சசிகலா தமிழக எல்லைக்கு வந்த நேரத்தில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனிடம் தமிழக போலீசார் நீங்கள் செல்லும் வாகனங்களில் அதிமுக கொடிகளை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் வழங்கினர்.
தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் சசிகலா பயணிக்கும் கார் வந்த உடன் அதிமுக கொடியை அகற்றக்கோரி காவல்துறையினர் நோட்டீஸ் கொடுத்தனர். இதை தொடர்ந்து வழக்கறிஞர்கள் மற்றும் தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா இன்று தமிழகம் திரும்பினார். சசிகலாவிற்கு அதிமுக தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளரகள் பலர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
சசிகலா தமிழக எல்லைக்கு வந்த நேரத்தில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனிடம் தமிழக போலீசார் நீங்கள் செல்லும் வாகனங்களில் அதிமுக கொடிகளை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் வழங்கினர்.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ராஜா செந்தூர்பாண்டியன் தரப்பினர் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எனவே அதிமுக கொடியை பயன்படுத்த போலீசார் எந்த தடையும் விதிக்கக்கூடாது என்று தெரிவித்தனர்.
இதனையடுத்து சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனிடம் போலீசார் எழுதி கொடுங்கள் என கேட்டனர். இதனையடுத்து அவரிடம் எழுதி வாங்கி சீல் வைத்து அதனை பெற்றுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து சசிகலா மாநில எல்லையை கடந்து ஒசூரிலுள்ள அடுத்த வரவேற்பு இடத்துக்கு வாகனத்தில் செல்கிறார்