மன அழுத்தம் காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் இந்திய இளம் தலைமுறையினர் மத்தியில் இதய நோய்கள் 200% அதிகரித்துள்ளது என மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் ● உலகின் மக்கள் தொகையில் 20%-க்கும் குறைவானதாக இருக்கின்ற போதிலும் உலகின் இதய நோய் சுமையில் 50% பங்கை இந்தியா கொண்டிருக்கிறது. இந்திய குடிமக்களின் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, மனஅழுத்தம், சுற்றுசூழல் மாசு மற்றும் மரபணு அமைப்புகளே இதற்கு காரணம்.● வாழ்க்கை முறை …
Read More »மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு வனவேங்கைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.!
ராஜபாளையம் மற்றும் தேனியில் குறவர் பழங்குடியினர் மீதான காவல்துறையினரின் தாக்குதலை கண்டித்து, வனவேங்கைகள் கட்சி சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் தோழர் முத்து தலைமை வகித்தார்.மாநில பொதுச் செயலாளர் குறிஞ்சி சேகர் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பாலமுருகன், திருநகர் சேகர் உள்பட பலர் பங்கேற்றனர். மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்
Read More »இதயத்தில் துளை ஏற்பட்டு அபாய கட்டத்தில் இருந்த முதியவரின் உயிரைக் காப்பாற்றி திருச்சி அப்போலோ மருத்துவர்கள் சாதனை.!
இதயத்தில் துளை ஏற்பட்டு அபாய கட்டத்தில் இருந்த முதியவரின் உயிரைக் காப்பாற்றி திருச்சி அப்போலோ மருத்துவர்கள் சாதனை திருச்சி, செப் 24: இதயத்தில் துளை ஏற்பட்டு மரணத்தின் விளிம்பு நிலைக்குச் சென்ற முதியவரின் உயிரைக் காப்பாற்றி திருச்சி அப்போலோ மருத்துவமனை இதய நோயியல் துறை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இதில், ஃப்ரீ வால் ரப்சர் எனப்படும் இதயத்தில் துளை ஏற்படும் நிலையானது அரிதான, அதேவேளையில் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய சிக்கலான நிலையாகும். …
Read More »புதிய தொழில் நுட்பங்களின் கண்டுபிடிப்பால் இதய நோய் சிகிச்சை புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது : அப்போலோ மருத்துவமனையின் மூத்த இதய நோய் சிறப்பு நிபுணர் விவேக் போஸ்
புதிய தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்பால்இதய நோய் சிகிச்சை புதிய பரிமாணத்தை எட்டியுள்ளதுஅப்போலோ மருத்துவமனையின் மூத்த இதய நோய் சிறப்பு நிபுணர் விவேக் போஸ் பேட்டி மதுரை, செப் 24: மதுரையில் அப்போலோ மருத்துவமனையின் மூத்த இதயநோய் சிறப்பு நிபுணர் விவேக் போஸ் அவர்கள் தெரிவித்ததாவது: இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் இதய ஆஞ்சியோ சிகிச்சை செய்துகொள்கிறார்கள்.இதயக் குழாய் அடைப்பு உள்ள 70 வயது முதியவர்களைப் பொருத்தவரை சுமார் 90 …
Read More »தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கம் மற்றும் இணைப்பு சங்கங்கள் இணைந்து நடத்திய “லேபிள் மேளா”
மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரி சங்கம் தலைமையில் தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கம் உள்பட ஏனைய இணைப்பு சங்கங்கள் மற்றும் பரிக்ஷன் அமைப்பு இணைந்து நடத்தும் “”லேபிள் மேளா”” சங்க அலுவலகத்தில் நடைபெற்றது இதில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவர் திரு.சக்திவேல் அவர்கள் துவக்கி வைத்தார். உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் திரு.ஜெயராம …
Read More »தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக மதுரையைச் சேர்ந்த பூக்கடை கண்ணன் நியமனம்.!!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக மதுரையைச் சேர்ந்த பூக்கடை கண்ணன் அவர்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒப்புதலின்படி, மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் நியமனம் செய்துள்ளார். இதுகுறித்து புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாநில பொதுக்குழு உறுப்பினர் பூக்கடை கண்ணன் அவர்கள் கூறுகையில்:- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினராக என்னை நியமனம் செய்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தி …
Read More »மதுரை விமான நிலையத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா அவர்களுக்கு, விவசாய அணி மதுரை மாநகர் தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் வரவேற்பு.!!
காரைக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா அவர்களுக்கு, பாஜக விவசாய அணி மதுரை மாநகர் தலைவர் முத்துப்பாண்டி அவர்களின் சார்பாக பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் செந்தூர் பாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளர் துரைபாஸ்கர், மாவட்ட செயலாளர் சுரேஷ்,மாவட்ட திட்டக்குழு பொறுப்பாளர் அழகுராஜா, மாவட்டத் துணைத் தலைவர்கள் இளங்கோ, முனீஸ்,பிலால், பரவை …
Read More »பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் :மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்கள் கோரிக்கை.!!
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் நக்கீரன் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ் மற்றும் போட்டோகிராபர் அஜித்குமார் ஆகியோர் மீது நடந்த கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும், மதுரை மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் …
Read More »சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன் ஜி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.!
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, மத்திய சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி, கிழக்கு மண்டல் 117 வது வட்டத்தில் (தாமஸ் சாலை) உள்ள 5 அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு பாஜக விவசாய அணி மாநில துணைத் தலைவரும், பெருங்கோட்ட பொறுப்பாளருமான வளசை முத்துராமன் ஜி தலைமையில், மாவட்ட தலைவர் ராஜா அன்பழகன் ஏற்பாட்டில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ் எழுத்து பயிற்சி …
Read More »முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்.!
தொடர்ந்து 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்த இவர் 2006-ல் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார். திமுகவில் தேர்தல் பணிக்குழு தலைவராக பணியாற்றி வந்தார்.உயிரிழந்த சேடப்பட்டி முத்தையாவிற்கு சகுந்தலா என்ற மனைவியும், 2 மகள் மற்றும் 2 மகன் உள்ளனர். அவரது சொந்த ஊரான மதுரை, சேடப்பட்டி அருகே உள்ள முத்தப்பன்பட்டியில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. அவரது …
Read More »