Monday , January 25 2021
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

2021 கலாம் டிவி குடும்பத்தினருடன் சிறப்பு புத்தாண்டு நேர்காணல்

Posted by Balamurugan Kandasamy on Thursday, December 31, 2020

ஆசிரியர்களுக்கு புது சிக்கல் – திணறும் மாநகராட்சி!

கொரோனா வைரஸ் தொடர்பான பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளதால் பள்ளிகளுக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி வெள்ளிக்கிழமை முதல் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதாவது 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வித்யகாமா திட்டத்தின் கீழ் தொடர்ச்சியான கற்றலை உறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது …

Read More »

ரஜினியை மீண்டும் எதிர்பார்க்கும் ப.சிதம்பரம்…

ரஜினிகாந்தின் அரசியல் முடிவு குறித்து ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த போது எப்படி தமிழக அரசியல் களம் சூடானாதோ அதே போல் அவர் முடிவை வாபஸ் பெற்றபோதும் பல்வேறு தரப்பிலுருந்தும் கருத்துகள் வந்துகொண்டிருக்கிறது தேர்தல் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என ரஜினிகாந்த் உறுதியாய் அறிவித்துள்ள நிலையில் தம்மால் முடிந்த நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்வேன் என்று தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் இந்த முடிவு குறித்து முன்னாள் மத்திய …

Read More »

சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன்…

நடிகர் ரஜினியிடம் தான் நண்பர் என்ற முறையில் ஆதரவு கேட்பேன் என  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று புதுக்கோட்டையில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அவர், “ரஜினியை சென்னை சென்ற பிறகு சந்திப்பேன். அவர் நலனை விசரிப்பேன். அவர்களின் நலனில் அக்கறை …

Read More »

தமிழக மக்களுக்கு அடுத்த ஹேப்பி நியூஸ் இதோ!

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் அறிவிப்பு தொடர்பாக தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி, ஆளுங்கட்சியான அதிமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த சூழலில் பொங்கல் பரிசுத் தொகையை இரண்டரை மடங்கு அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டது பேசுபொருளாக மாறியது. இது தமிழக மக்களை பெரிதும் ஈர்த்துள்ளது என்றே சொல்லலாம். இருப்பினும் இதற்கான பலன்கள் கிடைக்குமா என்றால் அதனைப் பொறுத்திருந்து …

Read More »

படங்களை நீக்கக்கோரி திமுக மனு!

டோக்களில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களின் படங்கள் மற்றும் அதிமுக கட்சியின் சின்னம் இடம் பெற்றுள்ளது. பொங்கல் பரிசு தொகை 2500 ரூபாய்க்கான டோக்கனில் அதிமுக கட்சி சின்னம் மற்றும் தலைவர்களின் படங்களை நீக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. பொங்கல் பரிசு தொகையாக அரிசி அட்டைத்தாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு …

Read More »

பிரிட்டன் வைரஸ் பற்றி அச்சம் வேண்டாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அலை உருவாகாது; பிரிட்டன் வைரஸ் பற்றி அச்சம் வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிவேகமாக ஜெட் வேகத்தில் பரவிய கொரோனா அரசின் நடவடிக்கையால் அதன் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது. இதனிடையே இங்கிலாந்தில் பரவிய புதிய வகை கொரோனா தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. அரசு பிரிட்டனில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. …

Read More »

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் போராட்டம் ராயக்கோட்டையில்…

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக #தமிழ்நாடு #இளைஞர் #கட்சி சார்பாக மாவட்ட தலைவர் #திருசதீஷ் குமார் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…இதில் வட மேற்கு மண்டல தலைவர் #திருதங்கப்பாண்டி மாவட்ட செயலாளர் #திருமணிகண்டன் சின்னசாமி மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் #திருநிர்குணம் மாவட்ட பொருளாளர் #திருஅனில்குமார் மாவட்ட துணைத் தலைவர் #திருமாதேஷ்குமார் மாவட்ட துணை செயலாளர் #திருகணேசன் மற்றும் மாவட்ட விவசாய …

Read More »

கண்ணாடியால் பால்கனி அமைப்பது பாதுகாப்பானதா? சாய்ந்தாலே சல்லி சல்லியா நொறுங்கிப்போகாதா? பணக்காரர்கள் தேடித்தேடி கட்டமைக்கும் இரகசியம்!

வீட்டுக்கு முன்னால் கண்ணாடி மாட்டினால், கண் திருஷ்டி படாதுன்னு சொல்வாங்க. யாராவது வீட்டுக்குள்ளே நுழைந்த உடனே, கண்ணாடியை பார்த்தால், நமக்கு வரும் கண் திருஷ்டி விலகிவிடுமாம். வீட்டு வரவேற்பு அறையில் கண்ணாடி இருப்பதெல்லாம் ஓல்டு பேஷனாகிவிட்டதால், விதவிதமாக வீட்டை அலங்கரிக்க வெளிப்புறத்திலும் கண்ணாடி பயன்படுத்தப்படுகிறது. ஜன்னல்களில், கதவுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கண்ணாடி, தற்போது கைப்பிடி சுவர்கள் அமைப்பதற்கும் பயன்படுத்தப்படுவதை பார்த்தால் ஆச்சர்யமா இருக்கு. ஒரு காலத்தில் கண்ணாடி என்றாலே …

Read More »

அடிதடி சண்டை; பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் நிறுத்தம் !!

டோக்கன் பெறுவதில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து அனைத்து நடைமுறைகளும் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதாவது ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழுக் கரும்பு, துணிப்பை உடன் …

Read More »

ரஜினிகாந்த் விரைவில் பூரண நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் – ஓ.பன்னீர்செல்வம்..

ரஜினிகாந்தின் ரத்த அழுத்தத்தை பொறுத்து இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த ‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. அண்ணாத்த …

Read More »
NKBB TECHNOLOGIES
Open chat
Welcome to Ilangyar Kural
Powered by