Wednesday , August 5 2020
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் – பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அறிவிப்பு

பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க 31 அதிகாரிகள் நியமித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அறிவித்துள்ளார். சென்னை, தமிழகப் பள்ளிக் கல்வியில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் 2-ல்தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது வரை நடைபெற்று வருகின்றன. அதன்படி அறை கண்காணிப்பாளர், பறக்கும் படை அதிகாரிகள் உட்பட பொதுத்தேர்வு பணிகளுக்கு அனைத்துவித பள்ளிகளில் இருந்தும் ஆசிரியர்கள் தேர்வு …

Read More »

அமெரிக்கா-தலீபான்கள் இடையே அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது

கத்தார் தலைநகர் தோகாவில் அமெரிக்கா-தலீபான்கள் இடையே இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. தோகா, ஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாக அந்த நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போர் தொடங்கியதில் இருந்தே ஆப்கானிஸ்தான் அரசு படைக்கு அமெரிக்க ராணுவம் பக்கபலமாக இருந்து வருகிறது. முடிவில்லாமல் நீண்டு வரும் இந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசின் உதவியோடு தலீபான் பயங்கரவாதிகளுடன் …

Read More »

குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறி போகாது ;அமித்ஷா விளக்கம்

குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறி போகாது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். புதுடெல்லி பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து குடியேறி இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இந்தக் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், குடியுரிமை …

Read More »

பொருந்தலூர் ஊராட்சி 4-வது வார்டுகுட்பட்ட தெலுங்கப்பட்டி காலனி 4வது தெருவில் குடிநீர் இனைப்பு

பொருந்தலூர் ஊராட்சி 4-வது வார்டுகுட்பட்ட தெலுங்கப்பட்டி காலனி 4வது தெருவில் அனுமதியின்றி போடப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணியும் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் புதிதாக மூன்று வீடுகளுக்கு ஒரு குடிநீர் இணைப்பு என்ற முறையில் பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது இது தோகைமலை ஒன்றிய ஜோனல் அதிகாரி & பொருந்தலூர் ஊராட்சி செயலாளர் முன்னிலையிலும் மற்றும் பொருந்தலூர் ஊராட்சி மன்ற தலைவர் அறிவுருத்தலின்படியும். 4-வது வார்டு …

Read More »

எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் ‘திடீர்’ ஆய்வு

எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென ஆய்வு செய்தார். எடப்பாடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் அங்கிருந்து தனது சொந்த தொகுதியான எடப்பாடிக்கு சென்றார். முதலில், எடப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்ற அவர் அங்கு சாமி தரிசனம் செய்தார்.   முன்னதாக எடப்பாடி நகர அ.தி.மு.க. செயலாளர் முருகன், முன்னாள் நகரசபை …

Read More »

டெல்லி வன்முறை : உயிரிழப்பு 17 ஆக அதிகரிப்பு

] குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான டெல்லி போராட்டத்தில் வெடித்த வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. புதுடெல்லி, குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து வருகின்றன. டெல்லியில் நேற்றுமுன்தினம், தொடர்ந்து இரண்டாவது நாளாக குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. வடகிழக்கு டெல்லி கலவர பூமியானது. ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், குரேஜி காஸ், பஜன்புரா பகுதிகள் போர்க்களங்கள் போல …

Read More »

மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்

மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘மாஸ்டர்‘ படத்தில் விஜய் நடித்து வருகிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கின்றனர். சாந்தனு, நாசர், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட மேலும் பலர் உள்ளனர். சென்னை, டெல்லி, கர்நாடகா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.   சமீபத்தில் நெய்வேலியில் முக்கிய காட்சிகளை …

Read More »

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’ பட நிறுவனம் அறிவிப்பு

ரஜினி நடிக்கும் படத்துக்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, தர்பார் படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான சிவா டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 கதாநாயகிகள் நடிக்கின்றனர். பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் ஆகியோரும் உள்ளனர். இது …

Read More »

‘தோல்விக்கு மோசமான பேட்டிங் காரணம்’ – கேப்டன் விராட்கோலி கருத்து

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்விக்கு மோசமான பேட்டிங் காரணமாகும் என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்தார். வெலிங்டன், நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வி கண்ட பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்த டெஸ்ட் போட்டியில் ‘டாஸ்’ மிகவும் முக்கிய பங்கு வகித்தது. ‘டாசை’ இழந்தது நமக்கு பாதகமாக அமைந்தது. பேட்டிங்கில் நாம் சிறப்பாக செயல்படவில்லை. …

Read More »

டெல்லி ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மரியாதை

டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மனைவி மெலனியாவுடன் மரியாதை செலுத்தினார். புதுடெல்லி ஜனாதிபதி  மாளிகைக்கு வருகை தந்த அமெரிக்க ஜனாதிபதி  டிரம்புக்கு  சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.  ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மற்றும் மத்திய அமைச்சர்கள் வரவேற்றனர். டிரம்புக்கு  முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் ராஜ்காட் சென்று  மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் …

Read More »
MyHoster
NKBB TECHNOLOGIES
Open chat
Powered by