல் தடை நிவர்த்தி சட்டம் 2013ன்படி அமைக்கப்பட வேண்டிய குழு குறித்து கலந்தாய்வு …

Read More »

ரயில் மோதி மாணவன் பலி

திண்டுக்கல் அருகே ரயில் மோதி மாணவன் பலியானார். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள சி. அம்மாபட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் ஜெகன் (வயது 17). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று இரவு அதே பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ரெயில் மோதி உடல் சிதறி பலியானார். இது குறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் …

Read More »

ரயில் மோதி முதியவர் ஒருவர் பலி – இறந்தவர் யார் என கொடைரோடு ரயில்வே போலீசார் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு இருப்பு பாதை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொடைரோடு அருகே பாண்டியராஜபுரம் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் திண்டுக்கல்லில் இருந்து மதுரை மார்க்கமாக சென்ற ஏதோ ஒரு ரயில் வண்டியில் அடிபட்டு உடல் முழுவதும் சிதைந்தும் தலைப்பகுதி முழுவதும் நசுங்கி நொறுங்கி உள்ள நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் யார் என தெரியவில்லை இவரது இடது கையில் N. மூர்த்தி என்று …

Read More »

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று.

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 23 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37594 ஆக உள்ளது. இதில் இன்று 11 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக 36852 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் கொரோனாவுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்து உள்ளது. இது தவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 665 ஆக உள்ளது. கொரோனா தொற்றால் …

Read More »

இனி ஒட்டன்சத்திரத்திலும்
ஒரு அரசு கலைக் கல்லூரி
காணொளி மூலம் திறந்து வைத்தார் முதல்வர்

ஒட்டன்சத்திரம் மேட்டுப்பட்டியில் உயர் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட அரசு கலைக்கல்லுாரியை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கல்லுாரியில் நடைபெற்ற விழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி குத்துவிளக்கேற்றி கல்லூரி செயல்பாடுகளை தொடங்கி வைத்து பேசியதாவது: ஓராண்டில் 31 கல்லுாரிகளை தொடங்கிய பெருமை முதல்வர் ஸ்டாலினையே சாறும். இக்கல்லுாரி தற்காலிகமாக மேட்டுப்பட்டி ஊராட்சியில் செயல்படும். அடுத்த ஆண்டு முதல் கள்ளிமந்தையம் அருகே சொந்த கட்டடத்தில் …

Read More »

தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 100 பேருக்கு தலா 5 ஆடுகள் வழங்கும் விழா நடந்தது

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டில் தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 100 பேருக்கு தலா 5 ஆடுகள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு வேடசந்தூர் எம். எல். ஏ. எஸ். காந்திராஜன் தலைமை தாங்கி, 100 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: – ஏழை-எளிய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். அழகாபுரியில் உள்ள குடகனாறு …

Read More »

பெண் குழந்தை
பெற்றெடுத்தது ஒரு குற்றமா?
மனைவியை விரட்டி அடித்த கணவன்

பெண் குழந்தை பிறந்த காரணத்தால்கட்டிய மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றிய போடி இளைஞர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திக் கொண்டு வருகிறதுஇரண்டு ஆண்டிற்கு முன்பு திண்டுக்கல் மாவட்டத்தில்அருகிலுள்ள போடி அருகே இருக்கும் டி.சிந்தலைச்சேரியை சேர்ந்த மெர்சிலின் கிரிஜா என்ற 22 வயது பெண் அதேபகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்ற 29 வயது ஆணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது …

Read More »

வாய்ப்பாட்டில் கலக்கும் நான்காம் வகுப்பு மாணவன் இடம்: ஒட்டன்சத்திரம் அரசு நடுநிலைப்பள்ளி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ளது கோட்டைப்பட்டி கிராமம் இக்கிராமத்தில் ஒன்று முதல் 10 வரையிலான அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் என இருபாலரும் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் ஸ்ரீஹரிஹரன் வயது 9 என்ற மாணவன் 2 முதல் 10 வரையிலான அந்த வாய்ப்பாட்டை 60 நொடிகள் ஆன …

Read More »

ஆரம்பிக்கலாமா திண்டுக்கல்லுக்கு மீண்டும் வரும் கொரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக 16 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37571 ஆக உள்ளது. இதில் இன்று 8 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக 36841 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் கொரோனாவுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்து உள்ளது. இது தவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 665 ஆக உள்ளது. கொரோனா …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES